இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

இலங்கையில் திடீரென சரிந்த தங்கத்தின் விலை : ஏற்றத்திற்கான காரணம் என்ன?

  • October 18, 2025
  • 0 Comments

இலங்கையில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டிய நிலையில் இன்று மீண்டும் சரிவை சந்தித்துள்ளது. அதன்படி, 22 காரட் தங்கத்தின்  பவுண் ஒன்றின் விலை  360,800 ஆகக் குறைந்துள்ளது. இதே நேரத்தில், நேற்று 410,000 ஆக இருந்த 24 காரட் பவுண் ஒன்றின் விலை இன்று  390,000 ஆகக் குறைந்துள்ளதாக புறக்கோட்டை தங்க சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உலகளாவிய முதலீட்டாளர்கள் பலர் தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கியதன் விளைவாக தங்கத்தின் விலை வரலாறு காணாத ஏற்றத்தை […]

பொழுதுபோக்கு

தமிழ் சினிமாவுக்கு ஒரு புதிய தீபாவளி ; மோதிய படங்களில் வெற்றி யாருக்கு?

  • October 18, 2025
  • 0 Comments

ஒவ்வொரு வருடமும் தீபாவளிக்கு பெரிய தலைகளின் திரைப்படங்கள் திரைக்கு வருவதுதான் வழமையாக இருந்தது. ஆனால் இந்த தீபாவளி சற்று வித்தியாசம் தான். அதாவது இம்முறை இளம் ஹீரரோக்களுக்கு ஒரு வாய்ப்பாக மாறிவிட்டது. இளம் தலைமுறை இயக்குநர்களும் நடிகர்களும் இம்முறை தீபாவளியில் மோதியுள்ளனர். இது தமிழ் சினிமாவுக்கு சற்று வித்தியாசமான மற்றும் புதுமையான பண்டிகைதான். டியூட், பைசன், டீசல் – மூன்றும் வேறு வேறு கதை களங்களை கொண்ட படங்கள் தீபாவளி ரேசில் குதித்துள்ளன. டியூட் பிரதீப் ரங்கநாதன் […]

உலகம்

புற்றுநோய் பரிசோதனைகளில் ஏற்பட்டுள்ள வெற்றி – நீண்டகால பாதிப்பில் இருந்து பாதுகாப்பு!

  • October 18, 2025
  • 0 Comments

புற்றுநோய் பரிசோதனைகள் ஆரம்ப காலத்தில் இருந்ததை விட தற்போது ஏழு மடங்கு பயனுள்ளதாக இருப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன. புற்றுநோய்களைக் கண்டறிய  இரத்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவது வழமையான ஒரு நிகழ்வாகும். இதன்படி 25000 பேரை கொண்டு நடத்தப்பட்ட இரத்த பரிசோதனை நிகழ்வில்  62 சதவீத புற்றுநோய்கள் சரியாக கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. “ஹோலி கிரெயில்” (Holy Grail) என்று அழைக்கப்படும் இந்த சோதனை, நோயை முன்கூட்டியே கண்டறிவதற்கு முக்கியமாக இருக்கும் என்றும் இந்த ஆண்டு இறுதியில் தேசிய புற்றுநோய் திட்டத்தில் கூடுதல் […]

ஐரோப்பா

போர்த்துக்கலில் பொது இடங்களில் முகத்தை மூடி அணியும் ஆடைகளுக்கு தடை!

  • October 18, 2025
  • 0 Comments

பாலினம் அல்லது மத” காரணங்களுக்காக பொது இடங்களில் முகத்தை மூடி அணியும் ஆடைகளுக்கு  தடை செய்யும் சட்டமூலம் போர்த்துக்கல் நாடாளுமன்றத்தில் நேற்று  நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டமூலம் பெரும்பாலும் இஸ்லாமிய மதத்தினரை குறிவைப்பதாக கருதப்படுகிறது. குறித்த சட்டமூலமானது தீவிர வலதுசாரி சேகா (far-right Chega party) கட்சியால் முன்மொழியப்பட்டது. புதிய விதிகளின்படி விமானங்கள், இராஜதந்திர வளாகங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் முகத்தை மூடி அணியும் ஆடைகள் தடை செய்யப்பட்டுள்ளன. சட்டத்தினை மீறுபவர்களுக்கு   200 யூரோக்கள் முதல் 4,000 யூரோக்கள் […]

இலங்கை

மீண்டும் வந்தார் வடிவேல் சுரேஷ்: அரசுக்கு ஐஸ் வைப்பு!

