செய்தி விளையாட்டு

அயர்லாந்துக்கு எதிரான T20 தொடரை கைப்பற்றிய இந்தியா

இந்தியா, அயர்லாந்து அணிகள் இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி டப்ளினில் நடைபெற்றது. டாஸ் வென்ற அயர்லாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய இந்தியா 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் 58 ரன்கள் எடுத்து அசத்தினார்.

சாம்சன் 40 ரன்னும், ரிங்கு சிங் 38 ரன்னும் எடுத்தனர். ஷிவம் துபே 22 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.

இதையடுத்து, 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பால்பிரின் மட்டும் போராடினார்.

அவர் அரை சதமடித்து 72 ரன்னில் ஆட்டமிழந்தார். மார்க் அடைர்23 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

இறுதியில், அயர்லாந்து 152 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 33 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றதுடன் டி20 தொடரை 2-0 என கைப்பற்றியது.

இந்தியா சார்பில் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

 

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி