இலங்கையில் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகள் – 03 பேர் உயிரிழப்பு!
இலங்கையின் இருவேறு பகுதிகளில் இன்று (04.10) இடம்பெற்ற சாலை விபத்துகளில் மூன்றுபேர் பலியாகியுள்ளனர். ஹொரண-மொரகஹேன சாலையில் மொரகஹேன, கனன்வில பகுதியில் இன்று (04) பிற்பகல் நடந்த சாலை விபத்தில் தம்பதியினர் உயிரிழந்துள்ளனர். மொரகஹேனவிலிருந்து ஹொரண நோக்கிச் சென்ற லொறி ஒன்று, எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. படுகாயமடைந்த தம்பதியினர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் […]













