ஐரோப்பா

தொடர்ச்சியாக வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ள இங்கிலாந்து மருத்துவர்கள்!

  • October 24, 2025
  • 0 Comments

இங்கிலாந்தில் உள்ள மருத்துவர்கள் நவம்பர் மாதத்தில் தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என பிரித்தானிய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. நவம்பர் மாதம்  14 ஆம் திகதி காலை 7 மணி முதல் நவம்பர் மாதம் 19 ஆம் திகதி காலை 7 மணி வரை தொடர்ந்து ஐந்து நாட்கள் இந்த வேலைநிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இரண்டாம் நிலை மருத்துவர்கள் என அறியப்படும் மருந்துவர்கள் நிரந்த பணிநியமனம் கோரி அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அத்துடன் சம்பள […]

இந்தியா முக்கிய செய்திகள்

இந்தியாவில் கோர விபத்து – 20 பேர் பலி – பலர் படுகாயம்

  • October 24, 2025
  • 0 Comments

இந்தியாவில் இன்று காலையில் ஏற்பட்ட தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். கர்னூல் மாவட்டம் அருகே உள்ள சின்னா டெக்கூர் கிராமத்தில், இன்று அதிகாலையில் ஐதராபாத்திலிருந்து பெங்களூர் நோக்கிச் சென்ற பேருந்தே விபத்துக்குள்ளானது. தனியார் பேருந்து ஒன்று இரு சக்கர வாகனத்துடன் மோதியதால், பெட்ரோல் தாங்கி வெடித்த நிலையில் தீ பிடித்து எரிந்துள்ளது. இதன் காரணமாக 42 பயணிகள் பயணித்த பேருந்தில், 20 பேர் உயிரிழந்துள்ளனர். 12 பயணிகள் சிறு காயங்களுடன் தப்பியுள்ள நிலையில், […]

கருத்து & பகுப்பாய்வு

மருந்துகளுக்குக் கட்டுப்படாத சூப்பர்பாக்டீரியாக்கள் – ஆண்டுக்கு 50 லட்சம் உயிர்கள் ஆபத்தில்

  • October 24, 2025
  • 0 Comments

மனிதகுலத்தின் மிகப்பெரிய மருத்துவக் கண்டுபிடிப்பான ஆன்டிபயாடிக் (Antibiotics) மருந்துகள் தங்கள் சக்தியை இழந்து வருவதாக உலக சுகாதார அமைப்பு (WHO) அதிர்ச்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. மருந்துகளுக்குக் கட்டுப்படாத ‘சூப்பர்பாக்டீரியாக்கள்’ (Superbactéries) பரவல், உலகை ஒரு கொடிய ஆபத்தின் விளிம்பிற்குக் கொண்டு வந்துள்ளது. இதனால், சாதாரண காயங்கள் மற்றும் பொதுவான தொற்றுகள்கூட மரணத்தை விளைவிக்கும் கொடிய நோய்களாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக WHO தெரிவித்துள்ளது. 2023ஆம் ஆண்டு ஆய்வகத்தில் உறுதிப்படுத்தப்பட்ட ஒவ்வொரு 6 பாக்டீரியா தொற்றுகளில் 1 தொற்று, […]

இலங்கை

இஷாரா செவ்வந்தி இந்தியாவுக்குத் தப்பிச் செல்லப் பயன்படுத்திய படகு கைப்பற்றல்

  • October 24, 2025
  • 0 Comments

இஷாரா செவ்வந்தி நாட்டிலிருந்து இந்தியாவுக்குத் தப்பிச் செல்லப் பயன்படுத்திய படகு, கைப்பற்றப்பட்டுள்ளது. கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் யாழ்ப்பாணம் – அராலி பகுதியில் இந்த படகு கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கைப்பற்றப்பட்ட இந்தப் படகு, யாழ்ப்பாணம் தலைமையக காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், இஷாரா கிளிநொச்சியில் தலைமறைவாகியிருக்க உதவியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட ஒருவர், கொழும்பு புதுக்கடை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இஷாரா செவ்வந்திக்கு உதவி புரிந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள மேலும் நான்கு […]

ஐரோப்பா

மீண்டும் ஐரோப்பிய வான்வெளியில் ஊடுறுவிய ரஷ்ய ஜெட் விமானங்கள்!

  • October 24, 2025
  • 0 Comments

ரஷ்ய ஜெட் விமானங்கள் ஐரோப்பிய வான்வெளியில் அத்துமீறி நுழைந்ததை அடுத்து, நேட்டோ மீண்டும் போர் விமானங்கள் நிலைநிறுத்தப்பட்டுளு்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ரஷ்ய இராணுவம் தொடர்ந்து துணிச்சலான ஊடுருவல்களைச் செய்து வருவதால், ஐரோப்பிய வான்வெளியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த  அத்துமீறலுக்கு பதிலளிக்கும் விதமாக இராணுவக் கூட்டணி நேற்று மாலை இரண்டு ஸ்பானிஷ் யூரோஃபைட்டர் ( Spanish Eurofighter) விமானங்களை அனுப்பியதாக தெரிவித்துள்ளது. இரண்டு ஜெட் விமானங்கள் – ஒரு Su-30 போர் விமானம் மற்றும் II-78 எரிபொருள் நிரப்பும் […]

இலங்கை

இலங்கையில் இரண்டு தேங்காய்களை திருடிய நபரை கொன்றவருக்கு மரண தண்டனை!

