வட அமெரிக்கா

நியூயார்க் நகரில் இடிந்து விழுந்த கட்டடம் – மக்களிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை!

  • October 1, 2025
  • 0 Comments

நியூயார்க்கின் பிராங்க்ஸ் பெருநகரத்தில் உயரமான கட்டடம் ஒன்று இன்று (01.10) பகுதியளவில் இடிந்து விழுந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எரிவாயு வெடிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து கட்டடம் இடிந்து விழுந்ததாக நியூயார்க் தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இதன்காரணமாக யாரும் உயிரிழந்ததாகவோ, அல்லது காயமடைந்ததாகவோ குறிப்பிடப்படவில்லை. நியூயார்க் மேயர் எரிக் ஆடம்ஸ், நிலைமையை அறிந்திருப்பதாகவும், கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அந்த பகுதியில் பயணிப்பதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பொழுதுபோக்கு

உலகத்தின் பணக்கார நடிகரானார் ஷாருக்கான்

  • October 1, 2025
  • 0 Comments

பாலிவுட் நடிகர் ஷாருக்கான், ரூ.12,490 கோடி சொத்து மதிப்பின் மூலம் உலகத்தின் பணக்கார நடிகராகியுள்ளார். M3M ஹுருன் இந்தியா பணக்காரர்கள் 2025 பட்டியலின்படி, பணக்கார (பில்லியனர்) நடிகர்களில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் பெயரும் இடம்பெற்றுள்ளது. சுமார் ரூ.12,490 கோடி (1.4 பில்லியன் அமெரிக்க டாலர்) சொத்து மதிப்பின் மூலம், நடிகர் ஷாருக்கான் பலரை பின்னுக்குத் தள்ளியுள்ளார். 33 ஆண்டுகளுக்கும் மேலாகத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ஷாருக்கான், கடந்த 2002 ஆம் ஆண்டு அவர் துவங்கிய […]

ஐரோப்பா

கொடூரமான குற்றங்களுக்கு மரண தண்டனை மசோதாவை உருவாக்க உத்தரவிட்டுள்ள கிர்கிஸ்தான் ஜனாதிபதி

  • October 1, 2025
  • 0 Comments

கிர்கிஸ்தான் ஜனாதிபதி சதீர் ஜபரோவ் புதன்கிழமை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான கொடூரமான குற்றங்களுக்கு நாட்டில் மரண தண்டனையை மீண்டும் அறிமுகப்படுத்தும் மசோதாவை உருவாக்குவதற்கு உத்தரவிட்டுள்ளார் . ஜபரோவின் செய்தித் தொடர்பாளர் அஸ்கட் அலகோசோவ், அமெரிக்க சமூக ஊடக நிறுவனமான பேஸ்புக்கில் ஒரு அறிக்கையில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு மிகக் கடுமையான தண்டனைகளை வழங்கும் சட்டத் திருத்தங்களை வரைவதற்கு ஜனாதிபதி கிர்கிஸ் ஜனாதிபதியின் சட்ட ஆதரவுத் துறைத் தலைவருக்கு உத்தரவிட்டதாகக் கூறினார். குறிப்பாக, இது […]

இலங்கை

அம்பாறையில் சிசு மீட்கப்பட்ட சம்பவம் : குழந்தையின் தாய் மற்றும் தந்தை கைது

  • October 1, 2025
  • 0 Comments

அம்பாறை மாவட்டம் ஒலுவில் பிரதேசத்தில் பிறந்து சில நாட்களான பெண் சிசு கடந்த ஞாயிற்றுக்கிழமை(28) மீட்கப்பட்டிருந்தது. இதன்போது விசாரணைகளை மேற்கொண்டு வந்த அக்கரைப்பற்று பொலிஸார் , ஒலுவில் பிரதேசத்தை சேர்ந்த குழந்தையின் தந்தை மற்றும் நிந்தவூரை பிரதேசத்தை சேர்ந்த தாயை செவ்வாய்க்கிழமை (30) கைது செய்தனர். சம்பவம் தோடர்பில் காதலித்து வந்த தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரும் 17 வயது உடையவர்கள் எனவும் அவர்களுக்கு திருமணமாகாத நிலையில் குறித்த குழந்தை பிறந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். மேலும் […]

இலங்கை

இலங்கையில் பாடசாலை முடிந்து வீடு திரும்பிய 45 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

  • October 1, 2025
  • 0 Comments

இலங்கையின் – ஹிங்குராங்கொட பகுதியில் சுமார் 45 மாணவர்கள் திடீரென சுகவீனம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பக்கமுனாவில் உள்ள ஒரு தொடக்கப் பாடசாலையில் சிறுவர் தினத்தை முன்னிட்டு உணவு வழங்கப்பட்டுள்ளது. குறித்த உணவு விஷமானதை தொடர்ந்து மாணவர்கள் சுகவீனம் அடைந்ததாக கூறப்படுகிறது. நிகழ்ச்சி முடிந்ததும் குழந்தைகள் வீடு திரும்பிய பின்னரே  அறிகுறிகள் தென்படத் தொடங்கியதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பக்கமுனா பிராந்திய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு தொடர்ச்சியாக சிகிச்சை வழங்கப்பட்டு […]

இலங்கை

யாழ்ப்பாணத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

  • October 1, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் பிரதேச சபையின் அனுமதியின்றி கட்டப்பட்ட சில கட்டடங்களுக்கு பருத்தித்துறை பிரதேசசபை சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பான நோட்டீஸ் அல்லது அறிவிப்பு அந்த கட்டடங்களில் ஒட்டப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – வடமராட்சி பகுதியில் உள்ள வத்திராயன், மருதங்கேணி, உடுத்துறை ஆகிய  பகுதிகளில் பிரதேச சபையின் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டங்களுக்கே இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், கட்டுமான பணிகளை உடன் நிறுத்தவும். மீறினால் சட்ட நடவடிக்கைக்கு உட்படுவீர்கள்” என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இலங்கை

மொனராகலையில் கேள்வி கேட்ட ஆசிரியரை தாக்கிய மாணவன்!

  • October 1, 2025
  • 0 Comments

மொனராகலை நகரத்தில் உள்ள ஒரு முன்னணி பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் அவ் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவனால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தரம் 11 இல் கல்வி கற்கும் குறித்த மாணவன் பாடசாலைக்கு தொலைபேசி, பவர் பேங்க் ஆகியவற்றை எடுத்துச் சென்றுள்ளார். இந்நிலையில் தொழில்நுட்ப பாடத்திற்கு பொறுப்பான ஆசிரியர், மாணவரிடம் இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார். இதன்போது குறித்த மாணவன் ஆசிரியரை தாக்கியதாகவும், அவர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாணவர் மொனராகலையில் உள்ள சிரிகலவில் […]

வட அமெரிக்கா

கனடா ஏன் அமெரிக்காவின் 51 ஆவது மாநிலமாக மாறக்கூடாது? – ட்ரம்ப் கேள்வி!

  • October 1, 2025
  • 0 Comments

கனடா ஏன் அமெரிக்காவின் 51 ஆவது மாநிலமாக மாறக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார். கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அமெரிக்கா, கனடாவிற்கு வழங்கும் சலுகைகளை புரிந்துவைத்திருந்தார் எனவும், அதன் காரணமாக அவர் பதவி  விலகியிருப்பதாகவும் கூறியுள்ளார். இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட ட்ரம்ப்,  கனடாவில் உள்ள பலர் தங்கள் நாடு அமெரிக்காவின் 51 ஆவது மாகாணமாக இருப்பதை விரும்புகிறார்கள். கனடா அமெரிக்காவின் தயவில்தான் இருக்கிறது. நாம் அவர்களுக்கு நிதி உதவி […]

புகைப்பட தொகுப்பு பொழுதுபோக்கு

25 ஆண்டுகளுக்கு முன்பே கமலின் சாதனையை முறியடித்த தமிழ் நடிகை

  • October 1, 2025
  • 0 Comments

71-வது தேசிய திரைப்பட விருது விழாவில் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருதை த்ரிஷா தோசர் பெற்றார். த்ரிஷா தோசரை பொறுத்தவரை அவர் மராத்தியில் வெளியான ‘நாள் 2’ படத்துக்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருதை பெற்றுள்ளார். இப்படத்தில் சிமி என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். தற்போது அவருக்கு 5 வயது. படத்தில் நடிக்கும்போது 3 வயது. த்ரிஷா மராத்தி மொழி படங்களில் நடித்து வருகிறார். மிக குறைந்த வயதிலேயே தேசிய விருது பெற்றவர் என்ற பெருமையை த்ரிஷா […]

இலங்கை

இலங்கையில் சமையல் எரிவாயுவின் விலை தொடர்பில் வெளியான தகவல்!

  • October 1, 2025
  • 0 Comments

இலங்கையில் ஒவ்வொரு மாதமும் முதலாம் திகதி எரிவாயு மற்றும் எரிபொருள் விலை தொடர்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றது. இதற்கமைய இந்த (01.10)  மாதத்திற்கான எரிவாயு திருத்தம் தொடர்பான விபரங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, இந்த மாதத்திற்கான லிட்ரோ எரிவாயுவின் விலையில் எந்த திருத்தமும் மேற்கொள்ளப்படாது  என்று நிறுவனம் கூறியுள்ளது. இதற்கமைய 12.5 கிலோ எடையுள்ள வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 3,690 ரூபாவிற்கும்,  5 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை   1,482 ரூபாவிற்கும், 2.3 கிலோ எடையுள்ள எரிவாயு […]

error: Content is protected !!