இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா

பிரித்தானிய கடவுச்சீட்டில் ஏற்படப்போகும் புதிய மாற்றம்

  • October 11, 2025
  • 0 Comments

பிரித்தானிய கடவுச்சீட்டில் புதிய மாற்றம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் புதிய கடவுச்சீட்டுகளின் முன்பக்கத்தில் மன்னர் சார்லஸின் சின்னமே இடம்பெறும் என உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது. கடவுச்சீட்டின் பக்கங்களில் “அவரது மாட்சிமை” என்ற வாசகமும் இடம்பெறும். எனினும் தற்போதைய கடவுச்சீட்டின் அட்டைப்படத்தில் மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் சின்னமே உள்ளது. புதிய கடவுச்சீட்டுகளில் பிரித்தானியாவில் நான்கு பகுதிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், பென் நெவிஸ் (Ben Nevis), லேக் டிஸ்ட்ரிக்ட் (Lake District), த்ரீ […]

உலகம்

நவம்பர் மாதம் முதல் சீனா மீது 100 சதவீத வரி விதிப்பதாக அறிவித்துள்ள ட்ரம்ப்

  • October 11, 2025
  • 0 Comments

தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமெரிக்கா – சீனா வர்த்தகப் போர் மீண்டும் தொடங்கியுள்ளது. அரிய வகை கனிம வளங்களைச் சீனா ஏற்றுமதி செய்வதைக் கட்டுப்படுத்த சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக 100 சதவீதம் வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று (10) அறிவித்துள்ளார். இந்த கூடுதல் வரி விதிப்பு நவம்பர் 1ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஏற்கனவே 30 […]

இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா

பிரித்தானியாவில் தமிழர்கள் செரிந்து வாழும் பகுதியில் வெளிநாட்டவர்களால் ஏற்பட்டுள்ள நெருக்கடி

  • October 11, 2025
  • 0 Comments

தமிழர்கள் செறிந்து வாழும் மேற்கு லண்டனில் அமைந்துள்ள ஹில்லிங்டன் பகுதியில் வெளிநாட்டவர்கள் வருகையால் கடும் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது. சமூக வசதிகள், வேலைவாய்ப்பு மற்றும் பாடசாலை ஆகியவை காரணமாக இந்தப் பகுதி தமிழர்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வருகிறது. ஆனால் சமீபத்தில் சாகோஸ் தீவுவாசிகளின் பெருமளவு வருகையால் ஹில்லிங்டன் நகர சபை கடும் நிதி அழுத்தத்திற்கு முகம்கொடுக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளது. குடியுரிமையை பெறும் நோக்கில், 2022ஆம் ஆண்டிலிருந்து சாகோஸ் தீவுவாசிகள் பிரித்தானியாவுக்கு வர தொடங்கினர். இந்த […]

இலங்கை

இலங்கையில் தங்கத்தின் விலையில் மீண்டும் அதிகரிப்பு

  • October 11, 2025
  • 0 Comments

நாட்டில் தங்கத்தின் விலை 5,000 ரூபாய் அதிகரித்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கமைய, இன்று காலை கொழும்பு ஹெட்டி தெரு தங்க சந்தையில் ஒரு பவுன் 22 காரட் தங்கத்தின் விலை 310,000 ரூபாயாக அதிகரித்துள்ளது. நேற்று 305,300 என விலை நிர்ணயிக்கப்பட்டது. இதற்கிடையில், நேற்று 330,000 ரூபாயாக இருந்த 24 காரட் தங்கத்தின் விலை இன்று 335,000 ரூபாயாக உயர்ந்துள்ளதாக கொழும்பு ஹெட்டி தெரு தங்க சந்தை […]

பொழுதுபோக்கு

திருமண செய்தி : திரிஷா வைத்த செக்…

  • October 11, 2025
  • 0 Comments

“திரிஷாவுக்கு கல்யாணம்” இது தான் இப்போது எங்கு பார்த்தாலும் பேசுபொருளாக இருக்கின்றது. ஆனால் இதுக்கு திரிஷா என்ன பதில் கொடுத்து இருக்கார் தெரியுமா? “என்னுடைய வாழ்க்கையைப் பிறர் திட்டமிடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். எனது தேனிலவையும் திட்டமிட்டு கொடுப்பார்கள் என காத்திருக்கிறேன்” என கிண்டலாக குறிப்பிட்டுள்ளார் திரிஷா. தமிழ்த் திரையுலகில் 22 ஆண்டுகளை கடந்து முன்னணி நடிகை வலம் வருபவர் திரிஷா. பல நடிகைகள் வந்து போனாலும், சினிமாவில் கொடிகட்டி பறக்கும் நடிகை திரிஷா, திருமணம் செய்துகொள்ளாமல் […]

இலங்கை செய்தி

இலங்கை கல்வித் திட்டத்தில் ஏற்படவுள்ள புதிய மாற்றம்

  • October 11, 2025
  • 0 Comments

இலங்கை பாடசாலைகளில் தரம் 6 ஆம் முதல் 8 வரையான பாடவிதானங்களில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளது. அதற்கமைய, பாடவிதானங்களில் குடியுரிமை பாடத்தில் சட்டக் கல்வி தொடர்பான பகுதியை இணைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். கல்வி மறுசீரமைப்பின் போது க.பொ.த சாதாரண தரத்தில் இதனை தெரிவுப் பாடமாக இணைக்க எதிர்பார்த்துள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார். அதன்படி, குடியுரிமை பாடத்தில், 6ஆம் தரத்துக்கான சட்டக்கல்வி, மூன்றாம் தவணைக்கான மாதிரியில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஒழுக்கமான சமூகத்திற்காக […]

உலகம் செய்தி

ஆஸ்திரேலியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ள பேபி பிரியா சட்டம் – அரசாங்கம் எடுத்த நடவடிக்கை

  • October 11, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் பேபி பிரியா என்ற சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளது. பிறந்த ஆறு வாரங்களுக்கு பின்னர் இறந்த பேபி பிரியா என்ற குழந்தையின் நினைவாக இந்தப் புதிய சட்டம் பெயரிடப்பட்டுள்ளது. குழந்தையை இழந்த தாயின் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு அவரது நிறுவன உரிமையாளரால் ரத்து செய்யப்பட்டது, இது அவருக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சமூகத்தில் விவாதமும் நடந்துள்ளது. குழந்தையை இழந்த பிறகு முதலாளியின் நடத்தை ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் பேபி பிரியா என்ற புதிய […]

இலங்கை

இலங்கையில் எலிக் காய்ச்சல் பரவும் அபாயம் – பொது மக்களுக்கு எச்சரிக்கை

  • October 11, 2025
  • 0 Comments

இலங்கையில் எலிக் காய்ச்சல் பரவுவதற்கான அதிக ஆபத்துள்ள பகுதிகளாக 12 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த நிலையில் அவதானமாக செயற்படுமாறு சுகாதார அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ எச்சரிக்கை விடுத்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் இதனைத் தெரிவித்தார். 2024ஆம் ஆண்டு முதல் எலிக் காய்ச்சல் நோயினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 21,963 என்றும், 2024 ஆம் ஆண்டில் பதிவான இறப்புகளின் எண்ணிக்கை 286 […]

விளையாட்டு

மகளிர் உலகக் கோப்பை – முக்கிய வெற்றியை தேடி களமிறங்கும் இலங்கை அணி

  • October 11, 2025
  • 0 Comments

மகளிர் உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை பங்கேற்கும் மற்றொரு போட்டி இன்று நடைபெறவுள்ளது. வலுவான இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்த போட்டி இடம்பெறவுள்ளது. இந்த போட்டி கொழும்பில் உள்ள ஆர் பிரேமதாச மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு தொடங்க உள்ளது. இங்கிலாந்து அணி இதுவரை பங்கேற்ற இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று 04 புள்ளிகளைப் பெற்று புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இலங்கை பங்கேற்ற இரண்டு போட்டிகளில், ஒரு போட்டி தோல்வியடைந்துள்ளது, மற்றொன்று […]

உலகம்

தைவானின் நிலைமையை அளவிட சீனா பயன்படுத்தும் புதிய உத்தி

  • October 11, 2025
  • 0 Comments

தாய்வானின் கடல் எல்லையில் போலி தானியங்கி அடையாள அமைப்பு சமிக்ஞைகளை சீனக் கப்பல்கள் ஒளிபரப்பி வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. போராய்வு நிறுவனமொன்றின் அறிக்கையை மேற்கோள் காட்டி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு வகையான அறிவாற்றல் ஆக்கிரமிப்புகளுக்கு தாய்வானின் பதிலை மதிப்பீடு செய்யும் முயற்சியாக, சீனா இந்த போலி தானியங்கி அடையாள அமைப்பு சமிக்ஞைகளை மேற்கொள்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. முன்னதாக, பல சீன மீன்பிடிக் கப்பல்கள் தாய்வானின் கடல் எல்லையில் போலி தானியங்கி அடையாள அமைப்பு சமிக்ஞைகளை ஒளிபரப்பியதாக கூறப்படுகிறது. […]

error: Content is protected !!