  • October 18, 2025
  • 0 Comments

மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 2 ஆயிரம் ரூபாவுக்கு மேல் சம்பள உயர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான வடிவேல் சுரேஷ் வலியுறுத்தினார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு வலியுறுத்தினார். “சம்பள நிர்ணயசபைக் கூட்டம் நடைபெற்றது. இதன்போது எமது பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நல்ல முடிவு கிடைக்கும் என எதிர்பார்த்தோம். எனினும், அது நடக்கவில்லை. […]

உலகம்

எல்லை அருகே பாகிஸ்தான் வான்வழித் தாக்குதலில் 3 ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் உட்பட 8 பேர் பலி

  • October 18, 2025
  • 0 Comments

பாகிஸ்தான் எல்லைக்கு அருகே நடந்த வான்வழித் தாக்குதலில் 3 ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, அடுத்த மாதம் பாகிஸ்தான் மற்றும் இலங்கையுடன் நடைபெறவிருந்த முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் இருந்து விலகுவதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை (ACB) அறிவித்துள்ளது. நாட்டின் மூன்று உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் பாகிஸ்தான் விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டதை அடுத்து இந்த முடிவை எடுத்ததாக அந்நாட்டு கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. வீரர்கள் நட்பு போட்டியொன்றில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் எல்லையில் உள்ள […]

உலகம்

ஐவரி கோஸ்டில் ( Ivory Coast) அரசின் முடிவுக்கு எதிரான போராட்டம் – பலருக்கு சிறை தண்டனை!

  • October 18, 2025
  • 0 Comments

ஐவரி கோஸ்டில் ( Ivory Coast) வரவிருக்கும் தேர்தலில் எதிர்கட்சி வேட்பாளர் விலக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் பங்கேற்ற 26 எதிர்க்கட்சி போராட்டக்காரர்களுக்கு 36 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த போராட்டத்தில் ஏறக்குறைய 237 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வழக்கறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். அவர்களில் நூற்றுக்கணக்கானோர் விசாரணைகளை எதிர்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். மேற்கு ஆப்பிரிக்க நாடான அந்நாட்டில் வரும் 25 ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி அலசேன் ஔட்டாராவுக்கு (Alassane […]

உலகம்

எல்லையில் மோதிக்கொள்ளும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் – தோஹாவில் (Doha) ஒன்றுக்கூடிய தலைவர்கள்!

  • October 18, 2025
  • 0 Comments

ஆப்கானிஸ்தான் (Afghan)மற்றும் பாகிஸ்தானுக்கு (Pakistan) இடையில் சமீபகாலமாக இடம்பெற்றுவரும் மோதலை தவிர்க்க இரு நாட்டு பிரதிநிதிகளும் உடன்பட்டுள்ளனர். இதற்கமைய மோதலை தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தை கட்டாரின் தலைநகரமான தோஹாவில் (Qatari capital Doha) நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் (Afghan) பிரதிநிதிகள் குழுவில் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பின் தலைவர் ஆகியோர் அடங்குவர் என்று தலிபான் (Taliban) அரசாங்கம் கூறியுள்ளது. அதேபோல் பாகிஸ்தானை (Pakistan) பிரதிநிதித்துவப்படுத்தி குழுவொன்று சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் யார் யார் சென்றார்கள் என்ற […]

இலங்கை

மேலும் நீட்டிக்கப்பட்டுள்ள 11 மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை

  • October 18, 2025
  • 0 Comments

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்(NBRO) 11 மாவட்டங்களுக்கு விடுத்திருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கண்டி மாவட்டத்தின் உடுநுவர மற்றும் உடுதும்பர, கேகாலை மாவட்டத்தின் புலத்கொஹுபிட்டிய மற்றும் யட்டியாந்தோட்டை, மாத்தளை மாவட்டத்தின் பல்லேபொல மற்றும் அம்பன்கோறளை பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு இரண்டாம் கட்ட எச்சரிக்கை (நிலை 2) விடுக்கப்பட்டுள்ளது. பதுளை(Badulla) மாவட்டத்தின் ஹல்தும்முல்ல மற்றும் ஊவபரணகம, காலி(Galle) மாவட்டத்தின் நெலுவ, கம்பஹா(Gampaha) மாவட்டத்தின் அத்தனகல்ல, கண்டி(Kandy) மாவட்டத்தின் தெல்தோட்ட மற்றும் தொழுவ, கேகாலை(Kegalle) மாவட்டத்தின் […]

பொழுதுபோக்கு

துருவ் விக்ரம் மிரட்டியுள்ள பைசன் : வசூல் எவ்வளவு தெரியுமா?

  • October 18, 2025
  • 0 Comments

விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நேற்று வெளியாகியிருக்கும் படம் பைசன் காளமாடன். கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படத்தை மாரி செல்வராஜ் உருவாக்கியுள்ளார். இப்படத்தில் பசுபதி, லால், அமீர், ரஜிஷா விஜயன், அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடித்துள்ளனர். நிவாஸ் கே. பிரசன்னா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மக்கள் மத்தியில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில், பைசன் திரைப்படம் உலகளவில் முதல் நாள் 5 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளது. […]

error: Content is protected !!