இலங்கை

கொழும்பில் வேன் ஒன்றில் மோதி 05 வயது குழந்தை உயிரிழப்பு!

  • November 25, 2025
  • 0 Comments

கொழும்பில் உள்ள மாளிகாவத்தை அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 5 வயது குழந்தை வேன் ஒன்றில் மோதி உயிரிழந்துள்ளது. குறித்த விபத்து இன்று இடம்பெற்றுள்ளது. தனது வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை  சாலையை நோக்கி ஓடியபோது,  ​​இந்த விபத்து நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது. விபத்தில் குழந்தைக்கு மேலோட்டமான காயங்கள் மட்டுமே ஏற்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் சிறிது நேரத்தில் இரத்த வாந்தி எடுத்ததால், வேன் ஓட்டுநர்  அவரை கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். மருத்துவமனையில் […]

ஐரோப்பா

460 ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய ரஷ்யா – 06 பேர் உயிரிழப்பு!

  • November 25, 2025
  • 0 Comments

ரஷ்யா  ஒரே இரவில் குறைந்தது 460 ட்ரோன்களை ஏவியதாகவும், அவற்றில் பல மால்டோவா அல்லது ருமேனியாவிற்குள் பறந்ததாகவும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ( Volodymyr Zelenskyy) இன்று அறிவித்துள்ளார். அதனால் ஒவ்வொரு நாளும் உயிர்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதை அனைத்து கூட்டாளிகளும் மறந்துவிடக் கூடாது எனவும் செலன்ஸ்கி வலியுறுத்தியுள்ளார். அத்துடன் ஆக்கிரமிப்பாளர் மீதான தடை அழுத்தம் எவ்வளவு முக்கியமோ, அதே போல் ஆயுதங்களும் வான் பாதுகாப்பும் முக்கியம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல்களில் […]

இலங்கை

ஜே.வி.பியின் செயலருக்கு எதிராக லண்டனில் போராட்டம்: அரசு கூறுவது என்ன?

  • November 25, 2025
  • 0 Comments

புலம்பெயர்ந்துள்ள இலங்கையர்களில் சிறுகுழுவினரே போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த குழுவானது ஒட்டுமொத்த புலம்பெயர் இலங்கையர்களை பிரதிபலிக்கவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றது. இதன்போது ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வாவுக்கு எதிராக லண்டனின் இடம்பெற்ற போராட்டம் தொடர்பில் கேள்வி எழுப்பட்டது. புலம்பெயர் மக்களின் ஆதரவை அரசாங்கம் இழந்துவிட்டதா எனவும் வினவப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, “ புலம்பெயர்ந்த […]

இலங்கை

இஸ்ரேலின் கட்டுமானத் துறையில் அதிகளவான தொழில்வாய்ப்பை பெற்றுள்ள இலங்கையர்கள்!

  • November 25, 2025
  • 0 Comments

இலங்கை மற்றும் இஸ்ரேல் அரசாங்கங்களுக்கிடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், 2025 ஆம் ஆண்டில் இஸ்ரேலின் கட்டுமானத் துறையில் 3,575 இலங்கையர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளதாகவும்,  சமீபத்தில், 77 வேலை தேடுபவர்கள் அதிகாரப்பூர்வமாக இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகிறது. கூடுதலாக,  152 தொழிலாளர்கள் புறப்படத் தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் டிசம்பர் முதல் வாரத்தில் மேலும் 464 பேர் வெளியேறத் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆண்டு, 252 இலங்கையர்கள் ஏற்கனவே கட்டுமானத்தின் உள்கட்டமைப்பு துணைத் துறையில் வேலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், மேலும் […]

பொழுதுபோக்கு

ஜாய் கிரிசில்டா – மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

  • November 25, 2025
  • 0 Comments

மாதம்பட்டி ரங்கராஜின் பாகசாலா நிறுவனங்களை டேக் செய்து ஜாய் கிரிசில்டா பதிவுகளை வெளியிட தடை விதிக்க வேண்டும் என மாதம்பட்டி தங்கவேலு ஹாஸ்பிடாலிட்டி பிரைவேட் லிமிடெட் என்கிற நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. வழக்கு விசாரணையின் போது மாதம்பட்டி பாகசாலா சார்பில் வாதிட்ட வழக்கறிஞர், ஜாய் கிரிசில்டாவின் இந்த பதிவால் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் செப்டம்பர் வரை கிட்டத்தட்ட ரூ.12 கோடி மதிப்பிலான கேட்டரிங் ஆர்டர்கள் ரத்தாகிவிட்டதாகவும், அதனால் அவருடைய சமூக வலைதள பதிவுகளை […]

ஐரோப்பா செய்தி

uk : வரவு செலவு திட்டத்தில் முக்கிய மாற்றம் -ISA வரம்பை குறைக்க திட்டம்!

  • November 25, 2025
  • 0 Comments

பிரித்தானிய நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் (Rachel Reeves) நாளைய தினம் தனது வருடாந்திர வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்யவுள்ளார். இந்நிலையில் புதிய திட்டங்களில் ISA (தனிநபர் சேமிப்புக் கணக்கு)  வரம்பை £20,000 இலிருந்து £12,000 ஆகக் குறைப்பதாக அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாற்றம் குடும்பங்கள் தங்கள் சேமிப்பை பிரித்தானிய பங்குச் சந்தையில் முதலீடு செய்ய ஊக்குவிப்பதற்கும் £22 பில்லியன் நிதி கருந்துளையை நிவர்த்தி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வரவு செலவு திட்ட தயாரிப்புகளை […]

அரசியல் இலங்கை

மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு மீண்டும் அழுத்தம்!

  • November 25, 2025
  • 0 Comments

மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் வலியுறுத்தியுள்ளார். என்.பி.பி. அரசாங்கத்துக்கான மக்கள் ஆதரவு சரிந்துவிட்டது என்பதை நுகேகொடைக் கூட்டம் வெளிப்படுத்தியது என்பதை சுட்டிக்காட்டியே அவர் இந்த வலியுறுத்தலை விடுத்தார். “ நுகேகொடை கூட்டம் வெற்றியளித்துள்ளது. பொய்கள்மூலம் இனியும் நாட்டை ஆளமுடியாது என்பதை இனியாவது ஆட்சியாளர்கள் உணர வேண்டும். அரசாங்கத்துக்கான மக்கள் ஆதரவு சரிந்துவிட்டது. அவ்வாறு இல்லை, மக்கள் ஆதரவு தமக்கு […]

அரசியல் இலங்கை

அச்சுறுத்தல்களுக்கு அடிபணியோம்: மொட்டு கட்சி எச்சரிக்கை!

  • November 25, 2025
  • 0 Comments

அச்சுறுத்தல்கள்மூலம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அரசியல் பயணத்தை தடுக்க முடியாது என்று அக்கட்சியின் உறுப்பினர், முன்னாள் இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். “ நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிறைவேற்றவில்லை என்பதாலேயே எமக்கு வீதிக்கு இறங்கி அதனை நினைவுபடுத்த வேண்டி ஏற்பட்டது. அந்தவகையில் எமது நுகேகொடை கூட்டம் வெற்றியளித்தது. மக்களுக்காக எமது […]

அரசியல் இலங்கை

இலங்கையில் பிராந்திய ராஜ்ஜியம் கிடையாது! 

  • November 25, 2025
  • 0 Comments

இலங்கையில் எந்த இடத்திலும் தொல்பொருள் இடங்களை அடையாளப்படுத்தும் இயலுமை தொல்பொருள் திணைக்களத்துக்கு உள்ளது என பொதுமக்கள் பாதுகாப்பு பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். ஒருசிலர் தமக்கு தமக்கு பிராந்திய ராஜ்ஜியம் இருப்பதாக நினைத்து , தொல்பொருள் சின்னங்களை அகற்றி இனவாத முரண்பாடுகளை தோற்றுவிக்க முற்படுகின்றனர். இதற்கு இடமளிக்கப்படமாட்டாது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். வாழைச்சேனை மற்றும் கொக்கட்டிச்சோலை பகுதிகளில் தொல்பொருள் அடையாளப்படுத்தல் பெயர் பலகைகள் அகற்றப்பட்டமை தொடர்பில் விளக்கமளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். “ தொல்பொருள் திணைக்களத்தால் […]

இலங்கை

உயர்தர பரீட்சை வினாத்தாள் கசிவு – முறையான விசாரணைக்கு அழைப்பு!

  • November 25, 2025
  • 0 Comments

உயர்தரப் பரீட்சைகளில் சில கேள்விகள் கசிந்துள்ளதா என்பதை அறிய விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க   அழைப்பு விடுத்தார். நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,  நுகேகொடையில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் கல்விபயிலும்,  மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மாதிரி வினாத்தாள்  கேள்விகளும்,   உயர்தரப் பொருளாதார வினாத்தாள்  கேள்விகளும்  ஒரே மாதிரியாக இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார். “இது குறித்து விசாரணை […]

error: Content is protected !!