இலங்கை

திருகோணமலையில் மனித உரிமை தின வாரம் அனுஷ்டிப்பு

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு AHRC நிறுவனத்தின் ஏற்பாட்டில் திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பாலையூற்று கிராமத்தில் சிவில் அமைப்புக்களினால் இன்று (06) புதன்கிழமை மாலை மனித உரிமைகள் தின வாரம் அனுஷ்டிக்கப்பட்டது.

பாலையூற்று மாதர் சங்க கட்டடத்தில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் மனித உரிமைகள் தொடர்பான தெளிவூட்டலும், காணி சட்டங்கள் தொடர்பாகவும், பெண்கள் மற்றும் சிறுவர்கள் உரிமைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

குறித்த நிகழ்வில் சிவில் செயற்பாட்டாளர்கள், மாதர்சங்க உறுப்பினர்கள் கிராமமக்கள் மற்றும் AHRC நிறுவன உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு AHRC நிறுவன சிவில் செயற்பாட்டாளர்களினால் டிசம்பர் 04ஆம் திகதி முதல் 12ஆம் திகதிவரை மனித உரிமைகள் தின வாரம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

     

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்