ஐரோப்பா செய்தி

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய விதி அறிமுகம் – ரஷ்யர்களுக்கு அதிரடி கட்டுப்பாடு

  • November 9, 2025
  • 0 Comments

ரஷ்யக் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கான ஷெங்கன் விசா விதிமுறைகளை ஐரோப்பிய ஒன்றியம் கடுமையாக்கியுள்ளது. உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் தொடர்ச்சியான போர் மற்றும் ஐரோப்பிய எல்லைகளில் அதிகரித்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய விதிகளுக்கமைய, ரஷ்யக் குடிமக்கள் இனிமேல் பல ஆண்டுகள் செல்லுபடியாகும் மற்றும் பலமுறை சென்றுவரக்கூடிய ஷெங்கன் விசாவைப் பெறுவது மிகக் கடினமாக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், அவர்கள் ஒவ்வொரு பயணத்திற்கும் புதிய விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டியிருக்கும். மேலும், ரஷ்யக் குடிமக்களின் விண்ணப்பங்களை நெருக்கமாகவும் […]

ஐரோப்பா செய்தி

உக்ரைனில் எரிசக்தி மற்றும் குடியிருப்பு தளங்களை தாக்கிய ரஷ்யா – ஆறு பேர் மரணம்

  • November 8, 2025
  • 0 Comments

உக்ரைனில் எரிசக்தி உள்கட்டமைப்பு மற்றும் குடியிருப்பு இலக்குகள் மீது ரஷ்யா ஒரே இரவில் நூற்றுக்கணக்கான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதை அடுத்து ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். டினிப்ரோ(Dnipro) நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் சபோரிஜியாவில்(Zaporizhia) மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலில் பொல்டாவா(Poltava), கார்கிவ்(Kharkiv) மற்றும் கீவ்(Kyiv) பகுதிகளில் முக்கிய எரிசக்தி வசதிகள் சேதமடைந்துள்ளதாகவும், மின்சாரத்தை மீட்டெடுக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் பிரதமர் யூலியா […]

இந்தியா செய்தி

கொல்கத்தா அருகே கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 4 வயது குழந்தை

  • November 8, 2025
  • 0 Comments

கொல்கத்தா அருகே உள்ள ஹூக்ளியில்(Hooghly), தனது பாட்டியின் அருகில் தூங்கிக் கொண்டிருந்த நான்கு வயது குழந்தை கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பஞ்சாரா(Banjara) சமூகத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட குழந்தை, தாரகேஷ்வரில்(Tarakeshwar) உள்ள ரயில் நிலையம் அருகே கொசு வலையின் கீழ் ஒரு கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த போது தாக்குதல் நடத்தியவர் குழந்தையின் கொசு வலையை வெட்டி கடத்தி சென்றதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். கடத்தப்பட்ட மறுநாள் குழந்தை தாரகேஷ்வர் ரயில்வே உயர் வடிகால் அருகே துஷ்பிரயோகம் […]

உலகம் செய்தி

புளோரிடாவில் மதுபானக் கடைக்கு வெளியே மக்கள் கூட்டம் மீது மோதிய கார் – நால்வர் மரணம்

  • November 8, 2025
  • 0 Comments

புளோரிடாவின்(Florida) டம்பாவில்(Tampa) ஒரு மதுபானக் கடைக்கு வெளியே மக்கள் கூட்டத்தினர் மீது கார் மோதியதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 11 பேர் காயமடைந்துள்ளனர். டம்பாவில் உள்ள நெடுஞ்சாலையில் பொறுப்பற்ற முறையில் ஒட்டி செல்லப்பட்ட காரை காவல்துறையினர் நிறுத்த முயன்ற போது விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திலேயே மூன்று பேர் உயிரிழந்துள்ளனர், மற்றொருவர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் 11 பேர் சிறிய காயங்களுடன் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், புளோரிடாவின் டேட்(Dade) நகரத்தைச் […]

உலகம் செய்தி

உகாண்டாவில் காணாமல் போன கென்ய ஆர்வலர்கள் பாதுகாப்பாக மீட்பு

  • November 8, 2025
  • 0 Comments

ஐந்து வாரங்களுக்கு முன்பு உகாண்டாவில்(Uganda) காணாமல் போன இரண்டு ஆர்வலர்கள் உயிருடன் திரும்பி வந்ததாக கென்யாவில்(Kenya) உள்ள மனித உரிமைகள் குழுக்கள் தெரிவித்துள்ளன. உகாண்டா எதிர்க்கட்சித் தலைவர் போபி வைனை(Bobi Wine) ஆதரித்த ஒரு அரசியல் நிகழ்விற்குப் பிறகு, முகமூடி அணிந்த நபர்கள் பாப் ஜாகி(Bob Njagi) மற்றும் நிக்கோலஸ் ஓயூவை(Nicholas Oyoo) கடத்தி சென்றுள்ளனர். இந்நிலயில், ஆர்வலர் அமைப்பான வோக்கல் ஆப்பிரிக்கா(Vocal Africa), இருவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும், உகாண்டாவின் புசியாவிலிருந்து(Busia) கென்ய தலைநகர் நைரோபிக்கு(Nairobi) அழைத்து […]

