தமிழ்நாடு

‘ஸ்ரீதேவியை சந்திப்பதற்காக சொர்க்கத்திற்கு வந்துள்ளேன்’ – ராம் கோபால் வர்மானவின் பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சி !

மறைந்த நடிகை ஸ்ரீதேவியை சந்திப்பதற்காக நான் சொர்க்கத்திற்கு வந்திருக்கிறேன்’ என இயக்குநர் ராம் கோபால் வர்மா புகைப்படம் ஒன்றை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். காரில் ஸ்ரீதேவிக்கு அருகில் அமர்ந்து சிகரெட் பிடிப்பது போன்று அவர் பகிர்ந்திருக்கும் படத்தைப் பார்த்துவிட்டு ஸ்ரீதேவியின் ரசிகர்கள் அதிர்ந்து போய் உள்ளனர்

சர்ச்சைகளுக்குப் பஞ்சமில்லாதவர் இயக்குநர் ராம்கோபால் வர்மா. நடிகைகளுடன் நெருக்கமாக புகைப்படங்களை பகிர்வது, அரசியல்வாதிகளை வம்பிழுப்பது என ஈடுபட்டு வந்தார்.

அந்த வகையில், மறைந்த நடிகை ஸ்ரீதேவியுடன் காருக்குள் அமர்ந்து புகைப்பிடிப்பது போன்ற ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார் ராம்கோபால் வர்மா. இதைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ‘ஸ்ரீதேவியை சந்திப்பதற்காக சொர்க்கத்திற்கு வந்துள்ளேன்’ எனக் கேப்ஷன் கொடுத்துள்ளார் வர்மா.

ஸ்ரீதேவியை வைத்து ‘க்ஷண க்ஷணம்’ என்ற படத்தை இயக்கினார் ராம்கோபாம் வர்மா. இந்தப் படம் ஸ்ரீதேவிக்கு தன்னுடைய காதல் கடிதம் என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஸ்ரீதேவியுடன் புகைப்பிடிப்பது போன்ற படத்தைப் பகிர்ந்துள்ளார்.

இதைப் பார்த்த ஸ்ரீதேவி ரசிகர்கள், ராம்கோபால் வர்மாவின் செயல் அருவருப்பாக உள்ளதாகத் தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்தப் படத்தை ராம்கோபால் வர்மா உடனடியாக நீக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.

Mithu

About Author

You may also like

தமிழ்நாடு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா  தொற்று முன்னேற்பாடு சிகிச்சை பணிகள்
தமிழ்நாடு

பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு

நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தராததை கண்டித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு. மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் ஆதிதிராவிடர்