ஐரோப்பா

வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் சட்டம் – ஸ்லோவாக்கியாவில் (Slovakia) வாக்கெடுப்பு!

  • November 24, 2025
  • 0 Comments

கடுமையான நோய் தாக்கங்களை எதிர்கொண்டு போராடும் நோயாளிகள் தங்கள் வாழ்க்கையை முடித்துகொள்ள அனுமதிக்கும் சட்டமூலம் குறித்து ஸ்லோவாக்கியாவில் (Slovakia) வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. குறித்த வாக்கெடுப்பு நேற்று நடத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜுலை மாதம் தொடர்புடைய சட்டமூலம்  அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும் எதிர்பாளர்கள்  40,000 கையொப்பங்களை சேகரித்த நிலையில், அதனை நடைமுறைப்படுத்துவதில் சிக்கில் ஏற்பட்டது.  இதனைத் தொடர்ந்து பொதுமக்களின் கருத்துக்களை கோரும் வகையில் மற்றொரு வாக்கெடுப்பு நேற்று நடத்தப்பட்டுள்ளது. கருத்துக்கணிப்புகளின்படி பெரும்பாலான மக்கள் ஆதரவாக வாக்களித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. […]

இலங்கை செய்தி

அடுத்த ஆண்டு முதல் பாடசாலை வாகனங்களுக்கு கட்டாயமாகும் நடைமுறை!

  • November 24, 2025
  • 0 Comments

அடுத்த ஆண்டு முதல் பாடசாலை வாகனங்களில் பாதுகாப்பு கெமராக்களை பொருத்தும் நடவடிக்கை கட்டாயமாக்கப்படும் என  போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் பிமல் ரத்நாயக்க அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றைய விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், பொது போக்குவரத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான துன்புறுத்தல் அதிகரித்துள்ளது என்பதை எடுத்துரைத்தார். மேலும் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைக் குறைக்க அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும்  உறுதியளித்தார். […]

உலகம் செய்தி

வெனிசுலா ஊடாக பறப்பதில் ஆபத்து – சேவைகளை இரத்து செய்த விமான நிறுவனங்கள்!

  • November 24, 2025
  • 0 Comments

வெனிசுலாவில் அதிகரித்து வரும் இராணுவ பதற்றம் காரணமாக உலகின் பல சர்வதேச விமான நிறுவனங்கள் அந்நாட்டிற்கான விமான சேவைகளை நேற்று முதல் இடைநிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வெனிசுலாவில் உள்ள விமான நிறுவனங்கள் சங்கத்தின் தலைவர் மரிசெலா டி லோயிசா (Marisela de Loaiza) அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் இந்த தகவலை தெரிவித்துள்ளார். TAP, LATAM, அவியான்கா (Avianca), ஐபீரியா (Iberia), கோல் (Gol) மற்றும் கரீபியன் (Caribbean) உள்ளிட்ட 06 விமான நிறுவனங்கள் சேவைகளை காலவரையறையின்றி  நிறுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். […]

உலகம் செய்தி

பாகிஸ்தானில் துணை இராணுவப் படை தலைமையகத்தை குறிவைத்து தாக்குதல்!

  • November 24, 2025
  • 0 Comments

பாகிஸ்தானின் வடமேற்கு நகரமான பெஷாவரில் (Peshawar) உள்ள துணை ராணுவப் படை தலைமையகத்தை குறிவைத்து இன்று தாக்குதல் நடத்தப்பட்டதாக ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இரண்டு தற்கொலைக்குண்டுதாரிகள் இந்த தாக்குதலை முன்னெடுத்துள்ளனர். முதல் நபர்  பிரதான நுழைவாயிலில் தாக்குதலை நடத்தியதாகவும் மற்றவர் வளாகத்திற்குள் நுழைந்ததாகவும்  தெரிவிக்கப்படுகிறது. இதில் மூன்றுபேர் கொல்லப்பட்டதாக கூறப்படுவதுடன், காயமடைந்தவர்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை. காவல்நிலையத்திற்குள் தாக்குதல்தாரிகள் இருக்கலாம் என நம்பப்படுகின்ற நிலையில், அந்தப் பகுதியை சுற்றி வளைத்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் குறித்த பகுதியூடான சாலை […]

உலகம் செய்தி

பிலிப்பைன்ஸில் ஊழல் மோசடி – 07 அதிகாரிகள் கைது!

  • November 24, 2025
  • 0 Comments

பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட வெள்ள பேரிடரை தொடர்ந்து மக்கள் போராட்டம் நடத்தியிருந்தனர். இந்நிலையில் வெள்ள கட்டுப்பாடு தொடர்பாக ஏழு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். வறுமையில் வாடும் தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸில், வெள்ள கட்டுப்பாடுகளை முன்னெடுப்பதில் பாரிய ஊழல் இடம்பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பிரதிநிதிகள் சபையின் முன்னாள் உறுப்பினரான சால்டி கோ (Zaldy Co) மற்றும் அரசாங்க பொதுப்பணி பொறியாளர்கள் உட்பட பலர் மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில்  சிறப்பு ஊழல் எதிர்ப்பு நீதிமன்றத்தில் […]

புகைப்பட தொகுப்பு பொழுதுபோக்கு

இவங்களுக்கு மட்டும் வயசே ஆகாதா? ஜோ வெளியிட்ட அட்டகாசமான படங்கள்…

  • November 24, 2025
  • 0 Comments

தமிழ் திரையுலகை தாண்டி பல மொழிகளிலும் பிசியான நடிகையாக வலம் வருபவர்தான் ஜோதிகா. திருமணத்திற்குப் பிறகு குழந்தைகள் பெரியவர்களாக வளர்ந்த பின் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்து தரமான கதைகளை தெரிவு செய்து நடித்து வருகின்றார். ஜோதிகா, தனது கெரியரில் டாப்பில் இருந்த போது, சூர்யாவை திருமணம் செய்து கொண்டார். இன்றுவரை ஜோதிகாவின் அனைத்து வெற்றிகளுக்கும் சூர்யா துணையாக இருக்கின்றார். இன்றும் இளமையாக இருக்கும் ஜோ தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றார். அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள […]

இலங்கை

வாழ்வா? சாவா? நிலையில் நோயாளிகள்!

  • November 24, 2025
  • 0 Comments

கொழும்பு தேசிய மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சைக்காக கிட்டத்தட்ட 5,000 நோயாளிகள் தற்போது காத்திருப்புப் பட்டியலில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிலர் அறுவை சிகிச்சைக்காக நான்கு ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டியிருக்கும் என்று மருத்துவர்களின் தொழிற்சங்க கூட்டணியின் தலைவர் டாக்டர் சமல் சஞ்சீவ கூறியுள்ளார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் பெறப்பட்ட தரவுகளிலிருந்து இந்த தகவல் வெளியாகியுள்ளது, மருத்துவமனையில் உள்ள ஐந்து இதய அறுவை சிகிச்சை வார்டுகளில் ஏராளமான நோயாளிகள் காத்திருப்பு பட்டியலில் இருப்பதாக கூறப்படுகிறது. […]

பொழுதுபோக்கு

ஒட்டுமொத்த இலங்கையர்களுக்கும் பெருமையை தேடித்தந்த சபேசன்…

  • November 24, 2025
  • 0 Comments

ஜீ தமிழ் சரிகமப சீசன் 5 அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த அந்த தருணம் தற்போது நடைபெற்று முடிந்துள்ளது. இந்த போட்டியின் முடிவுகள் அனைவரும் எதிர்பார்த்த ஒன்றாகவே முடிந்துள்ளது. இந்த முடிவுகளால் யாருக்கும் கவலைகள் இல்லை. இலங்கை நாயகன் சபேசனுக்கு வெற்றி மகுடம் கிடைக்கவில்லை என்றாலும், அதற்கு இணையாக முதல் ரன்னர் அப் என்ற இடத்தை பெற்றுள்ளார். தேனிசைத் தென்றல் தேவா அவர்களின் கைகளால் வெற்றிக்கோப்பையை பெற்றுக்கொண்டார் சபேசன் சரிகமப இறுதிச்சுற்றுக்கு தெரிவாகுவதே பெரிய கனவாக இருந்த சபேசனுக்கு […]

இலங்கை செய்தி

சுவிஸ் மற்றும் கனடாவில் வேலைவாய்ப்பு – இருவர் அதிரடியாக கைது!

  • November 24, 2025
  • 0 Comments

கனடா மற்றும் சுவிட்சர்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாக கூறி மோசடி செய்த இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர். இதன்படி முதலாவதாக வராக்காபொலவில் ஓய்வுபெற்ற தோட்ட மேலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கனடாவில் பண்ணைகளில் தொழில்வாய்ப்பை பெற்றுத்தருவதாக கூறி பலரிடம் இருந்து 52 மில்லியன் பணத்தை மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து தலா 13 மில்லியன் ரூபாயை பெற்றுள்ளதாக முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர் அவரின் வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டதுடன், […]

செய்தி விளையாட்டு

ஜப்பானில் சுமோ சாம்பியனான உக்ரேனிய அகதி

  • November 23, 2025
  • 0 Comments

ஒரு உக்ரேனிய அகதி, தனது நாட்டிலிருந்து ஜப்பான் வந்து பிரபல சுமோ(sumo) போட்டியை வென்ற முதல் நபராக மாறியுள்ளார். அயோனிஷிகி(Aonishiki) என்ற சுமோ பெயரால் அறியப்படும் டேனிலோ யாவ்ஹுசிஷின்(Danylo Yavhusishyn), தனது நாட்டின் மீது ரஷ்ய படையெடுப்பிற்குப் பிறகு 2022ம் ஆண்டு 18 வயதில் ஜப்பான் வந்தடைந்துள்ளார். இப்போது 21 வயதாகும் அவர், மதிப்புமிக்க பேரரசர் கோப்பையை வென்ற முதல் உக்ரேனியரும், கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளில் இந்த கோப்பை வென்ற முதல் ஐரோப்பியரும் ஆவார். இந்நிலையில், வெற்றிக்கு […]

error: Content is protected !!