உலகம்

பிலிப்பைன்ஸில் (Philippines) சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு!

  • October 17, 2025
  • 0 Comments

பிலிப்பைன்ஸின் (Philippines)  மிண்டானாவ் (Mindanao)  தீவின் கிழக்குப் பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. 6.1 ரிக்டர் அளவில் பதிவான இந்நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. மிண்டானாவ் (Mindanao)  தீவின் கிழக்குப் பகுதியில் கடந்த வாரங்களில்  7.4 மற்றும் 6.7 என இரண்டு வலுவான நிலநடுக்கங்கள் இந்த மாதத்தில் மாத்திரம் ஏற்பட்டுள்ளன. சமீபகாலமாக பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

விளையாட்டு

மகளிர் உலக கிண்ண கிரிக்கெட் – இன்று மோதும் இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகள்

  • October 17, 2025
  • 0 Comments

மகளிர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை மற்றும் தென்னாபிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவுள்ளது. இந்த போட்டி ஆர்.பிரேமதாஸ விளையாட்டரங்கில் பிற்பகல் 3.00 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது. மகளிர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா அணி 9 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலாவது இடத்தில் உள்ளது. 7 புள்ளிகளுடன், இங்கிலாந்து அணி 2 ஆவது இடத்திலும், 6 புள்ளிகளுடன் தென்னாபிரிக்க அணி மூன்றாவது இடத்திலும் உள்ளன. அதேநேரம், 4 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் இந்திய […]

உலகம்

H-1B விசா கட்டண உயர்வு – ட்ரம்பின் முடிவுக்கு எதிராக வழக்குத்தாக்கல்!

  • October 17, 2025
  • 0 Comments

H-1B விசா விண்ணப்பங்களுக்கு $100,000 கட்டணம் விதிக்கும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் திட்டத்தினை எதிர்த்து அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. புதிய கட்டணம் சிறு மற்றும் நடுத்தர வணிகங்களை பாதிக்கும் என்றும் கூட்டாட்சி சட்டத்தை மீறும் என்றும் கூறி அமெரிக்க வர்த்தக சபை வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த திட்டத்தினால் அமெரிக்காவில் தொழில்வாய்ப்புகளைப்  பெறுபவர்கள்  கணிசமாகக்  குறைவார்கள் எனவும் இதனால் அமெரிக்க முதலாளிகளுக்கு, குறிப்பாக தொடக்க நிறுவனங்கள், சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் […]

உலகம்

உலகளவில் மில்லியன் கணக்கானோர் கடுமையான பட்டினிக்கு தள்ளப்படும் அபாயம்

  • October 17, 2025
  • 0 Comments

உலகளவில் சுமார் 14 மில்லியன் பேர் கடுமையான பட்டினிக்கு தள்ளப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உலக உணவுத் திட்ட அமைப்பு வெளியிட்டுள்ள எச்சரிக்கைக்கமைய, நன்கொடை வழங்குவோரின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதால், இந்த அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் உலகம் முழுவதும் உணவு நெருக்கடி தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில், கொவிட் 19 பெருந்தொற்றுக்கு முன் 135 மில்லியன் பேர் பட்டினியால் பாதிக்கப்பட்டிருந்தனர். தற்போது, இது 319 மில்லியனாக அதிகரித்துள்ளதாக உலக உணவுத் திட்ட அமைப்பு தெரிவித்தது. […]

பொழுதுபோக்கு

வெப் தொடரில் தனி இடம் பிடித்த “ஹார்ட் பீட்” -க்கு கிடைத்த விருது

  • October 17, 2025
  • 0 Comments

இன்றைய காலக்கட்டத்தில் சினிமா சின்னத்திரை சீரியல்களைத்தாண்டி வெப் சீரிஸ் என்ற புது அத்தியாயம் தொடங்கப்பட்டுள்ளது. ஓடிடி தளங்களில் மட்டுமே பார்க்கக்கூடிய இந்த தொடர்களுக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றார்கள். இவற்றில், சோனி லைவ் ஓடிடி, ஆஹா தமிழ் ஓடிடி, டெண்ட்கொட்டா ஓடிடி, நெக்ஸ்ட் ஓடிடி, ஜீ5 ஓடிடி, அமேசான் பிரைம் ஓடிடி, நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி, ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி என தளங்கள் இருக்கின்றன. இதில் டெலி பேக்டரி தயாரித்துள்ள இந்த தொடர் ஜியோ ஹாட்ஸ்டார் ஓ.டி.டி […]

இலங்கை

இலங்கை முழுவதும் இடம்பெற்ற சாலை விபத்துகளில் 08 பேர் பலி!

  • October 17, 2025
  • 0 Comments

இலங்கை முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் இடம்பெற்ற சாலை விபத்துகளில்  மூன்று பெண்கள் உட்பட எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். தம்புத்தேகம, மாதம்பே, ஊர்காவற்றுறை, ஹபராதுவ, மதவாச்சி, கம்பஹா மற்றும் கடவத்த ஆகிய பகுதிகளில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், இலங்கையில் 1,256 சாலை விபத்துகளில் 1,332 பேர் உயிரிழந்தனர். இந்த ஆண்டு செப்டம்பர் 17 வரை, 1,843 வாகன விபத்துகள் பதிவாகியுள்ளன, இதில் 1,960 பேர் […]

உலகம்

தாய்லாந்தில் மனைவிக்காக வீட்டு வாசலில் காத்திருந்த பார்வையற்ற கணவருக்கு அதிர்ச்சி

  • October 17, 2025
  • 0 Comments

தாய்லாந்தில், பார்வையற்ற கணவர் வீட்டுக்கு வெளியே காத்திருந்தபோது, அவரது மனைவி வீட்டிற்குள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 53 வயதான தாய்லாந்து பெண், இரண்டு மாடி வீட்டில் உயிரிழந்ததாக Bangkok Post செய்தி வெளியிட்டுள்ளது. அவரது கணவர் ஜெர்மனியைச் சேர்ந்தவராகும். கடந்த ஓராண்டாக இந்த தம்பதியினர் அந்த வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தனர். விபத்தில் கணவர் பார்வையை முழுவதுமாக இழந்தவர் என்பதால், மனைவியின் மரணத்தை அறிய முடியாமல், நீண்ட நேரம் அவருக்காக வீட்டுக்கு வெளியே காத்திருந்ததாகக் கூறப்படுகிறது. […]

இலங்கை

இலங்கையில் முதல் முறையாக நான்கு இலட்சத்தை தாண்டிய தங்கத்தின் விலை!

  • October 17, 2025
  • 0 Comments

உலக அளவில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இலங்கையில் தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இந்த ஏற்றத்திற்கு ஏற்ப, புறக்கோட்டை தங்க சந்தையில் 22 காரட் தங்கத்தின் விலை இன்று (17) முதல் முறையாக  379,200 ரூபாயாக  உயர்ந்துள்ளது. இதற்கிடையில், 24 காரட் தங்கத்தின் விலை இன்றைய நிலவரப்படி 410,000 ரூபாவாக  உயர்ந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

வாழ்வியல்

வாயிலுள்ள பாக்டீரியாவால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் – புதிய ஆய்வில் அதிர்ச்சி தகவல்

  • October 17, 2025
  • 0 Comments

வாய்வழியான சுகாதாரத்தை சரியான முறையில் பின்பற்றாதவர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக புதிய ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது. வாய்வழி சுகாதாரக்குறைவால், குறிப்பாக வாயில் வாழும் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளால் கணையப் புற்றுநோயை உருவாக்கும் அபாயம் உள்ளதாக தெரியவந்துள்ளது. இதன் ஆபத்து மூன்று மடங்காக அதிகரிக்கக்கூடும் என்று நியூயோர்க் பல்கலைக்கழக மருத்துவ பல்கலைக்கழகம் நடத்திய புதிய ஆய்வு தெரிவித்துள்ளது. ஜமா ஒன்கொலொஜி (JAMA Oncology) இதழில் வெளியான இந்த ஆய்வில், 900 பேரின் உமிழ்நீர் மாதிரிகள் ஒன்பது ஆண்டுகளுக்கு மேல் […]

ஐரோப்பா

ஜேர்மனுக்கான விமான சேவைகளை குறைக்கும் ரயன்ஏர் (Ryanair) விமான நிறுவனம்!

  • October 17, 2025
  • 0 Comments

ஐரோப்பிய நாடுகளில் குளிர் பருவம் ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில்  ரயன்ஏர் (Ryanair) விமான நிறுவனம் கணிசமான விமானங்களை குறைப்பதாக அறிவித்துள்ளது. அறிவிப்பின்படி ஜெர்மனிக்கு செல்லும் சில விமானங்கள் குறைக்கப்பட்டுள்ளன. இதனால் பெர்லின் (Berlin), ஹாம்பர்க் (Hamburg) மற்றும் மெம்மிங்கன் (Memmingen) உட்பட ஒன்பது விமான நிலையங்களில் 24 வழித்தடங்கள் இரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மே 2024 முதல் விமான வரி உயர்வை திரும்பப் பெறுவதற்கும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு கட்டணங்களைக் குறைப்பதற்கும் பெர்லின் தனது கோரிக்கைகளை நிறைவேற்றத் […]

error: Content is protected !!