உலகம் செய்தி

மடகாஸ்கரின் ஜனாதிபதியாக பதவியேற்ற ராணுவ தளபதி மைக்கேல் ராண்ட்ரியானிரினா (Michel Randrianirina)

  • October 17, 2025
  • 0 Comments

இந்தியப் பெருங்கடல் தேசத்தை இராணுவம் கைப்பற்றிய சில நாட்களுக்குப் பிறகு, மடகாஸ்கரின் புதிய ஜனாதிபதியாக CAPSAT ராணுவ தளபதி மைக்கேல் ராண்ட்ரியானிரினா (Michel Randrianirina) பதவியேற்றுள்ளார். தலைநகர் அன்டனனரிவோவில் (Antananarivo) உள்ள அரசியலமைப்பு நீதிமன்றத்தில் இந்த பதவியேற்பு விழா நடைபெற்றது. தனது முதல் உரையில், முன்னாள் ஜனாதிபதி ஆண்ட்ரி ராஜோலினாவை (Andry Rajoelina) நாட்டை விட்டு வெளியேறத் தூண்டிய மற்றும் அவரது பதவி நீக்கத்திற்கு வழிவகுத்த இளைஞர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும், “நாட்டின் நிர்வாகம், பொருளாதாரம் மற்றும் […]

உலகம்

ஈரான் மீது மீண்டும் தடை விதித்துள்ள நியூசிலாந்து

  • October 17, 2025
  • 0 Comments

ஈரான் தனது அணுசக்தி கடமைகளை நிறைவேற்றாதது குறித்த கவலைகள் காரணமாக நியூசிலாந்து ஈரான் மீது மீண்டும் தடைகளை விதித்து வருவதாக வெளியுறவு அமைச்சர் வின்ஸ்டன் பீட்டர்ஸ்( Winston Peters) இன்று(17) ஒரு அறிக்கையில் தெரிவித்தார். 2015 ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்டு அக்டோபர் 18 முதல் நடைமுறைக்கு வரும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட கூட்டு விரிவான செயல் திட்டத்தின் விதிமுறைகளை ஈரான் பின்பற்றாததன் விளைவாக ஐக்கிய நாடுகள் சபையின் தடைகளை மீண்டும் விதித்ததாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஈரானிய […]

புகைப்பட தொகுப்பு பொழுதுபோக்கு

ஜீ தமிழ் குடும்ப விருதுகள் விழாவில் இலங்கை நட்சத்திரங்கள்

  • October 17, 2025
  • 0 Comments

ஜீ தமிழ் என்றாலே சீரியல்களை விட ரியாலிட்டி ஷோக்கள், அதிலும், சரிகமப நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் பிரபல்யமானது. இதில் குறிப்பாக ஈழத்து இளைஞர் யுவதிகளுக்கு முக்கிய இடத்தை சரிகமப வழங்குகின்றது. அந்த வகையில் சரிகமப லிட்டில் சாம்ப் பட்டத்தை வென்ற யாழ்ப்பாணத்துச் சிறுமி கில்மிஷா ஜீ  குடும்ப விருதுகள் விழாவில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதில் ஏராளமான போட்டியாளர்களும், வெற்றியாளர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. “ஈழத்து இசைக்குயில் எனும் இசைக்கான மாபெரும் அடையாளத்தை சரிகமபா வாயிலாக எனக்கு வழங்கிய […]

இலங்கை

தெற்கு கடலில் 53 கிலோ ஹெரோயினை ஏற்றிச்சென்ற படகு ஒன்றை சுற்றிவளைத்த கடற்படை

  • October 17, 2025
  • 0 Comments

இலங்கைக்கு தெற்கே உள்ள சர்வதேச கடற்பரப்பில் போதைப்பொருட்களை ஏற்றிச் சென்றதாகக் கூறப்படும் பல நாள் மீன்பிடிப் படகு ஒன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. அதன்படி, படகில் மொத்தம் 53 கிலோகிராம் ஹெராயின் கொண்டு செல்லப்பட்டதாக இலங்கை கடற்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். மேலும் தற்சமயம் குறித்த படகு காலி துறைமுகத்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதன்போது படகில் இருந்த 5 பேர் கைது செய்யப்பட்டதாகவும் ஆரம்பக் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை

இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்த காவல்துறை – சிக்கிய மூவர்

  • October 17, 2025
  • 0 Comments

இஷாரா செவ்வந்திக்கு தங்குமிடம் வழங்கிய ஒரு காவல்துறை கான்ஸ்டபிள் கொழும்பு குற்றப்பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த காவல்துறை கான்ஸ்டபிள் அளுத்கம பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் ஒரு அதிகாரியாகும. அத்துடன் இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. காவல்துறை கான்ஸ்டபிள், கான்ஸ்டபிளின் மனைவியின் தாய் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவைச் சேர்ந்தவரென கருதப்படும் “மாத்தறை ஷான்” என்பவரின் நெருங்கிய சகா ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தக் காவல்துறை […]

இந்தியா

குழந்தைக்கு வழங்கப்பட்ட மருந்து போத்தலினுள் இருந்த புழுக்கள் – இந்தியாவில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்!

