பொழுதுபோக்கு

நடிப்பு அரக்கன் திவாகருக்கு மூன்று திருமணங்கள்?

  • November 25, 2025
  • 0 Comments

பிக்பாஸ் தமிழ் சீசன் 9இல் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் கலந்துகொண்டு சுமார் 40 நாட்கள்வரை விளையாடினார். வீட்டிலிருந்து வெளியே வந்த பிறகு இவர் மூன்று திருமணங்கள் செய்துகொண்டதாக தகவல்கள் பரவின. இந்நிலையில் அதுகுறித்து விளக்கமளித்திருக்கிறார் திவாகர். “என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை பற்றி தவறான தகவல்களை சில யூடியூபர்கள் பரப்புகிறார்கள். நான் சிங்கிளாகத்தான் இருக்கிறேன். மூன்று பெண்களை எல்லாம் நான் திருமணம் செய்யவில்லை. இதற்கு மேல் என்னை பற்றி தவறான மற்றும் பொய்யான தகவல் வந்தால் அதை […]

ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

UKவிற்கு மாணவர் விசாவில் வருகை தந்து அசேலம் கோருவோருக்கு எச்சரிக்கை!

  • November 25, 2025
  • 0 Comments

பிரித்தானியாவிற்கு கல்வி கற்க வரும் மாணவர்கள் படிப்பின் முடிவில் புகலிடம் கோரும் முறை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இங்கிலாந்தின் இந்தோ-பசிபிக் அமைச்சர் சீமா மல்ஹோத்ரா (Seema Malhotra) இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள நிலையில், பிபிசி ஊடகத்திற்கு இது தொடர்பில் பேட்டியளித்துள்ளார். அதில் மாணவர்கள் தங்களின்  படிப்பு முடிவடைந்தவுடன்  புகலிடம் கோரும் சம்பவங்கள் அதிகரித்து வருவது தொடர்பில் கவலை தெரிவித்துள்ளார். பிரித்தானியாவின் புதிய குடியேற்ற சீர்த்திருத்தங்களின் கீழ், சில புலம்பெயர்ந்தோர் அங்கு நிரந்தரமாக குடியேற 20 ஆண்டுகள் காத்திருக்கு […]

உலகம்

மின் தடை குறித்து அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை!

  • November 25, 2025
  • 0 Comments

அமெரிக்காவில் குளிர்காலப் பகுதிகளில் மின்தடை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக வட அமெரிக்க மின்சார நம்பகத்தன்மை கழகம்  எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக தரவு மையங்கள் உள்ள பகுதிகளில் மின்தடை குறித்த அபாயம் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. புதிய வளங்கள் மின்கட்டமைப்பில் சேர்க்கப்படுவதை விட மின்சார தேவை வேகமாக அதிகரித்து வருவதாகவும், கடந்த ஆண்டின் குளிர்காலப்பகுதியில் மாத்திரம் 20 ஜிகாவாட் மின்சாரம் அதிகமாக தேவைப்பட்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் கடுமையான குளிர் காலநிலையின் போது சில பகுதிகள் விநியோக பற்றாக்குறையை எதிர்கொள்ள நேரிடுவதாக […]

ஐரோப்பா

பணிப்புறக்கணிப்பில் இறங்கிய ஊழியர்கள் – பெல்ஜியத்தில் விமான சேவைகள் இரத்து

  • November 25, 2025
  • 0 Comments

பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் (Brussels) விமான நிலையம் உள்வரும் விமானங்களில் 110 விமானங்களை இரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது. அதேபோல் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான புறப்படும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. பெல்ஜிய அரசாங்கத்தின் சிக்கனத் திட்டங்களை எதிர்த்து பாதுகாப்பு மற்றும் தரைவழி கையாளுதல் ஊழியர்கள் நாடு தழுவிய ரீதியில் இன்று தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். இதன்காரணமாகவே மேற்படி விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை புத்தாண்டு காலப்பகுதியில் ரயில்வே தொழிலாளர்களும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐரோப்பா

போர் நிறுத்தம் – அமெரிக்காவின் 28 அம்ச பரிந்துரைகளை ஏற்கும் உக்ரைன்!

