செய்தி தமிழ்நாடு

தமிழ் நாட்டில் கோர விபத்து – நால்வர் பலி

மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பேருந்து அரசு பேருந்து மற்றும் லாரி மோதியதில் பெண் ஒருவர் உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள பூக்கத்துறை என்ற இடத்தில் அதிகாலை திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வந்த ஆம்னி பேருந்து விழுப்புரத்திலிருந்து கிரானைட் கற்களை ஏற்றி வந்த லாரி மற்றும் கும்பகோணத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசு பேருந்து ஆகிய மூன்று வாகனங்களும் ஒன்றன்பின் ஒன்றாக மோதிக்கொண்டதில் ஆம்னி பேருந்தில் பயணம் செய்த மேல்மருவத்தூர் அருகே உள்ள செண்டிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த மருத்துவர் ராஜேஷ், மற்றும் முகவரி தெரியாதவர் பிரவீன் சென்னை கொடுங்கையூர் பகுதியில் சேர்ந்த தனலட்சுமி மேலும் ஒருவர் அடையாளம் தெரியாதவர் என இந்த விபத்தில் ஒரு பெண் உட்பட நான்கு பேர் சம்பவ இடத்தில் உடல் நசுங்கி பலியாகி உள்ளனர்.

ஆம்னி பேருந்து மற்றும் அரசு பேருந்தில் இருந்த 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இவர்கள் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து படாளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி