உலகம் செய்தி

இந்தோனேசியாவில் மலையேற்றத்திற்காக சென்ற 170 பேர் மீட்பு!

  • November 20, 2025
  • 0 Comments

இந்தோனேசியாவில் செமரு எரிமலை வெடித்துள்ள நிலையில் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த 170க்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக அதிகாரிகள் இன்று அறிவித்துள்ளனர். குறித்த 178 பேரும் ஜாவா மாகாணத்தின் லுமாஜாங் (Lumajang ) மாவட்டத்தில் உள்ள மலையின் அடிவாரத்தில் சிக்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. “செமெரு மலையின் நில அதிர்வு செயல்பாடு, வெடிப்பு உயர் மட்டத்தில் தொடர்வதை குறிப்பதாகவும், பனிச்சரிவு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மலையேற்றத்திற்காக சென்ற பலர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொழுதுபோக்கு

“படம் பார்க்க வர வேண்டாம்” கவின் அதிரடி அறிவிப்பு

  • November 20, 2025
  • 0 Comments

அறிமுக இயக்குநர் விக்ரணன் இயக்கத்தில், இயக்குநர் வெற்றி மாறனின் மேற்பார்வையில் நடிகர் கவின் நடித்துள்ள புதிய திரைப்படம் “மாஸ்க்”. ஜிவி பிரகாஷ் இசையமைத்த இப்படத்தில் ருஹானி சர்மா நாயகியாகவும் ஆண்ட்ரியா வில்லியாகவும் நடித்திருக்கிறார். மேலும், இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராகவும் ஆண்ட்ரியா உள்ளார். இப்படம் நாளை வெளியாவுள்ளது. இந்த நிலையில், இதன் புரோமோஷன் நிகழ்வில் கலந்துகொண்ட நடிகர் கவின் கூறிய விடயம் தான் இன்று ஹைலைட்… “மாஸ்க் திரைப்படத்தைப் பார்க்க வரும் கல்லூரி மாணவர்கள் வகுப்பை கட் அடித்துவிட்டு […]

ஐரோப்பா

செக் குடியரசில் இரு ரயில்கள் மோதி விபத்து – ரயில் சேவை நிறுத்திவைப்பு!

  • November 20, 2025
  • 0 Comments

செக் குடியரசில் (Czech Republic) எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று  மற்றொரு பயணிகள் ரயிலுடன் மோதி இன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. செஸ்கே புடெஜோவிஸ் ( Ceske Budejovice) நகருக்கு அருகில் இடம்பெற்ற இந்த விபத்தில்  பலர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரண்டு பேர் படுகாயமடைந்த நிலையில், 40 பேர் லேசான காயங்களுக்கு உள்ளானதாகவும், அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பிராந்திய மீட்பு சேவை தெரிவித்துள்ளது. மேலும் குறித்த பகுதியூடான ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்திற்கான காரணம் குறித்து அதிகாரிகள் […]

பொழுதுபோக்கு

“அமரன்” படத்திற்கு சர்வதேச திரைப்பட விழாவில் கிடைத்த அங்கீகாரம்

  • November 20, 2025
  • 0 Comments

மறைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் தான் “அமரன்”. இப்படத்தில் முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயனும் அவரது மனைவி இந்து வேடத்தில் சாய்பல்லவியும் தமது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர். ராஜ்குமார் பெரியசாமி படத்தை இயக்க கமல்ஹாசன் படத்தை தயாரித்திருந்தார். இப்படம் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதைதொடர்ந்து, அமரன் கேரள திரைப்பட விமர்சகர்கள் சங்கத்தின் விருது விழாவில் ‘சிறந்த பிறமொழித் திரைப்படம்’ என்ற […]

உலகம்

ஆஸ்திரேலியாவில் அமுலுக்கு வரும் கட்டுப்பாடு – 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

  • November 20, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் அமுலுக்கு வரவிருக்கும் சமூக ஊடகத் தடைக்கு முன்னதாக, 16 வயதுக்குட்பட்ட பயனர்களின் சமூக ஊடகக் கணக்குகளை மூடுவதற்கு சமூக ஊடக தளங்களான இன்ஸ்டாகிராம் (Instagram) , பேஸ்புக் (Facebook) மற்றும் த்ரெட்ஸ் (Threads) ஆகியவை நடவடிக்கை எடுத்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மூன்று சமூக ஊடகத் தளங்களையும் சொந்தமாகக் கொண்ட மெட்டா (Meta), 13 முதல் 15 வயதுக்குட்பட்ட பயனர்களுக்கு டிசம்பர் 4 முதல் அவர்களின் கணக்குகள் செயலிழக்கப்படும் என்று குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்கள்   மூலம் […]

கருத்து & பகுப்பாய்வு

“முத்தம்” தோற்றம் பெற்றதன் வரலாறு – பண்டைய நாகரீகத்தின் பண்பாக வகைப்படுத்தும் ஆய்வாளர்கள்!

  • November 20, 2025
  • 0 Comments

முத்தத்தின் பரிணாம வரலாற்றை ஆராய்ச்சியாளர்கள் மறுகட்டமைத்துள்ளனர். இதன்படி இது 21 முதல் 16 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவான ஒரு பண்டைய பண்பு என்று கண்டறிந்தனர். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தலைமையிலான ஒரு ஆய்வு, ஹோமோ சேபியன்கள் (Homo sapiens) மற்றும் நியாண்டர்தால்கள் (Neanderthals) முத்தமிட்டிருக்கலாம் என்று கூறுகிறது. Evolution and Human Behaviour இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு சிம்பன்சிகள், போனோபோக்கள் மற்றும் ஒராங்குட்டான்கள் உள்ளிட்ட பெரும்பாலான பெரிய குரங்குகள் முத்தமிடும் வழக்கத்தை கொண்டிருப்பதை சுட்டிக்காட்டுகிறது.  

இலங்கை

ஜீவனுக்காக நுகேகொடை கூட்டத்தை கைவிட்ட ரணில்!

  • November 20, 2025
  • 0 Comments

நுகேகொடையில் நாளை நடைபெறவுள்ள அரசாங்க எதிர்ப்பு பேரணியில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்கமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதொகாவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமானின் திருமண நிகழ்வில் பங்கேற்பதற்காக ரணில் நாளை (21) இந்தியா செல்கின்றார் என முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார். இதன்காரணமாகவே அவர் நுகேகொடை கூட்டத்தில் பங்கேற்க சாத்தியம் இல்லை என அவர் குறிப்பிட்டார். அதேவேளை, நுகேகொடை கூட்டத்தில் தான் பங்கேற்பார் என மஹிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்து & பகுப்பாய்வு

ஹசீனாவுக்கு மரண தண்டனை : நாடு கடத்துமா இந்தியா?, ஜனநாயகமும் நீதியும் சந்திக்கும் சிக்கல்!

  • November 20, 2025
  • 0 Comments

பங்களாதேஷ் அரசியலில் பல ஆண்டுகளாகக் கொதித்துக் கொண்டிருந்த குழப்பம், புதிய தீர்ப்பால் மீண்டும் பல குழப்பங்களை ஏற்படுத்தியிருக்கிறது. பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பு டாக்கா தெருக்களில் அரசியல் வெப்பம் ஆபத்தான நிலையை எட்டியது. ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் என இரண்டு தரப்பும் வீதிகளில் களமிறங்க, பங்களாதேஷ் மீண்டும் ஒருமுறை தீப்பற்றிய அரசியல் நிலைக்கு மாறியது. இந்த தீர்ப்பு ஒரு சாதாரண நீதிமன்ற உத்தரவு அல்ல, அது பங்களாதேஷ் அரசியலின் எதிர்காலத்தையே வடிவமைக்கும் வரலாற்றுப் புள்ளியாக […]

ஐரோப்பா

ஸ்டார்மருக்கு எதிரான அச்சுறுத்தல் கருத்துக்கள் – Reform UK கட்சியின் உறுப்பினர் இடைநீக்கம்!

  • November 20, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் Reform UK கட்சியின் உறுப்பினர் டாம் பிக்கப் ( Tom Pickup) கட்சியால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இஸ்லாமிய இனப்படுகொலை மற்றும் பிரித்தானிய பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மருக்கு (Sir Keir Starmer) எதிரான அச்சுறுத்தல்கள் கொண்ட  வாட்ஸ்அப் குழு தொடர்பாக அவர் இடைநீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மற்றும் ஒரு அரசாங்க அமைச்சர் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்துள்ளதாகவும் டாம் பிக்கப் ( Tom Pickup) மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. Reform UK கட்சியின் உயர்மட்ட […]

பொழுதுபோக்கு

பிரதீப் ரங்கனாதனின் புதிய படம் தொடர்பான புதிய அப்டேட்…

  • November 20, 2025
  • 0 Comments

‘கோமாளி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகி, தற்போது நடிகாக பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார் பிரதீப் ரங்கனாதன். ‘லவ் டுடே’,’டிராகன்’,’டியூட்’ படங்களில் நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். இந்த நிலையில், பிரதீப் ரங்கநாதன் மீண்டும் ஏஜிஎஸ் புரொடக்ஷனுடன் இணைவதாகவும், இந்தப் புதிய படத்தை அவரே இயக்கி கதாநாயகனாக நடிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. புதிய படம் தொடர்பாக அடுத்த இரண்டு வாரங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!