  • November 25, 2025
  • 0 Comments

அமெரிக்கா முன்மொழிந்துள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தை உக்ரைன் ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெள்ளை மாளிகையுடன் ‘பொதுவான புரிதல்’ எட்டப்பட்டதாக உக்ரைனின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ருஸ்டெம் உமெரோவ் (Rustem Umerov) கூறியதை தொடர்ந்து அமெரிக்க அதிகாரி ஒருவர் ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் (Donald Trump) ஒப்பந்தத்தை இறுதி செய்ய உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelensky) விரைவில் அமெரிக்காவிற்கு வருகை தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா முன்வைத்துள்ள 28 அம்ச கோரிக்கைகள் […]

ஐரோப்பா

லண்டனில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் தீவிபத்து – மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

  • November 25, 2025
  • 0 Comments

லண்டனின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள சில்லறை விற்பனை நிலையத்தின் சேமிப்பு கிடங்கில்  இன்று  தீவிபத்து ஏற்பட்டுள்ளது. சவுத்தாலில் (Southall) உள்ள சேமிப்பு கிடங்களில் முதற்கட்டமாக தீ பரவியதாக சந்தேகிக்கப்படுகிறது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த சுமார் 150 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இரண்டு மாடி கட்டமைப்புகளில் ஒன்றில் பட்டாசுகள் மற்றும் சிலிண்டர்கள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையாக அருகிலுள்ள பள்ளி மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் வெளியேற்றப்பட்டுள்ளன. மேலும் பெரிய புகை மூட்டம் […]

ஐரோப்பா செய்தி

குழந்தைகளை பெற்றோரிடம் இருந்து பிரித்து வைக்குமாறு உத்தரவிட்ட இத்தாலிய நீதிமன்றம்!

  • November 25, 2025
  • 0 Comments

மூன்று குழந்தைகள் காடுகளில் வளர்க்கப்பட்ட நிலையில், அந்த குழந்தைகளை  பெற்றோரிடம்  இருந்து பிரித்து வைக்குமாறு இத்தாலி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. எல்’அக்விலாவில் ( L’Aquila) உள்ள ஒரு சிறார் நீதிமன்றம் கடந்த வாரம், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. பிரித்தானிய – ஆஸ்திரேலியவை பிறப்பிடமாக கொண்ட குறித்த தம்பதியர் ஆஃப்-தி-கிரிட் வாழ்க்கை முறை (off-the-grid)  முறையில் தங்களின் மூன்று குழந்தைகளையும் வளர்த்து வந்துள்ளனர். அப்ருஸ்ஸோ (Abruzzo) பகுதியில் உள்ள தங்கள் பண்ணை வீட்டில் அவர்கள் தங்களின் மூன்று குழந்தைகளையும் […]

பொழுதுபோக்கு

”பராசக்தி”- யின் ‘ரத்னமாலா’ பாடல் வெளியானது…

  • November 25, 2025
  • 0 Comments

சிவகார்த்திகேயனின் 25ஆவது படமான ‘பராசக்தி’ படத்திலிருந்து 2 ஆவது பாடலான ‘ரத்னமாலா’ தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். அடுத்தாண்டு பொங்கல் விடுமுறைக்கு இப்படம் திரைக்கு வருகிறது. சமீபத்தில் வெளியான ‘பராசக்தி’ படத்தின் ப்ரோமோ மற்றும் முதல் பாடலான ‘அடி அலையே’ ஆகியவை ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து ‘பராசக்தி’ படத்தின் 2-வது பாடலான ‘ரத்னமாலா’ தற்போது வெளியாகியுள்ளது.  

பொழுதுபோக்கு

திடீரென பிக் பாஸ் வீட்டுக்குள் கீர்த்தி சுரேஷ்…

  • November 25, 2025
  • 0 Comments

இப்போது எல்லாம் ஒரு படம் ஹிட் ஆக வேண்டும் என்றால் படத்தில் நடித்தவர்கள் உட்பட அனைவரும் பாடுபட்டு புரொமோஷன் செய்கின்றார்கள். அந்த வகையில், தற்போது கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ரிவால்வர் ரீட்டா படம் ரிலீசுக்கு தயாராகி விட்டது, இதற்கு ப்ரமோஷன் செய்ய பிக் பாஸ் வீட்டுக்குள் சென்று இருக்கிறார் நம்ம கீர்த்தி. இரவில் திடீரென சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்த கீர்த்தி சுரேஷுக்கு பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த வாரம் பிக் பாஸ் […]

இலங்கை

மாவீரர் துயிலுமில்லத்தை தூய்மைப்படுத்த சென்றவர்களை தாக்கிய இராணுவத்தினர்!

  • November 25, 2025
  • 0 Comments

மணலாறு பகுதியில் உள்ள துயிலுமில்லம் ஒன்றில் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த பணிக் குழுவினரை  இலங்கை இராணுவத்தினர் துப்பாக்கியால் அடித்து தாக்கியுள்ள சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணலாறு பகுதியில் உள்ள உதயபீடம் மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் நாளுக்கான ஏற்பாடுகளை செய்ய சென்ற பொதுமக்கள் மீதே இவ்வாறு தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.  இந்த சம்பவம்  இன்று இடம்பெற்றுள்ளது. இராணுவத்தினரும், அளம்பில் புலனாய்வு துறையினரும் இணைந்து மக்களை துப்பாக்கியால் தாக்கி அடித்து விரட்டியதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர் […]

error: Content is protected !!