உலகம் செய்தி

அமெரிக்கா மற்றும் சீன ஜனாதிபதிகள் இடையே தொலைபேசியில் பேச்சுவார்த்தை

  • November 24, 2025
  • 0 Comments

அமெரிக்க(America) ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்(Donald Trump) சீன(China) ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடன்(Xi Jinping) தொலைபேசி அழைப்பு மூலம் பேசியதாக வெள்ளை மாளிகை(White House) தெரிவித்துள்ளது. இது இரு நாடுகளுக்கும் இடையே வரிகள் மற்றும் தொழில்நுட்ப ஏற்றுமதி கட்டுப்பாடுகள் தொடர்பாக நடந்து வரும் இராஜதந்திர மற்றும் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் இந்த அழைப்பு இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், ட்ரூத் சோஷியலில்(Truth Social) அழைப்பை உறுதிப்படுத்திய டிரம்ப், “உக்ரைன்/ரஷ்யா(Ukraine/Russia), ஃபெண்டானில்(Fentanyl), சோயாபீன்ஸ்(soybeans) மற்றும் பிற பண்ணை பொருட்கள் உள்ளிட்ட பல தலைப்புகளில் […]

இலங்கை செய்தி

மட்டக்களப்பில் தொல்பொருள் தளங்களில் உள்ள அறிவிப்புப் பலகைகளை அகற்றிய நபர் கைது

  • November 24, 2025
  • 0 Comments

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தொல்பொருள் தளங்களில் உள்ள அறிவிப்புப் பலகைகளை அகற்றிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு, கிரண் பகுதியில் குறித்த நபர் கைது செய்யப்பட்டு அகற்றப்பட்ட அறிவிப்புப் பலகைகள் வாழைச்சேனை காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய வாழைச்சேனை பிரதேச சபையின் தலைவர் தலைமறைவாகியுள்ளார். தொல்பொருள் துறை நவம்பர் 3ம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தில் தொல்பொருள் இடங்களைக் குறிக்கும் திசை மற்றும் தகவல் பலகைகளை அமைக்கத் தொடங்கியது. அதன் பின்னர், பிரதேச […]

செய்தி

மாவீரர் நாளை அனுஷ்டிக்க என்றுமில்லாதவாறு எழுச்சி பெற்ற புதுக்குடியிருப்பு கோம்பாவில் பிரதேசம்

  • November 24, 2025
  • 0 Comments

போரில் உயிரிழந்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் நாளுக்கான அலங்கரிப்பு ஆயத்த பணிகள் புதுக்குடியிருப்பு கோம்பாவில் பிரதேசத்தில் அலங்கரிப்பு பணி நடைபெற்று மாவீரர் நாளை அனுஷ்டிக்க தயார் நிலையில் இருக்கின்றது. தமிழ் மக்களுக்கான உரிமைப் போரில் தமது உயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் நாள் இவ்வாண்டும் கார்த்திகை 27 ஆம் திகதி தமிழ்மக்களால் அனுஸ்ரிக்கப்படவுள்ளது. அந்தவகையில் இவ்வாண்டும் மாவீரர் நாள் நிகழ்வுகள் மேற்கொள்ள தமிழர் தாயகப் பகுதிகள் மாத்திரமின்றி தமிழ் மக்கள் வாழும் […]

உலகம் செய்தி

வெனிசுலாவின் கார்டெல் அமைப்பை பயங்கரவாத பட்டியலில் சேர்த்த அமெரிக்கா

  • November 24, 2025
  • 0 Comments

வெனிசுலா(Venezuela) மக்களிடையே “கார்டெல் டி லாஸ் சோல்ஸ்”(Cartel de los Soles) என்று அறியப்படும் அமைப்பை பயங்கரவாத பட்டியலில் அமெரிக்கா(America) சேர்த்துள்ளது. ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின்(Donald Trump) நிர்வாகம், வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவுடன்(Nicolas Maduro) தொடர்புடையதாகக் கூறும் கார்டெல் அமைப்பை பயங்கரவாத பட்டியலில் சேர்த்ததாக குறிப்பிட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக, வெனிசுலாவின் வெளியுறவு அமைச்சகம், இந்த நடவடிக்கை “அபத்தமான பொய்” என்று தெரிவித்துள்ளது.

இந்தியா செய்தி

அமெரிக்க விசா நிராகரிப்பு காரணமாக ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் தற்கொலை

  • November 24, 2025
  • 0 Comments

ஆந்திராவின்(Andhra Pradesh) குண்டூர்(Guntur) மாவட்டத்தைச் சேர்ந்த 38 வயது பெண் மருத்துவர் ஒருவர், அமெரிக்க(America) விசா கிடைக்காததால் ஏற்பட்ட மன உளைச்சலால் ஹைதராபாத்தில்(Hyderabad) உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ரோகிணி என அடையாளம் காணப்பட்ட மருத்துவர் கதவைத் திறக்காததால், வீட்டு வேலைக்காரர் அவரது குடும்பத்தினருக்குத் தகவல் அளித்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தற்கொலைக்கு அதிக அளவு தூக்க மாத்திரை அல்லது ஊசி பயன்படுத்தியிருக்கலாம் என்று முதற்கட்ட தகவல்களின் அடிப்படையில் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கைக்காக […]

உலகம் செய்தி

அக்டோபர் 7 தாக்குதல் தொடர்பாக இஸ்ரேலிய இராணுவ தளபதிகள் பணிநீக்கம்

  • November 24, 2025
  • 0 Comments

இஸ்ரேல்(Israel) இராணுவம் மூன்று தளபதிகளை பணிநீக்கம் செய்வதாகவும், நாட்டின் வரலாற்றில் மிகக் கொடிய தாக்குதலான 2023ம் ஆண்டு அக்டோபரில் ஹமாஸ்(Hamas) நடத்திய தாக்குதலைத் தடுக்கத் தவறியதற்காக பல மூத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளது. முறையான விசாரணை நடத்த வேண்டும் என்று இஸ்ரேலிய இராணுவத் தலைவர் இயல் ஜமீர்(Eyal Zamir) அழைப்பு விடுத்த இரண்டு வாரங்களுக்குப் பிறகு இந்த பணி நீக்கங்கள் இடம்பெற்றுள்ளது. பணிநீக்கம் செய்யப்பட்ட அதிகாரிகளின் பட்டியலில் மூன்று பிரிவு தளபதிகள் அடங்குவர், அவர்களில் […]

இந்தியா செய்தி

தென்காசியில் இரு பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து – 6 பேர் மரணம்

  • November 24, 2025
  • 0 Comments

தமிழ்நாட்டின் தென்காசி(Tenkasi) மாவட்டத்தில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 28 பேர் காயமடைந்துள்ளனர். மதுரையிலிருந்து(Madurai) செங்கோட்டைக்குச்(Senkottai) சென்ற தனியார் பேருந்தும் தென்காசியில் இருந்து கோவில்பட்டி(Kovilpatti) நோக்கிச் சென்ற மற்றொரு பேருந்தும் மோதிக்கொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மதுரையிலிருந்து செங்கோட்டைக்குச் சென்ற கீசர்(Keysar) நிறுவனத்தின் பேருந்து ஓட்டுநரின் வேகம் மற்றும் அலட்சியமே விபத்துக்குக் காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காயமடைந்த 28 பயணிகளும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பாதிக்கப்பட்ட சிலரின் […]

உலகம் செய்தி

டொராண்டோவில் மிகவும் தேடப்பட்டு வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த குற்றவாளி கைது

  • November 24, 2025
  • 0 Comments

டொராண்டோ(Toronto) காவல்துறையினர், கனடாவின்(Canada) மிகவும் தேடப்படும் பட்டியலில் உள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவரை துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளுடன் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. சட்டப்பூர்வ விடுதலையை(பரோல்) மீறியதற்காக கனடா முழுவதும் தேடப்பட்ட 24 வயதான நிக்கோலஸ் சிங்(Nicholas Singh) கைது செய்யப்பட்டதாக டொராண்டோ காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டொராண்டோவின் பாதர்ஸ்ட்(Bathurst) மற்றும் டுபோன்ட்(Dupont) தெரு பகுதியில் ஒரு வாகனத்தில் சிங் கைது செய்யப்பட்டுள்ளார். ஆயுதங்கள் வைத்திருப்பதைத் தடை செய்யும் முன் நீதிமன்ற உத்தரவு இருந்தபோதிலும் சிங் […]

பொழுதுபோக்கு

சபரிமலை தங்கம் கொள்ளை – நடிகர் ஜெயராமுக்கு தொடர்பா?

  • November 24, 2025
  • 0 Comments

சபரிமலை ஐயப்பன் கோயிலில் சன்னிதான முகப்பில் துவார பாலகர் சிலை கவசம் மற்றும் கதவு நிலைகளில் பதிக்கப்பட்டிருந்த தங்கம் திருடப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பிரபல நடிகர் ஜெயராமிடம் விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கேரள உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், இவ்வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது. இந்த விவகாரத்தில் இதுவரை அர்ச்சகர் உன்னி கிருஷ்ணன், முன்னாள் தேவஸ்தான தலைவர் பத்மகுமார் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். […]

உலகம்

எத்தியோப்பியாவில் செயலற்று இருந்த எரிமலை திடீரென வெடித்தமையால் பரபரப்பு!

  • November 24, 2025
  • 0 Comments

எத்தியோப்பியாவில் நீண்ட காலமாக செயலற்ற நிலையில் இருந்த எரிமலை வெடித்து சிதறியுள்ளது. எரிமலை வெடிப்பால் மேல் எழுந்த சாம்பல்கள் ஏமன் மற்றும் ஓமன்வரை பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எத்தியோப்பியாவின்  அஃபார்  (Afar) பகுதியில் உள்ள ஹேலி குப்பி  (Hayli Gubbi) எரிமலை நேற்று காலை வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது. இதனால் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்றாலும்,    கால்நடை மேய்ப்பர்களின் சமூகத்திற்கு பொருளாதார தாக்கங்களை ஏற்படக்கூடும் என்று உள்ளூர் நிர்வாகி முகமது சீட் (Mohammed Seid)  தெரிவித்துள்ளார். ஹேலி […]

error: Content is protected !!