செய்தி விளையாட்டு

IPL Match 50 – ராஜஸ்தான் அணிக்கு 218 ஓட்டங்கள் இலக்கு

18வது ஐ.பி.எல். தொடரில் இன்றிரவு ஜெய்ப்பூரில் நடைபெறும் 50வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.

இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி மும்பை அணியில் தொடக்க வீரர்களாக ரோகித் – ரிக்கல்டன் களம் இறங்கினர்.

நிதானமாக விளையாடிய ரோகித் – ரிக்கல்டன் ஜோடி 100 ரன்கள் பாட்னர்ஷிப்பை கடந்தது. அதிரடியாக விளையாடிய ரிக்கல்டன் 61 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அடுத்ததாக சூரியகுமார் – ஹர்திக் பாண்ட்யா ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். சிறப்பாக விளையாடிய பாண்ட்யா, சூரியகுமார் ஆகியோர் தலா 48 ரன்கள் அடித்தனர்.

இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 2 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் அணி தரப்பில் பராக், தீக்சனா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி