இலங்கை

தீபாவளியை முன்னிட்டு மத்திய மாகாணத்திலுள்ள தமிழ்ப் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

  • October 17, 2025
  • 0 Comments

மத்திய மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 21 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பண்டிகைக்கு மறுநாளான 21 ஆம் திகதி விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மத்திய மாகாண ஆளுநரால் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. நுவரெலியா கல்வி வலயத்தின் நிர்வாகத்திற்குப் பொறுப்பான பிரதி கல்விப் பணிப்பாளர் எம்.கணேஸ்ராஜ் பெருந்தோட்ட சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பிடம் முன்வைத்த வேண்டுகோளுக்கிணங்க இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. விடுமுறை வழங்கப்படும் குறித்த நாளுக்கு பதிலாக எதிர்வரும் 25ஆம் […]

பொழுதுபோக்கு

அதிரடியாக வெளிவந்தது “அரசன்” புரோமோ

  • October 17, 2025
  • 0 Comments

இயக்குநர் வெற்றிமாறன் – சிம்பு கூட்டணியில் உருவாகியுள்ள ‘அரசன்’ படத்தின் புரோமோ வெளியாகி உள்ளது. நேற்று மாலை 6.02 மணிக்கு திரையரங்குகளில் அரசன் படத்தின் புரோமோ திரையிடப்பட்டது. இந்நிலையில், ‘அரசன்’ பட புரோமோவை ஜூனியர் என்டிஆர் இன்று வெளியிட்டுள்ளார்.

உலகம்

101 வயதில் காலமான ஜப்பானின் முன்னாள் பிரதமர் டோமிச்சி முரயாமா (Tomiichi Murayama)

  • October 17, 2025
  • 0 Comments

1990களின் நடுப்பகுதியில் நாட்டின் தலைவராகப் பணியாற்றிய முன்னாள் ஜப்பானியப் பிரதமர் டோமிச்சி முரயாமா(Tomiichi Murayama),இன்று(17) தனது சொந்த ஊரான ஒய்டாவில்(Oita) 101 வயதில் காலமானார் என்று கியோடோ நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மார்ச் 3, 1924 அன்று ஒய்டா மாகாணத்தில் பிறந்த முரயாமா, 1993 இல் ஜப்பான் சோசலிஸ்ட் கட்சியின் தலைவரானார் மற்றும் ஜூன் 1994 முதல் ஜனவரி 1996 வரை பிரதமராகப் பணியாற்றியுள்ளார். ஆகஸ்ட் 15, 1995 அன்று, இரண்டாம் உலகப் போரின் முடிவின் 50 […]

உலகம்

அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்க மிகப்பெரிய இராணுவப் பயிற்சியை ஆரம்பிக்கும் வெனிசுலா

  • October 17, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், வெனிசுலா நாடு தழுவிய ரீதியில் பாரிய இராணுவப் பயிற்சிகளைத் ஆரம்பித்துள்ளது. வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் (Nicolas Maduro) அறிவிப்பின் பேரில், இந்த இராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெனிசுலாவுக்கு சொந்தமான படகு ஒன்றை அமெரிக்கப் படைகள் அழித்தமைக்கு பதிலடியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. “எங்கள் பாதுகாப்பையும், அரசாண்மையைப் பாதுகாக்கும் திறனையும் உறுதிப்படுத்துவதற்காக இந்த பயிற்சி நடைபெறுகிறது” என நிக்கோலஸ் மதுரோ தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கையானது அமெரிக்கா மற்றும் வெனிசுலாவுக்கு இடையில் […]

உலகம்

ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் இடையே அதிகரிக்கும் பதற்றம் : எல்லையில் தற்கொலைக்குண்டு தாக்குதல்!

  • October 17, 2025
  • 0 Comments

ஆப்கானிஸ்தான் (Afghanistan)எல்லைக்கு அருகே நடந்த தற்கொலைக் குண்டு தாக்குதலில் 07 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.  குறித்த தாக்குதல் இன்று நடத்தப்பட்டுள்ளது. 48 மணிநேர போர் நிறுத்த ஒப்பந்தம் இன்றுடன் நிறைவடையவுள்ள நிலையில் இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஒரு போராளி வெடிபொருள் நிரப்பப்பட்ட வாகனத்தை இராணுவ முகாமாகச் செயல்பட்ட கோட்டையின் எல்லைச் சுவற்றில் மோதி வெடிக்கச் செய்ததாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன் இருவர் குறித்த வளாகத்தில் நுழைய முயன்ற நிலையில் அவர்கள் […]