  • October 24, 2025
  • 0 Comments

இரண்டு தேங்காய்களை திருடிய நபர் ஒருவரை இரும்பினால் அடித்துக்கொன்ற நபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த உத்தரவை ஹோமாகம உயர் நீதிமன்ற நீதிபதி நவரட்ண மாரசிங்க, நேற்று தொடர்புடைய உத்தரவை பிறப்பித்துள்ளார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் மீது சட்டமா அதிபர் 2001 ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார். இந்த நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குள் உள்ள நியதகலாவில் உள்ள ஒரு நெல் வயலில் தேங்காய் அரைக்கப் பயன்படுத்தப்படும் இரும்பினால் ஒருவரை அடித்துக் கொன்றதற்காக தண்டனைச் சட்டத்தின் […]

அறிவியல் & தொழில்நுட்பம் செய்தி

செயற்கை நுண்ணறிவு செய்திகளில் தவறான தகவல்கள் – ஆய்வில் தகவல்

  • October 24, 2025
  • 0 Comments

செய்திகள் தொடர்பான கேள்விகளுக்கு செயற்கை நுண்ணறிவு (AI) உதவிக் கருவிகள் பதிலளிக்கும்போது, அதிக அளவில் தவறான அல்லது நம்பகத்தன்மையற்ற தகவல்களை வழங்குவதாக ஒரு புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. பிபிசி ஊடகமும் ஐரோப்பிய ஒலிபரப்புச் சங்கமும் (European Broadcasting Union) இணைந்து நடத்திய இந்த ஆய்வில், ChatGPT, Copilot, ஜெமினி (Gemini) மற்றும் Perplexity ஆகிய முன்னணி AI கருவிகள் வழங்கிய சுமார் 3,000 பதில்கள் ஆராயப்பட்டன. இவற்றில் 45 சதவீத பதில்களில் ஏதோ ஒரு குறைபாடு இருப்பது […]

ஐரோப்பா

ஸ்பெயினில் வினோத திருட்டு – உணவகங்களில் மாயமான 1,100 நாற்காலிகள்

  • October 24, 2025
  • 0 Comments

ஸ்பெயினில் உள்ள உணவகங்களில் இருந்து ஆயிர கணக்கான நாற்காலிகள் திருடப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாற்காலிகளைத் திருடியதாகச் சந்தேகிக்கப்படும் ஏழு பேரைக் காவல்துறை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் ஆறு ஆண்களும், ஒரு பெண்ணும் அடங்குவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர்கள் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயற் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று நம்பப்படுகிறது. சந்தேக நபர்கள் மீது குற்றப்பத்திரிகை பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய இரண்டு மாதங்களில் மட்டும் நாட்டின் 18 […]

உலகம் செய்தி

இஸ்ரேல் வீரர்களைத் தடை செய்த இந்தோனேஷியாவுக்கு நேர்ந்த கதி

  • October 24, 2025
  • 0 Comments

இந்தோனேஷியாவில் எதிர்வரும் காலங்களில் எந்தவொரு சர்வதேச விளையாட்டு நிகழ்ச்சியையும் நடத்த இடமளிக்க கூடாது என சர்வதேச விளையாட்டுக் கூட்டமைப்புகள் (International Sports Federations) கேட்டுக் கொண்டுள்ளது. அண்மையில் ஜகார்த்தாவில் நடைபெற்ற உலக கலைத்துவ ஜிம்னாஸ்டிக் சம்பியன்ஷிப் போட்டிகளில், இஸ்ரேலிய வீர வீராங்கனைகள் பங்கேற்க முடியாதவாறு இந்தோனேஷியா தடை விதித்தது. இந்தத் தடையைத் தொடர்ந்தே இத்தகைய நிலை ஏற்பட்டுள்ளது. இந்தச் செயலை ஒரு பாரபட்சமான நடவடிக்கை எனக் கருதும் சர்வதேச ஒலிம்பிக் குழு (International Olympic Committee), இந்தோனேஷியாவைத் […]

செய்தி

வெளிநாட்டிலிருந்து இலங்கை சென்றவர் நாடுகடத்தல்

  • October 24, 2025
  • 0 Comments

போலியான பிரேசிலிய கடவுச்சீட்டைப் பயன்படுத்தி நாட்டிற்குள் நுழைய முயன்ற செனகல் நாட்டைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு நாடுகடத்தப்பட்டுள்ளார். அவர் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL-218 மூலம் கட்டார் நாட்டின் தோஹாவிலிருந்து வந்ததாக கட்டுநாயக்க விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தனது விமானப் பயண ஆவணங்களை ஆய்வு செய்வதற்காக கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு கவுண்டரில் தனது பிரேசிலிய கடவுச்சீட்டை அவர் சமர்ப்பித்திருந்தார். இதன் […]

error: Content is protected !!