ஐரோப்பா செய்தி

உக்ரைனின் கீவ் மீது ரஷ்யா பாரிய தாக்குதல் – 6 பேர் மரணம்

  • November 14, 2025
  • 0 Comments

ரஷ்யப்(Russia) படைகள் கியேவ்(Kyiv) மீது ஒரு பெரிய அளவிலான ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர் 30 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலில் உக்ரைன் தலைநகரின் 10 மாவட்டங்களில் கடும் சேதங்கள் பதிவாகியுள்ளது. தெற்கில் உள்ள கடலோர நகரமான சோர்னோமோர்ஸ்க்(Chornomorsk) மீது ஒரு தனி ரஷ்ய ட்ரோன் தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டதாக ஒடேசா(Odessa) ஆளுநர் ஓலே கிப்பர்(Oleh Kipper) தெரிவித்துள்ளார். இந்நிலையில், தாக்குதல் குறித்து உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி(Volodymyr […]

உலகம் செய்தி

துபாயில் உயரமான கட்டிடத்தில் இருந்து விழுந்து கேரள இளைஞர் மரணம்

  • November 14, 2025
  • 0 Comments

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்குச்(United Arab Emirates) சென்றிருந்த 19 வயது கேரள இளைஞர் ஒருவர், துபாயின்(Dubai) டெய்ராவில்(Deira) உள்ள ஒரு கட்டிடத்தின் மொட்டை மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளார். கேரளாவின்(Kerala) கோழிக்கோடு(Kozhikode) மாவட்டத்தில் வசிக்கும் முகமது மிஷால், தனது உறவினர்களைப் பார்க்கச் சென்று 15 நாட்கள் துபாயில் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புகைப்பட ஆர்வலராக இருந்த மிஷால், விபத்து நடந்தபோது விமானங்களின் புகைப்படம் எடுக்க பல மாடி கட்டிடத்தின் மேல் ஏறிச் சென்ற போது விபத்து ஏற்பட்டுள்ளது. […]

இந்தியா செய்தி

குஜராத்தில் 2 மகள்களை கொன்று தற்கொலை செய்து கொண்ட பெண்

  • November 14, 2025
  • 0 Comments

குஜராத்தின்(Gujarat) ராஜ்கோட்(Rajkot) மாவட்டத்தில் தனது இரண்டு மகள்களைக் கொன்றதாகக் கூறப்படும் ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நவகம்(Navagam) நகரில் உள்ள தனது கணவர் ஜெயேஷுடன் வசித்து வந்த 32 வயது அஸ்மிதா சோலங்கி தனது ஏழு மற்றும் ஐந்து வயதுடைய இரண்டு மகள்களை கழுத்தை நெரித்து கொன்று பின்னர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். “அஸ்மிதாவும் அவரது மகள்களும் அவர்களது வீட்டில் இறந்து கிடந்தனர். அஸ்மிதாவின் உடல் வீட்டின் […]

உலகம் செய்தி

பாகிஸ்தானில் காணாமல் போன இந்திய சீக்கிய பெண்

  • November 14, 2025
  • 0 Comments

குருநானக் தேவின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக நவம்பர் 4ம் திகதி பாகிஸ்தானுக்குச் சென்ற பக்தர்கள் குழுவில் இருந்து ஒரு பெண் சீக்கிய யாத்ரீகர் காணாமல் போயுள்ளார். காணாமல் போனவர் பஞ்சாபின்(Punjab) கபுர்தலா(Kapurthala) மாவட்டத்தில் வசிக்கும் சரப்ஜித் கவுர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அமிர்தசரஸில்(Amritsar) உள்ள அட்டாரி(Attari) எல்லை வழியாக 1,923 யாத்ரீகர்கள் குழுவுடன் அந்தப் பெண் நவம்பர் 4ம் திகதி பாகிஸ்தானுக்குச் சென்றார். பாகிஸ்தானில் உள்ள பல்வேறு ஆன்மீக தளங்களை பார்வையிட்டு 10 நாட்கள் கழித்த பிறகு, 1,922 […]

செய்தி விளையாட்டு

பாகிஸ்தானுக்கு எதிராக 288 ஓட்டங்கள் குவித்த இலங்கை அணி

  • November 14, 2025
  • 0 Comments

இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 5 போட்டிகள் கொண்ட T20 தொடரில் விளையாட உள்ளது. அந்தவகையில், இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ராவல்பிண்டியில்(Rawalpindi) மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நாணய சுழற்சியை வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது. முதலில் களமிறங்கிய இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 288 குவித்தது. இலங்கை அணி சார்பில் ஜனித் லியனகே(Janith Liyanage) 54 […]

இலங்கை

பேருந்துகளில் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தி டிக்கெட் பெறும் வசதி!

  • November 14, 2025
  • 0 Comments

பயணிகள் விரைவில் வங்கி வழங்கிய கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி பேருந்து கட்டணங்களைச் செலுத்தும் வாய்ப்பைப் பெறுவார்கள் என்று துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார். புதிய முறை நவம்பர் 24, 2025 முதல் அமலுக்கு வரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மின்னணு டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் பொருத்தப்பட்ட பேருந்துகளில் இந்த வசதி கிடைக்கும் எனத் தெரிவித்த அவர்,  இதனால் பயணிகள் பணத்தைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக தங்கள் […]

இந்தியா செய்தி

குண்டு வெடிப்பு சம்பவம் – காஷ்மீரை சுற்றிவளைத்த காவல்துறை அதிகாரிகள்!

  • November 14, 2025
  • 0 Comments

இந்தியாவில் அண்மையில் இடம்பெற்ற கார்குண்டு வெடிப்பை தொடர்ந்து காஸ்மீரில் காவல்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட இமயமலைப் பகுதி முழுவதும்  நேற்று முன்தினம் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்படி காஷ்மீரின் அவந்திபோரா (Awantipora), பந்திபோரா(Bandipora), காண்டர்பால் (Ganderbal), ஷோபியன் (Shopian) மற்றும் சோப்பூர் (Sopore) மாவட்டங்கள் உட்பட்ட பகுதிகளில் இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. செங்கோட்டைக்கு அருகே இடம்பெற்ற இந்த தாக்குதலை புலனாய்வாளர்கள் பயங்கரவாத தாக்குதலாக வகைப்படுத்தி விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். […]

இலங்கை முக்கிய செய்திகள்

சினிமா பாணியில் சிறைச்சாலையில் உள்ள கைதிகளை கொலை செய்ய முயற்சி!

  • November 14, 2025
  • 0 Comments

பாதாள உலகக் குழுக்கள் சிறைச்சாலையில் இருக்கும் தங்கள் எதிரிகளைக் கொல்ல முயற்சிப்பதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் இந்த கொலை முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. மாத்தரைக்கு அருகில்  உள்ள தேவுந்தர விஷ்ணு கோயில் அருகே சுட்டுக் கொல்லப்பட்ட  இளைஞனின் சகோதரன் குறித்த சிறைச்சாலையில் இருக்கின்ற நிலையில் அவரை கொலை செய்ய இரண்டு கைதிகள் முயற்சித்துள்ளனர். இதில்  ஒரு கைதி காயமடைந்து தங்காலை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இரண்டு இளைஞர்களின் கொலையும் தெஹிபலே என்ற குற்றவாளியால் திட்டமிடப்பட்டதாக காவல்துறையினர் […]

இலங்கை

பிரித்தானியாவில் திடீரென மூடப்பட்ட பாடசாலை – பதற்றத்தில் பெற்றோர்!

  • November 14, 2025
  • 0 Comments

பிரித்தானியாவின் யார்க்ஷயரில் (Yorkshire)உள்ள பாடசாலை ஒன்று துப்பாக்கிச் சூடு அச்சுறுத்தல் காரணமாக இன்று மூடப்பட்டுள்ளது. ஹவ்டன் (Howden) என்ற பாடசாலையின் மைதானத்தில் துப்பாக்கி ஏந்திய நபர் ஒருவர் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாடசாலை மூடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மாணவர்கள் வகுப்பறைக்குள் வைத்து பூட்டப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது. அத்துடன் சம்பவம் தொடர்பில் பாடசாலை நிர்வாகத்தினர் மின்னஞ்சல் மூலம் பெற்றோருக்கு தகவல் வழங்கியுள்ளனர். பின்னர் காவல்துறையினர் நடத்திய விரிவான சோதனையில் அச்சுறுத்தல் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

உலகம்

இந்தோனேசியாவில் வேன் விபத்து – சீன சுற்றுலா பயணிகள் உயிரிழப்பு!

  • November 14, 2025
  • 0 Comments

இந்தோனேசியாவின் பாலியில் நடந்த வேன் விபத்தில் ஐந்து சீன சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்துள்ளனர். மேலும் எட்டு பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நாட்டின் பாதுகாப்புப் படையினரின் விசாரணையில், வேன்  கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததால்  விபத்து நிகழ்ந்ததாக தெரியவந்துள்ளது. விபத்து தொடர்பாக வேனின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை அந்நாட்டு காவல்துறை அதிகாரிகள் முன்னெடுது்து வருகின்றனர்.

error: Content is protected !!