உலகம்

கனடாவில் 3வது முறையாக கபில் சர்மாவின் கஃபே மீது தாக்குதல்

  • October 17, 2025
  • 0 Comments

கனடாவின் சர்ரேயில்(Surrey) உள்ள கப்ஸ் கஃபே(Kap’s Café) மீது மூன்றாவது முறையாக துப்பாக்கிதாரிகள் பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். கனடாவில் பிரபல பாலிவுட்(Bollywood) நகைச்சுவை நடிகர் கபில் சர்மாவுக்கு(Kapil Sharma) சொந்தமான ஹோட்டல் உள்ளது. இந்த ஹோட்டல் மீது கடந்த ஜூலை மாதம் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்துக்கு காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்ஜித் சிங் லட்டி(Harjit Singh Latty) பொறுப்பேற்றிருந்தார். கப்ஸ் கஃபே(Kap’s Café) என அழைக்கப்படும் இந்த ஹோட்டல் கடந்த […]

இலங்கை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்றிலிருந்து அமலுக்கு வரும் புதிய நடைமுறை

  • October 17, 2025
  • 0 Comments

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளுக்கு விசேட அறிவிப்பு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படும் பயணிகள், தங்கள் திட்டமிடப்பட்ட விமான நேரத்திற்கு நான்கு மணி நேரத்திற்கு முன்பே பதிவு செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த நடைமுறை இன்று ( 17) நண்பகல் 12 மணிமுதல் அமுல்படுத்தப்படும் என்று நிர்வாகம் அறிவித்துள்ளது. புதிய நடவடிக்கை பயணிகளின் வசதியை மேம்படுத்துவதையும், குறிப்பாக உச்ச பயண நேரங்களில், சீரான […]

உலகம்

பிலிப்பைன்ஸில் (Philippines) சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு!

  • October 17, 2025
  • 0 Comments

பிலிப்பைன்ஸின் (Philippines)  மிண்டானாவ் (Mindanao)  தீவின் கிழக்குப் பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. 6.1 ரிக்டர் அளவில் பதிவான இந்நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. மிண்டானாவ் (Mindanao)  தீவின் கிழக்குப் பகுதியில் கடந்த வாரங்களில்  7.4 மற்றும் 6.7 என இரண்டு வலுவான நிலநடுக்கங்கள் இந்த மாதத்தில் மாத்திரம் ஏற்பட்டுள்ளன. சமீபகாலமாக பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

விளையாட்டு

மகளிர் உலக கிண்ண கிரிக்கெட் – இன்று மோதும் இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகள்

  • October 17, 2025
  • 0 Comments

மகளிர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை மற்றும் தென்னாபிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவுள்ளது. இந்த போட்டி ஆர்.பிரேமதாஸ விளையாட்டரங்கில் பிற்பகல் 3.00 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது. மகளிர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா அணி 9 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலாவது இடத்தில் உள்ளது. 7 புள்ளிகளுடன், இங்கிலாந்து அணி 2 ஆவது இடத்திலும், 6 புள்ளிகளுடன் தென்னாபிரிக்க அணி மூன்றாவது இடத்திலும் உள்ளன. அதேநேரம், 4 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் இந்திய […]

உலகம்

H-1B விசா கட்டண உயர்வு – ட்ரம்பின் முடிவுக்கு எதிராக வழக்குத்தாக்கல்!

  • October 17, 2025
  • 0 Comments

H-1B விசா விண்ணப்பங்களுக்கு $100,000 கட்டணம் விதிக்கும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் திட்டத்தினை எதிர்த்து அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. புதிய கட்டணம் சிறு மற்றும் நடுத்தர வணிகங்களை பாதிக்கும் என்றும் கூட்டாட்சி சட்டத்தை மீறும் என்றும் கூறி அமெரிக்க வர்த்தக சபை வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த திட்டத்தினால் அமெரிக்காவில் தொழில்வாய்ப்புகளைப்  பெறுபவர்கள்  கணிசமாகக்  குறைவார்கள் எனவும் இதனால் அமெரிக்க முதலாளிகளுக்கு, குறிப்பாக தொடக்க நிறுவனங்கள், சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் […]

error: Content is protected !!