பொழுதுபோக்கு

நாக சைதன்யாவின் புதிய பட டைட்டிலை வெளியிட்ட மகேஷ் பாபு

  • November 23, 2025
  • 0 Comments

நாக சைதன்யா – மீனாட்சி சவுத்ரி இணையும், கார்த்திக் வர்மா தண்டு இயக்கத்தில் உருவாகி வரும் புராண திரில்லர் படத்திற்கு தற்காலிகமாக ‘விருஷகர்மா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதற்கான படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று நாக சைதன்யாவின் 39ஆவது பிறந்தாளை முன்னிட்டு படத்தின் டைட்டில் வெளியாகி உள்ளது. இதனை மகேஷ் பாபு வெளியிட்டுள்ளார். இப்படத்தில் லாபட்டா லேடீஸ் நடிகர் ஸ்பர்ஷ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ராவின் கீழ் பி.வி.எஸ்.என் பிரசாத் […]

பொழுதுபோக்கு

’பீஸ்ட்’ மோடில் சமந்தா… நீங்களே பாருங்க…

  • November 23, 2025
  • 0 Comments

இந்திய அளவில் பிரபலமான கதாநாயகிகளில் ஒருவர் சமந்தா. படங்கள் மட்டுமின்றி வெப் தொடர்களிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது ‘மா இன்டி பங்காரம்’ படத்தில் பிஸியாக உள்ளார். அவரே இப்படத்தை தயாரிக்கவும் செய்கிறார். இதற்கிடையில் ஜிம்மில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமந்தா பகிர்ந்துள்ளார், இது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சமந்தா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள இந்த புகைப்படத்தில், தனது அற்புதமான உடல் மாற்றத்தைக் காட்டி இருக்கிறார். அதற்கு ‘ ஆக்சன் மோட்.. பீஸ்ட் மோட்’ என்று தலைப்பிட்டுள்ளார். […]

உலகம்

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தருணம் பார்க்கும் கனடா!

  • November 23, 2025
  • 0 Comments

பொருத்தமான நேரத்தில் அமெரிக்காவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகளை மீளவும் ஆரம்பிக்கவுள்ளதாக கனடா பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) இன்று அறிவித்துள்ளார். ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் உரையாற்றுவதற்கு எந்த அவசர பிரச்சினையும் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் (Johannesburg) நடந்த G20 தலைவர்கள் கூட்டத்தின் போது செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், கனடாவின் எதிர்காலம் மற்றும் புதிய கூட்டாண்மைகளுடன் நாங்கள் மிகவும் பிஸியாக இருக்கிறோம்” எனத் […]

உலகம்

50 மில்லியன் டொலர் வெகுமதி – வெனிசுலாவில் புதிய திட்டத்தை அமுல்படுத்திய ட்ரம்ப்!

  • November 23, 2025
  • 0 Comments

வெனிசுலாவின் தலைநகரின் மீது துண்டுப் பிரசுரங்களை வீச அமெரிக்க இராணுவத்தினருக்கு முன்மொழியப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ (Nicolás Maduro) மீது அழுத்தத்தை அதிகரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. வெனிசுலாவிற்கு எதிரான அமெரிக்காவின் சமீபத்திய ஆக்கிரமிப்பு நடவடிக்கையாக இது கருதப்படுகிறது. போதைப் பொருள் கடத்தல் மற்றும் பரிவர்த்தனைகளுக்கு வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவும் காரணம் என அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில் மதுரோவின் கைது மற்றும் தண்டனைக்கு வழிவகுக்கும் தகவல்களை வழங்குபவர்களுக்கு […]

கருத்து & பகுப்பாய்வு

ஜப்பான் உலகுக்கு முன்னுதாரணமான நாடா? பிரதமரின் தூக்கம் பற்றிய கருத்தால் பெரும் சர்ச்சை!

  • November 23, 2025
  • 0 Comments

உலகம் கண்கொள்ளாத் தொழில்நுட்ப முன்னேற்றம் என்று பாராட்டப்படும் ஜப்பான், மற்றொரு பெயராலும் உலகை அதிர்ச்சி அடையச் செய்கிறது. தூக்கமின்றி ஓடும் தேசம் என்ற பெயரையும் பெற்றுள்ளது. இது சாதனை அல்ல, ஜப்பான் சமூகம் முழுக்க தள்ளாடி நிற்கும் நிலையை காட்டும் எச்சரிக்கை மணி என நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். ஒரு பிரதமரின் கடிகாரம் இரவு 02 மணிக்கு துடிக்கத் தொடங்கி 04 மணிக்கு நிற்கும் போது, அந்த நாட்டின் குடிமகனின் வாழ்க்கை எந்த திசையில் ஓடும்? ஜப்பானை பற்றிய […]

உலகம்

ஆஸ்திரேலியாவில் மின் துண்டிப்பு – மக்களுக்கு முக்கிய அறிவித்தல்!

  • November 23, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஃபினா (Fina) சூறாவளி தாக்கியதை தொடர்ந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதன்போது மணிக்கு 205 கிமீ (127 மைல்) வேகத்தில் காற்று வீசியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஃபினா  (Fina)  சூறாவளி  காரணமாக சுமார் 19,000 பேர் மின்சாரத்தை இழந்துள்ளதாக முதலமைச்சர் லியா ஃபினோச்சியாரோ ( Lia Finocchiaro) தெரிவித்துள்ளார். மின்கம்பிகள் சேதமடைந்துள்ள நிலையில், டார்வினில் (Darwin) வசிக்கும் மக்கள்  அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. […]

உலகம்

காசாவில் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேல் – ஹமாஸ் தலைவர் உயிரிழப்பு!

  • November 23, 2025
  • 0 Comments

காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 22 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வடக்கு மற்றும் மத்திய காசாவை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குடியிருப்பு பகுதிகள் உட்பட ஐந்து இடங்களை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், ஹமாஸின் மூத்த தலைவர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. எவ்வாறாயினும் பயங்கரவாதிகளை குறிவைத்தே தாக்குதல் நடத்தப்படுவதாக இஸ்ரேல் கூறிவருகிறது.

பொழுதுபோக்கு

“ஜெண்டில்மேன் டிரைவர்” விருதை வென்றார் அஜித்குமார்

  • November 23, 2025
  • 0 Comments

கடந்த ஆண்டு முதல் கார் ரேஸிங்கில் தீவிரம் காட்டி வரும் அஜித்குமார், ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் வென்றுள்ளார். இந்நிலையில், SRO மோட்டார் ஸ்போர்ட் குழுமம், அஜித்குமாருக்கு ‘GENTLEMAN DRIVER OF THE YEAR 2025’ விருது வழங்கி கௌரவித்துள்ளது. இத்தாலியின் வெனிஸ் நகரில் நடந்த விருது விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற அஜித்குமார் விருதினை பெற்றுக்கொண்டார்.

பொழுதுபோக்கு

‘பென்ஸ்’ திரைப்படத்தின் அட்டகாசமான அப்டேட் கொடுத்த நிவின் பாலி

  • November 23, 2025
  • 0 Comments

பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜின் “ஜி ஸ்குவாட்” நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் ‘பென்ஸ்’ திரைப்படத்தின் அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது, ‘பென்ஸ்’ படப்பிடிப்பின் முதல் கட்டப் பணிகளை முடித்துவிட்டதாக நடிகர் நிவின் பாலி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சில புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். லோகேஷ் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் பாக்கியராஜ் கண்ணன் இத்திரைப்படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு லோகேஷ் கனகராஜ் தான் கதை எழுதியுள்ளார். இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் ஏற்கனவே ‘ரெமோ’, ‘சுல்தான்’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். ‘பென்ஸ்’ […]

ஐரோப்பா

30 ஆண்டுகளில் முதல் முறையாக ரயில் கட்டணங்களை முடக்கிய பிரித்தானியா!

  • November 23, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் கடந்த 30 ஆண்டுகளில் முதல் முறையாக ரயில் கட்டணங்களை முடக்கும், அல்லது இரத்து செய்யும் திட்டத்தை அரசாங்கம் நேற்று அறிவித்துள்ளது. இது மில்லியன் கணக்கான மக்களின் பணத்தை மிச்சப்படுத்தும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த திட்டமானது பிரித்தானிய அரசாங்கத்தினால் இயக்கப்படும் ரயில் சேவைகளுக்கு பொருந்தும். மக்களின் நிதி சுமையை குறைக்கும்  முயற்சியின் ஒரு பகுதியாக இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் (Rachel Reeves) அறிவித்துள்ளார். அதே நேரத்தில் போக்குவரத்து செயலாளர் ஹெய்டி அலெக்சாண்டர் […]

error: Content is protected !!