செய்தி விளையாட்டு

T20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

டி20 உலகக் கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மாவும், துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

டி20 உலகக் கோப்பை வருகிற ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் நடைபெறவுள்ளது. இதற்கான இந்திய அணி தேர்வு குறித்து இன்று அஜித் அகார்க்கர் தலைமையில் இந்திய அணி தேர்வுக் குழுவினர் ஆலோசனை நடத்தினர்.

அதன்படி, தற்போது டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் ஷிவம் துபே, சஞ்சு சாம்சன் ஆகியோர் உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றுள்ளனர். விபத்தில் சிக்கி நீண்ட காலம் அணியில் இடம்பெறாமல் இருந்த ரிஷப் பந்த்க்கும் அணியில் இடம் கிடைத்துள்ளது. யுஸ்வேந்திர சஹால் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார்.

இதேபோல் மோசமான ஃபார்ம் காரணமாக விமர்சிக்கப்பட்டு வரும் ஹர்திக் பாண்டியாவுக்கும் அணியில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், ரிசர்வ் வீரர்களாக ஷுப்மன் கில், ரிங்கு சிங், கலீல் அகமது ஆவேஷ் கான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி