இலங்கை

இலங்கையில் 2026 ஆம் ஆண்டுக்கான பரீட்சைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

  • November 15, 2025
  • 0 Comments

2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2026ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 09 ஆம் திகதியன்று நடைபெறும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பிற்கமைய, 2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை 2026ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 10ஆம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் 05ஆம் திகதி வரை நடைபெறும் என்று அமைச்சு மேலும் தெரிவிக்கிறது. மேலும், 2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை […]

உலகம்

நுகர்வோர் விலை உயர்வு – அதிகரிக்கும் அழுத்தம் – ட்ரம்ப் எடுத்த நடவடிக்கை

  • November 15, 2025
  • 0 Comments

அமெரிக்காவில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு குறித்து நுகர்வோர் மத்தியில் கவலைகள் அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில், ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மாட்டிறைச்சி, கோப்பி மற்றும் பழங்கள் மீதான இறக்குமதி வரிகளை நீக்கும் உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதம் பல நாடுகள் மீது பரவலான இறக்குமதி வரிகளை டிரம்ப் விதித்திருந்தார். அந்த வரிகள் நுகர்வோர் விலையைப் பாதிக்காது என்று அவரது நிர்வாகம் கூறிவந்தது. இந்த நிலையில், முக்கிய மாட்டிறைச்சி ஏற்றுமதியாளரான பிரேசில் மீதான வரிகளே […]

இலங்கை செய்தி

இலங்கையுடன் பாதுகாப்பு உறவை வலுப்படுத்துகிறது அமெரிக்கா: ஒப்பந்தம் கைச்சாத்து!

  • November 15, 2025
  • 0 Comments

இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான பாதுகாப்பு கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்குரிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இதற்குரிய நிகழ்வு இலங்கை பாதுகாப்பு அமைச்சில் நேற்று (14) நடைபெற்றது. அமெரிக்கா அரசாங்கத்தின் சார்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் மற்றும் மொன்டானா தேசிய காவல்படையின் பிரதி ஜெனரல் பிரிகேடியர் ஜெனரல் Trenton Gibson ஆகியோர் கையெழுத்திட்டனர். இலங்கை அரசாங்கத்தின் சார்பில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா கையெழுத்திட்டார். குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரகாரம் அமெரிக்க பாதுகாப்புத் துறையின் […]

இலங்கை

என்.பி.பி. அரசுடன் இணைவு: பொன்சேகா கூறுவது என்ன?

  • November 15, 2025
  • 0 Comments

“தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துடன் இணைந்து ஒருபோதும் பதவிகளை பெற்றுக்கொள்ளப் போவதில்லை. எனினும், ஊழல் ஒழிப்பு நடவடிக்கைக்கு எனது ஆதரவு வழங்கப்படும்.” என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். “இந்நாட்டை நாசமாக்கியதற்கு பொறுப்பு கூற வேண்டியவர்களே எதிர்வரும் 21 ஆம் திகதி நுகேகொடையில் ஒன்றுகூடுகின்றனர். இந்த தரப்பை நம்புவதற்கு நாட்டு மக்கள் தயாரில்லை.” எனவும் பொன்சேகா குறிப்பிட்டார். “இந்நாட்டை மேற்படி தரப்பினரே மாறி, மாறி ஆட்சி செய்தனர். இக்காலப்பகுதிக்குள் இவர்களால் நாட்டை கட்டியெழுப்ப […]

விளையாட்டு

ஐபிஎல் 2026 – சிஎஸ்கே அணியில் இணைந்த சஞ்சு சாம்சன்! ஜடேஜா வெளியேற்றம்

  • November 15, 2025
  • 0 Comments

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் ஒரு மிகப்பெரிய வீரர் பரிமாற்று ஒப்பந்தத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைகிறார். இதற்குப் பதிலாக, சென்னை சூப்பர் கிங்ஸின் முக்கிய வீரர்களான ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கர்ரன் ஆகியோர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குச் செல்கின்றனர். இது ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு பெரிய மற்றும் எதிர்பாராத பரிமாற்றமாகப் பார்க்கப்படுகிறது. இந்த முடிவை […]

இலங்கை

மாகாண சபைத் தேர்தல் நடக்குமா?

