உலகம்

எத்தியோப்பியாவில் செயலற்று இருந்த எரிமலை திடீரென வெடித்தமையால் பரபரப்பு!

  • November 24, 2025
  • 0 Comments

எத்தியோப்பியாவில் நீண்ட காலமாக செயலற்ற நிலையில் இருந்த எரிமலை வெடித்து சிதறியுள்ளது. எரிமலை வெடிப்பால் மேல் எழுந்த சாம்பல்கள் ஏமன் மற்றும் ஓமன்வரை பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எத்தியோப்பியாவின்  அஃபார்  (Afar) பகுதியில் உள்ள ஹேலி குப்பி  (Hayli Gubbi) எரிமலை நேற்று காலை வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது. இதனால் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்றாலும்,    கால்நடை மேய்ப்பர்களின் சமூகத்திற்கு பொருளாதார தாக்கங்களை ஏற்படக்கூடும் என்று உள்ளூர் நிர்வாகி முகமது சீட் (Mohammed Seid)  தெரிவித்துள்ளார். ஹேலி […]

உலகம்

காங்கோவில் (Congo) போட்டி சமூகங்களுக்கு இடையே வெடித்த மோதல் – 14 பேர் பலி!

  • November 24, 2025
  • 0 Comments

காங்கோவில் (Congo)  உள்ள கிராமமொன்றில் போட்டி சமூகங்களுக்கு இடையே இடம்பெற்ற மோதலில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் இன்று அறிவித்துள்ளனர். தலைநகர் கின்ஷாசாவிலிருந்து (Kinshasa) வடகிழக்கே 75 கிலோமீட்டர் (47 மைல்) தொலைவில் உள்ள நகானா (Nkana) கிராமத்தில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இதில் 5 வயதுக்குட்பட்ட மூன்று குழந்தைகள் உட்பட 14  பொதுமக்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. காங்கோவில் டெக்கே (Teke) மற்றும் யாக்கா (Yaka) சமூகங்களுக்கு இடையே நில உரிமை தொடர்பான மோதல்கள் அதிகரித்து வருகின்றன. […]

ஐரோப்பா

ஜெர்மனியில் கோலாகலமாக ஆரம்பமாகிய கிறிஸ்துமஸ் சந்தை!

  • November 24, 2025
  • 0 Comments

ஜெர்மனியின் பாரம்பரிய கிறிஸ்துமஸ் சந்தைகள் இன்று அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டன. இதனால் நாடு முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கூடுதல் பயங்கரவாத எதிர்ப்புத் தடைகள் மற்றும் தனியார் பாதுகாப்பு உள்ளிட்ட மேம்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் அதிகாரிகள் கூடுதல் கரிசனையுடன் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. கிறிஸ்துமஸ் சந்தைகள் என்பது இடைக்காலம் முதல் ஜெர்மனியர்கள் போற்றி வரும் ஒரு வருடாந்திர பாரம்பரியமாகும். ஆனால் கடந்த 2020 ஆம் ஆண்டு மாக்ட்பர்க் நகரில் (Magdeburg) கிறிஸ்துமஸ் சந்தையின்போது இடம்பெற்ற தாக்குதலில் […]

ஐரோப்பா செய்தி

போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பில் அபார நம்பிக்கையில் ட்ரம்ப்!

  • November 24, 2025
  • 0 Comments

ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தைகளில் “பெரிய முன்னேற்றம்” ஏற்படக்கூடும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அமெரிக்கா பரிந்துரைத்துள்ள 28 அம்ச கோரிக்கைகள் குறித்து ஐரோப்பிய தலைவர்கள் விவாதித்து வருகின்றனர். உக்ரைனின் நாடாளுமன்ற சபாநாயகர் ருஸ்லான் ஸ்டீபன்சுக் (Ruslan Stefanchuk) ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களை முறையாக அங்கீகரிப்பது மற்றும் இராணுவத் திறன்களுக்கான வரம்புகளைத் தவிர்ப்பது உள்ளிட்ட விடயங்களை பரிசீலிப்பது தொடர்பில் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் முன்மொழியப்பட்ட சலுகைகள்  ரஷ்ய சார்புடையதாக இருப்பதாக விமர்சிக்கப்பட்ட போதிலும், இந்த ஒப்பந்தம் […]

அரசியல் இலங்கை

என்.பி.பி. அரசுக்கு எதிராக இரு முனை தாக்குதல்: எதிரணி வியூகம்!

  • November 24, 2025
  • 0 Comments

நுகேகொடையில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்காத நிலையில், அக்கூட்டத்தை அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பாராட்டியுள்ளார். நுகேகொடை கூட்டம் வெற்றிகரமானது எனவும், இதுபோன்ற நடவடிக்கையை தமது கட்சியும் ஆரம்பிக்க வேண்டும் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கிங்ஸ் நெல்சன் தெரிவித்தார். “ நுகேகொடை கூட்டத்துக்கு எவரையும் வலுக்கட்டாயமாக அழைத்துவரவில்லை. அவ்வாறு அழைத்து வந்திருந்தால் கொட்டும் மழைக்கு மத்தியில் மக்கள் நின்றிருக்கமாட்டார்கள். கூட்டம் மூலம் வழங்கப்பட்ட செய்தியை அரசாங்கம் உணர […]

அரசியல் இலங்கை

ரணில், சஜித் அணிகள் இணைவு: காட்டப்பட்டது பச்சைக்கொடி !! 

  • November 24, 2025
  • 0 Comments

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பன ஒன்றிணைவதற்குரிய சாதக ழ்நிலை உருவாகியுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் தெரிவித்தனர். ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர்களுடனான விசேட சந்திப்பொன்று நேற்று நடைபெற்றது. இதன்போதே ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒன்றிணைவது தொடர்பான பொறுப்பை ஏற்பதற்கு தான் தயாராக இருப்பதாக சஜித் பிரேமதாச குறிப்பிட்டார் என்று அக்கட்சியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். இதற்கமைய இரு தரப்பு இணைவு விரைவில் சாத்தியமாகும் என்று ஐக்கிய […]

ஐரோப்பா

லண்டனில் ரில்வின் சில்வாவிற்கு எதிராக வெடித்த போராட்டம்!

  • November 24, 2025
  • 0 Comments

லண்டனில் தமிழீழ தேசிய கொடிநாள் வாரத்தை முன்னிட்டு, நாடு கடந்த தமிழர் அரசாங்கத்தின் ஏற்பாட்டில் பிரித்தானியாவின் பல பகுதிகளில் நடைபெற்று வரும் நினைவு நிகழ்வுகளின் ஒரு பகுதியாக இன்றையதினம் கொடிநாள் நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது லண்டன் டிராபிளாகர் சதுக்கத்தில் (Trafalgar Square) தமிழர்கள் பெருந்திரளாகக் கூடி கொடிநாள் அனுஷ்டிப்பை கௌரவத்துடன் கொண்டாடினர். புலிக்கொடியை ஏந்தியவாறு மக்கள் பேரணியாக நகர்ந்ததுடன், சதுக்கத்தை நோக்கி அணிவகுத்து சென்றனர். பின்னர் தமிழீழ தேசியக் கொடி உயர்த்தப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. அனைத்து வயதினரும் […]

உலகம்

ஆஸ்திரேலியாவில் சர்ச்சையை ஏற்படுத்திய செனட்டர் – அவை நடவடிக்கை இடைநிறுத்தம்!

  • November 24, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் செனட் சபை இன்று ஒரு மணி நேரத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. தீவிர வலதுசாரி செனட்டர் பவுலின் ஹான்சன் (Pauline Hanson) பர்தா அணிந்து சபைக்குள் நுழைந்ததால், அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அவர் சபைக்குள் முக மறைப்பை அகற்ற மறுத்துவிட்டமையால் இந்நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இன்றைய அமர்வில் இருந்து அவர் நாள் முழுவதும் விலக்கிவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அவரது செயல்களை அனைத்து கட்சிகளின் செனட்டர்களும் பரவலாகக் கண்டித்துள்ளனர். செனட்டர் பவுலின் ஹான்சனின் (Pauline Hanson) […]

ஐரோப்பா

பிரித்தானியாவின் பிரதான சாலையில் போராட்டத்தில் இறங்கிய விவசாயிகள்!

  • November 24, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் விவசாயிகள் இன்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். வடக்கு லிங்கன்ஷையரில் (North Lincolnshire)  உள்ள A160 உட்பட முக்கிய பாதைகளில் டிராக்டர்களை ஓட்டிச் சென்று விவசாயிகள் போராட்டம் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த வாரம் சமர்பிக்கப்படவுள்ள வரவு செலவு திட்டத்தில், நீதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் (Rachel Reeves) ‘குடும்ப பண்ணை வரி (‘family farm tax’) விதிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த வரியின் கீழ்,  விவசாய நிலங்கள் மற்றும் £1 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள வணிகங்களுக்கு 20 சதவீதம் வரி […]

இலங்கை

கொலைக் குற்றச்சாட்டு – 10 பேருக்கு மரண தண்டனை!

  • November 24, 2025
  • 0 Comments

கடந்த 2011 ஆம் ஆண்டு எம்பிலிப்பிட்டிய, முல்லையா பகுதியில் நபர் ஒருவரை படுகொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த 10 சந்தேகநபர்களுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. தொடர்புடைய வழக்கு இன்று எம்பிலிப்பிட்டிய மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில்,   மூன்று பெண்கள் உட்பட 10 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டு அக்டோபர் 11 ஆம் திகதி, தனிப்பட்ட தகராறில் 30 வயதுடைய ஒருவர் கூர்மையான ஆயுதங்கள் மற்றும் […]

error: Content is protected !!