மத்திய கிழக்கு

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் – பாலஸ்தீனிய ஆயுதக்குழுவினர் ஐவர் பலி

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவ வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா முனையை ஹமாஸ் அமைப்பு ஆட்சி செய்கிறது. இந்த அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக கருதுகிறது. ஹமாஸ் அமைப்பை போன்று மேலும் சில ஆயுதமேந்திய குழுக்கள் காசா முனை, மேற்குகரையில் செயல்பட்டு வருகின்றன. அதேவேளை பாலஸ்தீனத்திற்கு மேற்கு கரையில் முகமது அப்பாஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.

மேற்குகரையின் சில பகுதிகள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த பகுதிகளில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும், பாலஸ்தீனிய ஆயுதக்குழுக்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

அதேவேளை, லெபனான் – சிரியா எல்லைகளிலும் பாலஸ்தீனிய ஆயுதக்குழுவினர் செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் அவ்வபோது இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது.

இந்நிலையில், சிரியா எல்லையில் லெபனான் நாட்டின் குவசயா நகரில் பதுங்கி இருந்த பாலஸ்தீனிய ஆயுதக்குழுவினர் மீது இஸ்ரேல் விமானப்படை இன்று வான்வெளி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பாலஸ்தீனிய ஆயுதக்குழு சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். மேலும், 10 பேர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலையடுத்து பாலஸ்தீனிய ஆயுதக்குழு இஸ்ரேல் மீது பதிலடி தாக்குதல் நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mithu

About Author

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.