இந்தியா செய்தி

இணையத்தில் வைரலாகும் அம்பானியின் மனைவி – கையில் சிக்கிய ரகசியம்

  • October 17, 2025
  • 0 Comments

இந்தியாவின் கோடீஸ்வர தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் (Mukesh Ambani) மனைவி நீதா அம்பானி (Nita Ambani) தன்வசம் வைத்திருந்த கைப்பை தொடர்பில் பல தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த 12ஆம் திகதி மும்பையில் நடைபெற்ற தீபாவளி விருந்தில் கலந்து கொண்ட நீதா அம்பானி, உலகின் மிக விலையுயர்ந்த கைப்பைகளில் ஒன்றுடன் பங்கேற்றதாக தெரிவிக்கப்படுகிறது. ஆடை வடிவமைப்பாளர் மணீஷ் மல்ஹோத்ராவின் (Manish Malhotra) வீட்டில் நடந்த தீபாவளி விருந்தில் கலந்து கொண்டபோது, ​​2 மில்லியன் டொலருக்கும் அதிகமாக இருந்ததாக […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் நூதனமாக இடம்பெறும் மோசடி – மக்களுக்கு எச்சரிக்கை!

  • October 17, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் காதல் மோசடிகளால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறித்த மோசடியால் £72,000 பவுண்ட்ஸுக்கும் அதிகமான இழப்புகள் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் இவ்வாறான மோசடிகளைத் தடுக்க வங்கிகள் தங்களால் இயன்ற அனைத்தையும் செய்துள்ளதாக நிதி நடத்தை ஆணையம் (FCA) குறிப்பிடுகிறது. 2024/25 நிதியாண்டில் பிரித்தானியாவில் காதல் மோசடியால் £106 மில்லியனுக்கும் அதிகமான தொகை இழக்கப்பட்டுள்ளதாக  லண்டன் நகர காவல்துறையின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இது ஆண்டிற்கு 09 சதவீதம் அதிகரிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  சராசரியாக, பாதிக்கப்பட்டவர்கள் ஒவ்வொருவரும் 11,222 பவுண்ட்ஸ் […]

இலங்கை

இஷாரா செவ்வந்தியை மத்துகமவிற்கு அழைத்துச் சென்ற குற்றப்பிரிவு அதிகாரிகள்

  • October 17, 2025
  • 0 Comments

நேபாளத்தில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட இஷாரா செவ்வந்தியிடம் இருந்து பல தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறான சூழலில், கணேமுல்ல சஞ்சீவவை கொலை செய்துவிட்டு நாட்டை விட்டுத் தப்பிச் செல்வதற்கு முன்பு மறைந்திருந்ததாக கூறப்படும் மத்துகம பகுதிக்கு இஷாரா நேற்று அழைத்து செல்லப்பட்டார். மேலும், அவர் மித்தேனியா பகுதியில் மறைந்திருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பின்னர் அவர் கிளிநொச்சிக்கு சென்று, அங்கிருந்து யாழ்ப்பாணம் செல்வதற்கு முன்பு அந்தப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பல நாட்கள் […]

ஐரோப்பா

ஜெர்மனியில் லொட்டரி (lottery ) மூலம் இராணுவத்திற்கு ஆட்களை சேர்க்கும் முறை – பிளவுப்பட்ட கூட்டணி அரசாங்கம்!

  • October 17, 2025
  • 0 Comments

ஜெர்மனியில் லொட்டரி (lottery ) மூலம் இராணுவத்திற்கு ஆட்களை சேர்க்கும் திட்டத்திற்கு மக்கள் மத்தியில் இருந்து எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இந்த திட்டங்கள்  ஜெர்மனியின் கூட்டணி அரசாங்கத்தைப் பிளவுபடுத்தியுள்ளன. மெர்ஸின் (Friedrich Merz) மைய-வலது கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சி (CDU) மற்றும் அவரது மைய-இடது சமூக ஜனநாயகக் கட்சி (SPD) கூட்டணியை பிளவுப்படுத்தியுள்ளன. ரஷ்யாவின் வளர்ந்து வரும் அச்சுறுத்தலுக்கு பதிலளிக்கும் விதமாக, ஃபிரெட்ரிக் மெர்ஸின் (Friedrich Merz) அரசாங்கம் இளைஞர்களுக்கான புதிய இராணுவ சேவைத் திட்டத்தை உருவாக்க முயற்சித்து […]

உலகம்

டெஸ்லாவின் சைபர்ட்ரக் விற்பனையில் பாரிய வீழ்ச்சி – எலோன் மஸ்க் எடுத்த நடவடிக்கை

  • October 17, 2025
  • 0 Comments

கோடீஸ்வர வர்த்தகரான எலோன் மஸ்க்கின் டெஸ்லாவின் சைபர்ட்ரக் கார் விற்பனையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2024 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டுடன் ஒப்பிடும்போது 2025 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் டெஸ்லாவின் சைபர்ட்ரக் விற்பனை 63 சதவீதம் சரிந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த காலகட்டத்தில் வெறும் 5,385 சைபர்ட்ரக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2025 ஆம் ஆண்டில் இதுவரை விற்பனை செய்யப்பட்ட மொத்த சைபர்ட்ரக்களின் எண்ணிக்கை 16,000 ஆகும். இது ஆண்டுதோறும் 250,000 வாகனங்கள் விற்பனை செய்யப்படும் […]

ஐரோப்பா

லண்டனில் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ள கடையில் தீவிபத்து!

  • October 17, 2025
  • 0 Comments

லண்டனின் தெற்கு பகுதியில் உள்ள கடையொன்றில் நேற்று மாலை தீவிபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. ஃபாரஸ்ட் ஹில்லில் (Forest Hill)  உள்ள பெர்ரி வேலில் (Perry Vale) தீவிபத்து ஏற்பட்டுள்ளது. சுமார் 15 தீயணைப்பு வாகனங்களில் வருகை தந்த 100 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த கட்டிடத்தின் தரைத்தளத்தில்  கடை உள்ளது, அதன் மேல் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளதாக டெலிகிராப் செய்தி வெளியிட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்று […]

இலங்கை செய்தி

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்களால் காத்திருக்கும் ஆபத்து – இலங்கையர்களுக்கு எச்சரிக்கை

  • October 17, 2025
  • 0 Comments

உலகில் சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள், தடுப்பூசிகள் மற்றும் விட்டமின்கள் போன்ற மருந்துகள் எங்கும் இல்லை என தெரியவந்துள்ளது. கொழும்பு தேசிய மருத்துவமனையின் சரும மருத்துவ நிபுணர், வைத்தியர் இந்திரா கஹாவிட்ட இது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். “அழகு நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின்போது கைப்பற்றப்பட்ட இந்த வகை தடுப்பூசிகள் மற்றும் விட்டமின்களிலுள்ள QR குறியீடுகள் செயல்படாதவை. அவை நம்பகத்தன்மையற்றவையாக இருக்கக்கூடும் எனவும் கண்டறியப்பட்டுள்ளது. அழகு நிலைய அதிகாரிகள் திசு திரவ சிகிச்சைகள் (injectable treatments) போன்ற […]

ஐரோப்பா செய்தி

உக்ரைன் போர் விவகாரம் – மீண்டும் ரஷ்ய ஜனாதிபதியை சந்திக்கும் ட்ரம்ப்!

  • October 17, 2025
  • 0 Comments

உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து மேலும் விவாதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர் ஹங்கேரியில் சந்திக்க உள்ளனர். இரு நாடுகளின் தலைவர்களும் நேற்று தொலைபேசி மூலம் பேசி இந்த உடன்பாட்டை எட்டியதாக அதிபர் டிரம்ப் தெரிவித்தார். அதன்படி, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ தலைமையிலான உயர்மட்ட ஆலோசகர்கள் குழு அடுத்த வாரம் ரஷ்ய அதிகாரிகளை சந்திக்க உள்ளது, மேலும் இரு அதிபர்களின் சந்திப்பின் தேதி அங்கு […]

உலகம்

விதிகளை ஹமாஸ் மீறினால் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தும் – ட்ரம்ப் மிரட்டல்

  • October 17, 2025
  • 0 Comments

ஹமாஸ் போர் நிறுத்த விதிகளை மீறினால் இஸ்ரேல் தனது நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கும் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ட்ரம்ப்பின் 20 அம்ச திட்டத்திற்கு இஸ்ரேலும் ஹமாஸ் அமைப்பும் ஒப்புக்கொண்டு போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. அதற்கமைய, ஹமாஸ் வசம் உயிருடன் உள்ள 20 பிணைக் கைதிகள் முதலில் விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில் தற்போது இறந்த சடலங்களை படிப்படியாக இஸ்ரேலிடம் ஒப்படைத்து வருகிறது. பதிலாக இஸ்ரேல், பாலஸ்தீன கைதிகளை படிப்படியாக விடுவித்து வருகிறது. ஹமாஸ் […]

உலகம் செய்தி

ஆஸ்திரேலியாவில் அச்சுறுத்தும் வைரஸ் – பொது மக்களுக்கு விசேட எச்சரிக்கை

  • October 17, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் வேகமாக பரவி வரும் குரங்கு அம்மை வைரஸிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு பொது மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குரங்கு அம்மை வைரஸ் ஒரு தோல் நோய் எனவும் உடல் வெப்பநிலை அதிகரிப்பதற்கு முன்பே காய்ச்சல், இருமல், சளி, தலைவலி மற்றும் உடல் வலி போன்ற அறிகுறிகளைக் காட்டுவதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர். வைரஸால் பாதிக்கப்பட்ட சில நோயாளிகளின் தோலில் தடிப்புகள் ஏற்படுகின்றன, மற்றவர்களுக்கு அப்படி ஏற்படாது. கர்ப்பிணிப் பெண்கள், இதய நோயாளிகள் மற்றும் பலவீனமான நோய் எதிர்ப்பு […]

error: Content is protected !!