இந்தியா செய்தி தமிழ்நாடு

குதிரை வேகத்தில் குதிரை பேரம்: இதுவா தூயசக்தி?

“தூயசக்தி என சுயதம்பட்டம் அடித்த தவெக, தற்போது குதிரை வேகத்தில் குதிரை பேர அரசியலை முன்னெடுத்துவருகின்றது.” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அதிமுக எம்எல்ஏக்கள் மூவர், பதவி துறந்துவிட்டு தவெகவில் இணைந்துள்ள நிலையிலேயே ஸ்டாலின் இவ்வாறு விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில்

“ காட்சி 1: பெரும்பான்மை இல்லாத நிலையில், திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது.

காட்சி 2: நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுகவின் ஒரு அணியை ஆதரவாக வாக்களிக்க விலை பேசுவது. அ.ம.மு.க. உறுப்பினரையும் கொசுறு வாங்குவது.

காட்சி 3: அதிமுக உறுப்பினர்கள் சிலரை பதவி விலகச் செய்து, தலைமைச் செயலகத்தில் வைத்தே தன் கட்சியில் இணைப்பது.

இந்த கண்றாவிக் காட்சிகளைப் பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா?

‘தூயசக்தி’ என்று சுயதம்பட்டம் அடித்தவர்கள், ‘துயரசக்தி’ என அம்பலப்பட்டு இருக்கிறார்கள்.

என்டிஏ ஆதரவைக் கோராமல் இருந்தால் மட்டுமே ஆதரவு எனச் சொல்லிக் கடிதம் அளித்துவிட்டு, இப்போது நடக்கும் காட்சிகளை அமைச்சரவையில் இருந்து ரசித்து விசிலடிக்கும் காங்கிரஸின் போலி பாஜக எதிர்ப்பும் பல்லிளிக்கிறது!” என்று மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி