இலங்கை

சுற்றுலாவுக்காக இலங்கை வந்த பெண்களை ஏமாற்றியவர்களுக்கு நேர்ந்த கதி

  • October 10, 2025
  • 0 Comments

சுற்றுலாவுக்காக இலங்கை வந்த 2 வெளிநாட்டுப் பெண்களிடம் பயண கட்டணத்தை விட அதிகமாக பணம் பறித்ததாகக் கூறப்படும் 2 முச்சக்கர வண்டி ஓட்டுநர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இம்புல்கொட மற்றும் வெல்லம்பிட்டியவை சேர்ந்த 40 மற்றும் 48 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுற்றுலாவுக்காக நாட்டிற்கு வந்த இரண்டு பிரேசில் மற்றும் பெல்ஜியப் பெண்களிடமிருந்து 10,000 மற்றும் 30,000 ரூபாய் கப்பம் பெற்ற இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக காவல்துறை சுற்றுலாப் பிரிவுக்கு கிடைத்த முறைப்பாடுகளின் […]

உலகம்

காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேற்பார்வையிட சுமார் 200 துருப்புகளை அனுப்பவுள்ள அமெரிக்கா

  • October 10, 2025
  • 0 Comments

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேற்பார்வையிட அமெரிக்கா சுமார் 200 துருப்புக்களை இஸ்ரேலுக்கு அனுப்புகிறது என்று அமெரிக்க ஊடகங்கள் வியாழக்கிழமை(09) செய்தி வெளியிட்டன. இப்பணிக்குழு மேற்பார்வையிடும், கண்காணிக்கும், ஒப்பந்த மீறல்கள் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்யும் என்று அமெரிக்க மூத்த அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் எகிப்து, கத்தார் மற்றும் துருக்கிய ஆயுதப்படைகளின் உறுப்பினர்கள் அமெரிக்க குழுவில் இணைக்கப்படுவார்கள் என்று அந்த அதிகாரி தெரிவித்தார். பணிக்குழு காசாவில் இருக்காது என்று […]

உலகம்

இஸ்ரேலுக்கான விசா வழங்குவதை நிறுத்திய இந்தோனேசியா!

  • October 10, 2025
  • 0 Comments

இஸ்ரேலும் ஹமாஸும் போர்நிறுத்தத்தை ஒப்புக்கொண்டுள்ளன. இருப்பினும் இஸ்ரேலுக்கான விசா வழங்குவதை இந்தோனேசியா தொடர்ந்து மறுத்து வருகின்றது. இந்தோனேசியாவில் இந்த மாதம் ஜிம்னாஸ்டிக் (gymnasts) உலக  சாம்பியன்ஷிப் போட்டிகளை நடத்துகிறது.  இதில் கலந்துகொள்ள இஸ்ரேலியர்களுக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலியர்கள் இந்த போட்டியில் கலந்துகொள்ள மாட்டார்கள் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக  இந்தோனேசிய ஜிம்னாஸ்டிக்ஸ் கூட்டமைப்பின் தலைவர் இட்டா ஜூலியாட்டி தெரிவித்துள்ளார். உலகின் மிகப்பெரிய முஸ்லிம் பெரும்பான்மையை கொண்ட இந்தோனேசியா பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறது. பாலஸ்தீன அரசை […]

பொழுதுபோக்கு

மூன்று மாதத்தில் முறிந்த உறவு! திரிஷாவுக்கு மீண்டும் திருமணம்?

  • October 10, 2025
  • 0 Comments

அனைத்து மொழிகளிலும் ரவுன்டு கட்டி சுமார் 22 ஆண்டுகளை கடந்தும் பிரபல நடிகையாக வலம் வரும் திரிஷாவுக்கு திருமணம் செய்ய அவருடைய குடும்பம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்காக புதிதாக வரன் பார்த்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. அந்த வரன், சண்டிகரை சேர்ந்த தொழிலதிபர் என கூறப்படுகிறது. இரு குடும்பத்தினருக்கும் இடையே பல ஆண்டுகளாக நட்புறவு இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. ஆனாலும் இதுவரை இந்த செய்தி குறித்து திரிஷா தரப்பில் இருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் […]

உலகம்

நேட்டோவிலிருந்து ஸ்பெயினை வெளியேற்ற டிரம்ப் பரிந்துரை

  • October 10, 2025
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை(09) ஸ்பெயின் தனது பாதுகாப்பு செலவினங்களை அதிகரிக்க மறுத்ததற்காக நேட்டோவிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளார். ‘இதைச் செய்யாமல் இருக்க அவர்களுக்கு எந்தக் காரணமும் இல்லை’, ‘ஒருவேளை நீங்கள் அவர்களை நேட்டோவிலிருந்து வெளிப்படையாக வெளியேற்ற வேண்டும்’ என வெள்ளை மாளிகையில் பின்லாந்து ஜனாதிபதி அலெக்சாண்டர் ஸ்டப்புடனான சந்திப்பின் போது ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மேலும் ட்ரம்ப் ‘நீங்கள் ஸ்பெயினுடன் பேசத் தொடங்க வேண்டும்’, ‘நீங்கள் அவர்களை அழைத்து அவர்கள் ஏன் பின்தங்கியிருக்கிறார்கள் என்பதைக் […]

ஐரோப்பா

பயிற்சியின் போது ரஷ்யாவின் லிபெட்ஸ்க் பகுதியில் விபத்துக்குள்ளான மிக்-31 போர் விமானம்

  • October 10, 2025
  • 0 Comments

நேற்றைய தினம் ரஷ்யாவின் லிபெட்ஸ்க் பகுதியில் பயிற்சி பறப்பின் போது ஒரு மிக்-31 போர் விமானம் விபத்துக்குள்ளானதாகவும், அதில் இருந்த இரு விமானிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும் டாஸ்(TASS) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மாஸ்கோ நேரப்படி சுமார் 19:20 மணியளவில், திட்டமிடப்பட்ட பயிற்சி விமானத்திற்கு அடுத்து தரையிறங்குவதற்காக நெருங்கி வந்தபோது மிக்-31 விமானம் லிபெட்ஸ்க் பகுதியில் விபத்துக்குள்ளானது. பணியாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும் அவர்களின் உயிருக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் டாஸ்ஸால்(TASS) மேற்கோள் காட்டப்பட்டது. […]

பொழுதுபோக்கு

மீண்டும் இணையும் சிவகார்த்திகேயன் ,ஸ்ரீலீலா ஜோடி

  • October 10, 2025
  • 0 Comments

சிவகார்த்திகேயன் நடிக்கும் புதுப் படத்தில் தெலுங்கு நடிகையான ஸ்ரீலீலா கதாநாயகியாக ஒப்பந்தமாகி உள்ளார். தற்போது ‘பராசக்தி’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார் சிவா இதையடுத்து, ‘டான்’ பட இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் அவர் நடிக்க இருப்பதாகவும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைப்பதாகவும் அண்மையில் தகவல் வெளியானது. இப்படத்தில் சிவாவுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனாதான் முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால், சில காரணங்களால் அவர் திடீரென படத்தில் இருந்து விலகுவதாகத் தெரிவித்ததால், ஸ்ரீலீலாவின் பெயரை சிவகார்த்திகேயன் பரிந்துரை […]

இந்தியா

மும்முரமாகும் தமிழக தேர்தல் களம் – அடுத்தக்கட்ட நடவடிக்கையில் இறங்கிய விஜய்!

  • October 10, 2025
  • 0 Comments

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 06 மாதங்கள் உள்ள நிலையில், தமிழக வெற்றிக்கழகம் தேர்தல் சின்னத்தை பெறுவதற்கான  நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த மாதம் இறுதியில் அல்லது நவம்பர்  மாதத்தின் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையத்திடம் இது தொடர்பில் விண்ணப்பிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. த.வெ.க. முதலில் முச்சக்கர வண்டிச் சின்னத்தை குறி வைத்திருந்தது. ஆனால் அந்த சின்னம் கேரளாவில் ஒரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே சுயேட்சை பட்டியலில் இடம் பெற்றுள்ள சின்னங்களில் ஒன்றை […]

பொழுதுபோக்கு

கனி – பிரவீன் செய்த மோசமான செயல் – அதிர்ச்சியில் ஹவுஸ் மேட்ஸ்

  • October 10, 2025
  • 0 Comments

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 ஆரம்பிக்கப்பட்டு சண்டையும் சமாதானமும் அழுகையும் சிரிப்புமாக சென்றுகொண்டு இருக்கின்றது. இன்று ஐந்தாவது நாளாக பிக்பாஸ் ஒளிபரப்பப்பட்டுக்கொண்டு இருக்கின்றது. இன்றைய நாளில் முதலாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. இதில் கனி மற்றும் பிரவீன் காந்தி இருவரும் சேர்ந்து இன்றைய சமையலில் உப்பை அதிகமாக போட்டுவிட்டார்கள். இதையடுத்து கெமரா முன் போய் நின்று “நாங்க ரெண்டு பேரும் தெரிஞ்சேதான் உப்பு அதிகமாப் போட்டு இருக்கோம். சாப்பாடு இல்லை என்றால் எப்படி இருக்கும் என்பதை […]

இலங்கை

வெலிகம துப்பாக்கிச் சூடு: முன்னாள் IGP தேசபந்து மற்றும் பிறருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

  • October 10, 2025
  • 0 Comments

வெலிகமவில் W15 ஹோட்டலுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக முன்னாள் காவல்துறை மா அதிபர் (IGP) தேசபந்து தென்னகோன் மற்றும் பிற சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கு டிசம்பர் 17 ஆம் திகதி மீண்டும் விசாரிக்கப்பட உள்ளது. இந்த வழக்கு இன்று (அக்டோபர் 10) மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. தேசபந்து தென்னகோன் மற்றும் பிற குற்றம் சாட்டப்பட்டவர்கள் விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜரானதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!