  • October 17, 2025
  • 0 Comments

இருமல் மருந்து விவகாரத்தை அடுத்து அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட மருந்துக் கரைசலில் புழுக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் மத்தியப் பிரதேசத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குவாலியர்(Gwalior) மாவட்டம் மொரார்(Morar) நகரில் செயல்படும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த குழந்தைக்கு அசித்ரோமைசின்(Azithromycin) நோய் எதிர்ப்பு மருந்து வழங்கப்பட்டது. அதை வாங்கிய குழந்தையின் தாய், உற்றுக் கவனித்தபோதுதான் மருந்துப் போத்தலினுள் பல புழுக்கள் இருந்தது தெரியவந்தது. கடும் அதிர்ச்சி அடைந்த அவர் மருத்துவமனையில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து உடனடியாக அங்குள்ள அனைத்து […]

பொழுதுபோக்கு

பாகம் இல்லாமல் ஒரே படமாக திரைக்கு வருகின்றது பாகுபலி

  • October 17, 2025
  • 0 Comments

பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகத்தை இணைந்து ஒரே திரைப்படமாக பாகுபலி தி எபிக் என்ற பெயரில் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. படத்தின் கால அளவு 3 மணி நேரம் 44 நிமிஷம் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி இயக்கத்தில் நடிகர்கள் பிரபாஸ், அனுஷ்கா ஷெட்டி, சத்யராஜ் நடிப்பில் பாகுபலி திரைப்படம் உருவானது. கடந்த 2015 ஆம் ஆண்டு திரைக்கு வந்த இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன் இந்திய […]

இலங்கை

புலம்பெயரும் இலங்கை தொழிலாளர்களுக்கு குறைந்த விலை விமான டிக்கட்

  • October 17, 2025
  • 0 Comments

புலம்பெயரும் இலங்கை தொழிலாளர்களுக்கு குறைந்த விலையில் விமான டிக்கட் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாரஹேன்பிட்டியில் உள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் சலுகை விலையில் விமான டிக்கெட்டுகளை வழங்குவதற்கான நிலையம் திறக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்லும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான அரசாங்கத்தின் புதிய திட்டத்திற்கமைய, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரவின் தலைமையில் நிலையம் நேற்று திறந்து வைக்கப்பட்டது. சாதாரண சந்தை விலையை விட குறைந்த விலையில் விமான டிக்கெட்டுகள் […]

உலகம்

மிச்சிகனில்(Michigan) சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலி

  • October 17, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் மிச்சிகனில்(Michigan) உள்ள பாத் டவுன்ஷிப்(Bath Township) பகுதியில் சிறிய ரக விமானம் ஒன்று கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இதனால் அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சி அளித்தது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 3 பயணிகள் உயிரிழந்தனர். விமானம் விபத்துக்குள்ளானதற்கான காரணம் என்ன அல்லது விமானம் எங்கு சென்றது என்பது தற்போது தெளிவாகத் தெரியவில்லை. இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொழுதுபோக்கு

ராப் பாடலில் சாதனை படைக்க இலங்கையில் பிறந்த பெண் தான் “ரத்யா”

  • October 17, 2025
  • 0 Comments

ராப் பாடல் என்பது இலங்கையிலும் சரி உலகளவிலும் சரி ஆண்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர். பெண்களின் பங்களிப்பு என்பது விரல்விட்டு எண்ணும் அளவிலேயே உள்ளது. ஆனால் இந்த தாகத்தை தீர்க்க இலங்கையில் பிறந்தவர் தான் ரத்யா அற்புதராஜா (Rathya Atputharajah). தமிழ் கலைகளில் சொல்லிசை என்பது பழம்பெரும் படைப்புகளுடன் நெருங்கிய தொடர்புபட்ட ஒன்றாகும். நாட்டார் பாடல், நாட்டுக்கூத்து வடிவங்கள் பலவற்றில் ஜதிக்குள் உள்வாங்கப்பட்ட தாள ஆவர்தனங்களுக்கு சொல் வடிவம் வழங்கி பாடப்பட்டும் அமைப்பு பல்லாயிரம் ஆண்டுகளாக பின்பற்றப்பட்டுவருகிறது. ஆனால் […]

error: Content is protected !!