இந்தியா செய்தி

இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இரு வங்கதேச பெண்கள் கைது

  • November 8, 2025
  • 0 Comments

பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு, பாதுகாப்பு நடவடிக்கையின் போது, ​​டேராடூனின்Dehradun) படேல் நகர்(Patel Nagar) பகுதியில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவில் வசித்து வந்த இரண்டு வங்கதேச பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நவம்பர் 9ம் திகதி உத்தரகண்ட்(Uttarakhand) மாநிலமாக 25 ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் முக்கிய நிகழ்வை முன்னிட்டு நடத்தப்பட்ட தீவிர சோதனை நடவடிக்கையின் போது குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் வங்கதேசத்தின் பர்குனா(Barguna) மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்வாதி உபாத்யாய் என்ற மரியம் மற்றும் […]

இலங்கை செய்தி

இலங்கை: மித்தெனியவில் சம்பத் மனம்பேரிக்கு சொந்தமான மூன்று வாகனங்கள் பறிமுதல்

  • November 8, 2025
  • 0 Comments

தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்(SLPP) முன்னாள் உள்ளூராட்சி வேட்பாளர் சம்பத் மனம்பேரிக்குச்(Sampath Manamperi) சொந்தமான மூன்று வாகனங்கள் மேற்கு மாகாண வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களில் ஒரு பேருந்து, ஒரு கார் மற்றும் ஒரு கப் ரக வாகனம் ஆகியவை அடங்கும் தெரிவித்துள்ளனர். சம்பத் மனம்பேரியின் மித்தெனிய(Middeniya) பகுதியில் உள்ள வீட்டை சோதனை செய்த போதே குறிப்பிட்ட வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மித்தெனிய, தலாவ(Thalawa) பகுதியில் ஐஸ் போதைப்பொருளை உற்பத்தி […]

உலகம் செய்தி

இந்தியாவில் இருந்து நைஜீரியாவிற்கு நாடு கடத்தப்பட்ட நபர்

  • November 8, 2025
  • 0 Comments

இந்தியாவில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சட்டவிரோதமாக வசித்து வந்த நைஜீரிய(Nigeria) நாட்டவர் ஒருவர், ஹைதராபாத்(Hyderabad) போதைப்பொருள் அமலாக்கப் பிரிவு, வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அலுவலகத்துடன் (FRRO) ஒருங்கிணைந்த முயற்சியில் நாடு கடத்தப்பட்டுள்ளார். விசா காலாவதியாகி தங்கி சட்டவிரோத நடவடிக்கைகளில், குறிப்பாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் வெளிநாட்டினரைத் தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த நாடு கடத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நைஜீரியாவின் இமோ(Imo) மாகாணத்தைச் சேர்ந்த 43 வயதான ஜோன்கென்னடி சுக்வுமேகா ஒகோரோ(Johnkennedy Chukwuemeka Okoro, ஆரம்பத்தில் 2012ம் ஆண்டு […]

செய்தி விளையாட்டு

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான T20 தொடரை கைப்பற்றிய இந்தியா

  • November 8, 2025
  • 0 Comments

2025ம் ஆண்டின் ஆசிய கோப்பை வெற்றியாளர்களான பிரபல இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் T20 தொடர்களில் விளையாடி வருகிறது. அந்தவகையில்,பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெற்ற ஐந்தாவதும் கடைசியுமான T20 போட்டியின் நாணய சுழற்சியை வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தெரிவு செய்தது. முதலில் களமிறங்கிய இந்திய அணி 4.5 ஓவர்களுக்கு விக்கெட் இழப்பின்றி 52 ஓட்டங்கள் பெற்றிருந்த நிலையில் மழை காரணமாக போட்டி இடைநிறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து இடைவிடாது மழை காரணமாக போட்டி […]

உலகம்

கடும் வறட்சியுடன் போராடும் ஈரான் – நீர் விநியோகத்தை குறைக்க பரிசீலனை!

  • November 8, 2025
  • 0 Comments

ஈரானில் கடுமையான வறட்சி நிலவுகின்ற நிலையில்,   தண்ணீர் விநியோகத்தில் கட்டுப்பாடுகளை கொண்டுவர அந்நாட்டு அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கமைய தெஹ்ரானில் வாழும்  10 மில்லியன் மக்களுக்கு அவ்வவ்போது தண்ணீர் விநியோகத்தை நிறுத்த பரிசீலனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஈரானில் இவ்வாண்டில் மழை பொழிவு மிகக் குறைவாக பதிவானதாகவும், சில இடங்களில் மழைபொழிவே பதிவாகவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனால் நீர் விநியோகம் செய்யும் 05 நீர்த்தேக்கங்களில் ஒன்று வரண்டு போயுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். எஞ்சிய நீர்த்தேக்கங்களில் 14 […]

error: Content is protected !!