இலங்கை

இலங்கை இளைஞர் யுவதிகளுக்கு புலனாய்வு பிரிவு எச்சரிக்கை

கம்போடியா, மியான்மர், தாய்லாந்து மற்றும் லாவோஸ் ஆகிய நாடுகளில் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான வேலைகளை வழங்க முயற்சிக்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் குறித்து இந்த நாட்டில் உள்ள இளைஞர்கள் மிகவும் கவனமாக இருக்குமாறு புலனாய்வு அமைப்புகள் எச்சரித்துள்ளன.

கம்போடியா, மியான்மர், தாய்லாந்து, லாவோஸ் ஆகிய நாடுகளில் பல பாதாள உலகக் கும்பல் இயங்கி வருவதாக தெரியவந்துள்ளது.

தகவல் தொழில்நுட்பம் தொடர்பான உயர் ஊதிய வேலைகளை அவர்களுக்கு வழங்குவதாக கூறி கணினி குற்றங்களுக்கு அவர்களைப் பயன்படுத்தி ஏராளமான இளைஞர்களை சிறையில் அடைத்து பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளாக்கி வருவதாகவும் அந்நாட்டு புலனாய்வு அமைப்புகள் கண்டுபிடித்துள்ளன. .

இதன்படி, இந்த 04 நாடுகளில் பாதாள உலகக் கும்பல்களின் கட்டுப்பாட்டில் உள்ள முகாம்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கை இளைஞர்கள் பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளாகி அவர்களின் உழைப்பு வலுக்கட்டாயமாக பெறப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மியாவெட்டி என்ற பகுதியில் வைத்து இவர்கள் வலுக்கட்டாயமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மியான்மருக்கும் தாய்லாந்திற்கும் இடையில் பாயும் நதி ஊடாக மியாவெட்டி என்றழைக்கப்படும் மாகாணம் விவசாய நிலம் எனவும், அண்மைக்கால சீன முதலீட்டால் இது குற்றச்செயல்கள் நிறைந்த பகுதியாக மாறியுள்ளது என்றும் நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

இந்த முகாம்கள் சீன பிரஜைகள் தலைமையிலான பாகிஸ்தானியர்கள், பங்களாதேஷ் மற்றும் இலங்கையர்களைக் கொண்ட ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்களால் கட்டுப்படுத்தப்படுவதாகவும், அவர்கள் சுமார் 5 ஆண்டுகளாக இந்த கணினி குற்றங்களைச் செய்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மியான்மர் எல்லையில் பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ள இலங்கையர்கள் குழுவொன்று இலங்கை ஊடக நிறுவனத்திற்கு கடிதம் ஒன்று அனுப்பியுள்ளது.

இவர்களை மீட்பதற்கு 15 கோடி ரூபா பணம் தேவைப்படுவதாகவும், அந்த தொகையை வழங்க இலங்கையின் முன்னணி வர்த்தகர்கள் உட்பட பல தரப்பினரின் ஆதரவை எதிர்பார்த்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்