ஐரோப்பா செய்தி

ஜரோப்பிய நாடுகளில் தாக்குதல் நடத்த சதி திட்டம் – ஜெர்மனியில் பிடிபட்ட நபர்!

  • November 13, 2025
  • 0 Comments

ஜேர்மனியின் செக் (Czech) எல்லைக்கு அருகில் ஹமாஸ் உறுப்பினர் என்று சந்தேகிக்கப்படும் நபரை காவல்துறையினர்  கைது செய்துள்ளனர். குறித்த நபர் நாட்டிற்குள் நுழைந்த சிறிது நேரத்திலேயே கைது செய்யப்பட்டதாக வழக்குறைஞர்கள் நேற்று தெரிவித்துள்ளனர். லெபனானில் பிறந்த குறித்த நபர் ஜெர்மனியிலும் ஐரோப்பாவின் பிற இடங்களிலும் உள்ள இஸ்ரேலிய அல்லது யூத தளங்களைத் தாக்குவதற்காக ஆயுதங்களைப் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக வழக்குறைஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். சந்தேக நபர் கார்ல்ஸ்ரூஹேவுக்கு (Karlsruhe) மாற்றப்படவுள்ளதாகவும், காவலில் வைக்கப்படுவாரா என்பதை தீர்மானிக்க நீதிமன்றத்தின் முன் […]

இலங்கை

எம்.பிகளுக்கான வாகன அனுமதி சீட்டு நிறுத்தப்படுவது பழைய யோசனை!

  • November 13, 2025
  • 0 Comments

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட வாகன அனுமதிச் சீட்டுகளை நிறுத்துவது குறித்து அரசாங்கம் பெருமை பேசுவதாகக் கூறிய இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சாணக,  இந்த திட்டம் 2020 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் காலத்தில் கொண்டுவரப்பட்டதாக சுட்டிக்காட்டியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  2020 ஆம் ஆண்டில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகன அனுமதிச் சீட்டுகளை வழங்குவதை நிறுத்த கோட்டாபய ராஜபக்ச […]

உலகம் செய்தி

AI தொழில்நுட்பத்தை திருமணம் செய்த ஜப்பானிய பெண்!

  • November 13, 2025
  • 0 Comments

ஜப்பானியப் பெண் ஒருவர் ChatGPT என்ற chatbot-இல் உருவாக்கிய AI ஆளுமையை “திருமணம்” செய்து கொண்டுள்ளார். 32 வயதான கனோ என்று மட்டுமே அடையாளம் காணப்பட்ட அந்தப் பெண் கிளாஸ் என்ற AI தொழில்நுட்பத்தை  திருமணம் செய்துக்கொண்டுள்ளார். இந்த திருமணத்தை “2D கதாபாத்திர திருமணங்களில்” நிபுணத்துவம் பெற்ற ஒகயாமா நகர நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. ஆறுதல் மற்றும் ஆலோசனைக்காக ஏஐ தொழில்நுட்பத்தை நாடிய அவர் பின்னர் அதன்பால் ஈர்க்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் கனோவின் “திருமணம்” ஜப்பானில் சட்டப்பூர்வமாக […]

ஐரோப்பா செய்தி

வேலைநேரம் 13 மணித்தியாலம் – சர்சைக்குரிய சட்டத்தை இயற்றிய கிரேக்கம்!

  • November 13, 2025
  • 0 Comments

கிரேக்க அரசாங்கம் தனியார் துறை ஊழியர்கள் ஒரு நாளைக்கு 13 மணித்தியாலம் பணிப்புரிவதற்கான சர்ச்சைக்குரிய சட்டத்தை இயற்றியுள்ளது. ஆனால் விமர்சகர்கள் அதன் சட்டபூர்வமான தன்மையை கேள்விக்குள்ளாக்கியுள்ளனர். தொழில்நுட்ப ரீதியாக இது ஐரோப்பிய ஒன்றியத்தின் வேலை நேர உத்தரவுக்கு இணங்குவதாகவும், நீண்ட நேரம் வேலை செய்தாலும், குறைந்த ஊதியம் வழங்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் புள்ளிவிவர அலுவலகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (OECD) ஆகியவற்றின் தரவுகளின்படி, முழுநேர ஊழியர்கள் ஆண்டுக்கு சுமார் 1,900 மணிநேரம் […]

ஐரோப்பா

2029 அல்லது 2030 ஆம் ஆண்டில் மிகப் பெரிய போருக்கு தயாராகும் ரஷ்யா!

  • November 13, 2025
  • 0 Comments

2029 அல்லது 2030 ஆம் ஆண்டுகளில் ஐரோப்பா மீது ஒரு ‘பெரிய போரை’ கட்டவிழ்த்துவிட ரஷ்யா தயாராகி வருவதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார். ரஷ்யா மற்றுமொரு நில அபகரிப்பிற்கு தயாராகி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். ரஷ்ய இராணுவத் துறையைப் பார்க்கும்போது, ​​அவர்கள் தங்கள் உற்பத்தியை அதிகரித்து வருவதைக் காண்கிறோம். எங்கள் மதிப்பீட்டில், அவர்கள் இந்தப் போரைத் தொடர விரும்புகிறார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் ரஷ்யா மீது அதிக அழுத்தம் கொடுக்க […]

இந்தியா செய்தி

டெல்லியின் பல இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட குற்றவாளிகள்!