  • November 15, 2025
  • 0 Comments

மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அஞ்சுவதாக முன்வைக்கப்படும் எதிரணிகளின் குற்றச்சாட்டை சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க அடியோடு நிராகரித்துள்ளார். “அடுத்த வருடம் தேர்தல் நிச்சயம் நடத்தப்படும். எதிரணிகள் கூட்டணி வகுத்து வந்தால்கூட ஆளுங்கட்சியே வெற்றிநடைபோடும். எதிரணிகள் மண்கவ்வும் ” எனவும் அவர் குறிப்பிட்டார். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கவிழாது, மக்கள் சக்தி எமக்கு இருக்கின்றது என அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் குறிப்பிட்டார். மாகாணசபைத் தேர்தலை அடுத்த வருடம் நடத்துவதற்கு […]

ஐரோப்பா

ஐரோப்பாவை அழிக்கக் காத்திருக்கும் ரஷ்யாவின் ஐந்தாவது படை! போலந்து பிரதமர் எச்சரிக்கை

  • November 15, 2025
  • 0 Comments

ஐரோப்பிய ஒன்றியத்தை உள்ளிருந்தே அழிப்பதை ரஷ்யா இலக்காகக் கொண்டுள்ளதாகப் போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் குற்றம் சாட்டியுள்ளார். ஐரோப்பிய ஒன்றிய (EU) உறுப்பு நாடுகளுக்குள் இருக்கும் ரஷ்யாவின் ஐந்தாவது படையைப் பயன்படுத்தி இந்தச் சதியை மேற்கொள்ள ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஐரோப்பிய நாடுகளில் மறைமுகமான போர் நடவடிக்கையை புட்டின் ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாகப் போலந்து பிரதமர் குறிப்பிட்டுள்ளார். கடந்த செப்டம்பர் 10ஆம் திகதி போலந்து எல்லைக்குள் நடந்த பாரிய ரஷ்ய ஆளில்லா விமானத் […]

இலங்கை

தமிழர்களுக்கு நீதி வழங்க சஜித் அணி பச்சைக்கொடி!

  • November 15, 2025
  • 0 Comments

வடக்கு மக்களுக்கு வரலாற்றில் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஐக்கிய மக்கள் சக்தி உறுதியாக உள்ளது என்று அக்கட்சியின் பேச்சாளரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வரவு- செலவுத் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளான்றுக்கு அரசாங்கம் 200 ரூபா வழங்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி எதிர்ப்பு இல்லை. அதனை நாம் ஆதரிக்கின்றோம். அதேபோல வடக்கு மக்களுக்கு வரலாற்றில் […]

இலங்கை

தமிழரசுக் கட்சிக்கு அநுர தூது: நடக்கப்போவது என்ன?

  • November 15, 2025
  • 0 Comments

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும், இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் இந்த தகவலை உறுதிப்படுத்தினார். இதற்கமைய அடுத்த வாரம் புதன் அல்லது வியாழன் மேற்படி சந்திப்பு இடம்பெறக்கூடும் என தெரியவருகின்றது. ஜனாதிபதியுடன் நடைபெறவுள்ள சந்திப்புக்கு நல்லிணக்க சமிக்ஞையை வெளிப்படுத்தும் விதமாகவே வரவு-செலவுத் திட்ட வாக்கெடுப்பில் இருந்து தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் நேற்று விலகி இருந்தனர். தேசிய இனப்பிரச்சினைக்குரிய அரசியல் தீர்வு, புதிய அரசமைப்பு, […]

உலகம்

சீனாவில் காதலியின் பெற்றோரின் விருப்பத்தைப் பெற உயிரை விட்ட காதலன்

  • November 15, 2025
  • 0 Comments

சீனாவில் காதலியின் பெற்றோரை மகிழ்ச்சிப்படுத்த விரும்பிய காதலன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹென்னான் (Henan) மாகாணத்தைச் சேர்ந்த 36 வயதான லீ ஜியாங் (Li Jiang) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தனது காதலியின் பெற்றோரின் மனதில் இடம்பிடிக்க மெலிந்த தோற்றத்தைப் பெறும் நோக்கில், உடல் எடை குறைப்பு அறுவைச் சிகிச்சை செய்து கொண்டமையினால் அவர் உயிரிழந்துள்ளார். 134 கிலோ எடை கொண்ட லீ ஜியாங், தனது எடையைக் […]

error: Content is protected !!