  • November 13, 2025
  • 0 Comments

டெல்லி செங்கோட்டை அருகே இடம்பெற்ற குண்டு வெடிப்பு தொடர்பான மேலும் பல தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த சம்பவத்தில் 08 பேர் உயிரிழந்த நிலையில், பயங்கரவாத செயலாக கருதப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட காரை ஓட்டி வந்த டாக்டர் உமர் நபி உட்பட பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய மருத்துவர்கள் இந்தியாவின் பல பாகங்களிலும் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. டிசம்பர் 6 ஆம் திகதி டெல்லி மற்றும் என்சிஆர் பகுதியில் அவர்கள் தாக்குதல் […]

இலங்கை

பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து – இளைஞர் மரணம்!!

  • November 13, 2025
  • 0 Comments

திருகோணமலை -ஹொரவ்பொத்தானை பிரதான வீதி 10 கட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார். இவ்விபத்து இன்று (13) இடம்பெற்றுள்ளது. மஹதிவுல்வெவ பகுதியில் இருந்து தம்பலகாமம் நோக்கி ஆடை தொழிற்சாலைக்கு சென்ற பேருந்துடன்  மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த குறித்த  இளைஞர் மோதியதில்  விபத்து இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் கபுகொல்லாவ-ஆனவிழுந்தான் பகுதியைச் சேர்ந்த எஹியா உல்முதீன் சஹீல் அஹமட் (19வயது) எனவும் தெரியவந்துள்ளது. உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. விபத்து தொடர்பிலான விசாரணைகளை மொரவெவ […]

பொழுதுபோக்கு

நியூயோர்க்கில் மீண்டும் ஜோடியாக சிக்கிய அனிருத் – காவ்யா மாறன்

  • November 13, 2025
  • 0 Comments

பிரபல இசையமைப்பாளரான அனிருத், சமீபத்தில் சன் பிக்சர்ஸ் வாரிசு காவ்யா மாறனுடன் நியூயோர்க்கில் நடந்து சென்றபோது எடுக்கப்பட்ட புதிய வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகின்றது. இருவரும் காதலிப்பதாக முன்னர் வதந்திகள் வந்தாலும், அனிருத் அதை தெளிவாக மறுத்திருந்தார். ஆனால் சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்த படங்கள் மற்றும் வீடியோக்கள் அந்த வதந்திகளுக்கு மீண்டும் உயிர்கொடுத்துள்ளன. இப்போது இருவருக்கும் இடையிலான உறவு குறித்து ரசிகர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் எடுக்கப்பட்ட இந்த […]

பொழுதுபோக்கு

“என் வாழ்க்கையில் விஜய் இருப்பது ஒரு ஆசீர்வாதம்” கண்ணீருடன் ராஷ்மிகா

  • November 13, 2025
  • 0 Comments

நேஷனல் கிரஷ், சென்சேஷனல் கிரஷ் என்றெல்லாம் அன்பாக அழைக்கப்படும் ராஷ்மிகா மந்தனா நடித்த ‘தி கேர்ள்ஃப்ரெண்ட்’ படத்தின் வெற்றி மகிழ்ச்சியில் உள்ளார். சமீபத்தில், படத்தின் வெற்றி விழாவை தயாரிப்பாளர்கள் ஏற்பாடு செய்தனர், இதில் விஜய் தேவரகொண்டா விருந்தினராக கலந்து கொண்டார். இதில் ராஷ்மிகா தனது உரையின் போது, தி கேர்ள்ஃப்ரெண்ட்’ தனது வாழ்க்கையில் எவ்வளவு சிறப்பு வாய்ந்தது என்பதைப் பற்றி பகிர்ந்து கொண்டார். தனது  பாராட்டுகளையும், நன்றிகளையும் தெரிவித்து, கடைசியாக முக்கியமாக, விஜய் தேவரகொண்டா பற்றி பேசியுள்ளார். […]

உலகம்

சிங்கப்பூரில் குழந்தைக்காக பொய்யுரைத்த பெண்ணுக்கு சிறை!

  • November 13, 2025
  • 0 Comments

சிங்கப்பூரில் 42 வயதுடைய பெண் ஒருவர் தனது மகளை ஒரு பிரபலமான தொடக்கப் பள்ளியில் சேர்ப்பதற்காக பொய் உரைத்த குற்றச்சாட்டில் சிறை தண்டனையை எதிர்நோக்கியுள்ளார். தனது விலாசத்தை அவர் மாற்றி கூறியமைக்காகவே அவர் சிறை தண்டனையை எதிர்நோக்கியுள்ளார். இந்நிலையில் குறித்த பெண் நீதிபதியிடம் தனக்கு மீண்டுமொரு வாய்ப்பை வழங்குமாறு கோரியுள்ளார். தன்னாள் சிறைக்கு செல்ல முடியாது எனவும் தனது மகளுக்கு தன்னுடைய உதவி தேவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்தப் பெண் செப்டம்பர் மாதம் பொது ஊழியர்களுக்கு […]

error: Content is protected !!