இந்தியா

விமான சேவைகளை இரத்து செய்த இந்திய நிறுவனங்கள்!

  • November 25, 2025
  • 0 Comments

சுமார் 12,000 ஆயிரம் ஆண்டுகளில் முதல் முறையாக எத்தியோப்பியாவில் வெடித்துள்ள ஹேலி குப்பி (Hayli Gubbi) எரிமலை காரணமாக விமான சேவைகள் தடைப்பட்டுள்ளன. இதன்படி ஏர் இந்தியா விமானம் சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. எரிமலை வெடிப்பால் மேல் எழுந்துள்ள சாம்பல், புகை செங்கடலின் மேல் ஏமன் மற்றும் ஓமன் நோக்கி பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் குறித்த சாம்பல் ராஜஸ்தான், டெல்லி, ஹரியானா மற்றும் பஞ்சாப் நோக்கி பரவி வருவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே கடுமையான மாசுபாட்டால் பாதிக்கப்பட்ட […]

இலங்கை

வருடத்தின் முதல் 10 மாதங்களிலேயே உச்சம் தொட்ட ஏற்றுமதி வருவாய்!

  • November 25, 2025
  • 0 Comments

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 14.4 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளதாக ஏற்றுமதி மேம்பாட்டு வாரியம் (EDB) தெரிவித்துள்ளது. 2025 ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் இலங்கையின் ஏற்றுமதி 6.0% குறிப்பிடத்தக்க வளர்ச்சியையும் நிலையான முன்னேற்றத்தையும் காட்டியுள்ளது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கை சுங்கத்துறை வெளியிட்ட தரவுகளின்படி, இரத்தினக் கற்கள், நகைகள் மற்றும் பெட்ரோலியப் பொருட்களுக்கான மதிப்பிடப்பட்ட புள்ளிவிவரங்களுடன், மொத்த ஏற்றுமதி வருவாய் 14,433.82 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. […]

உலகம்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் (Benjamin Netanyahu) இந்திய விஜயம் இரத்து!

  • November 25, 2025
  • 0 Comments

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் (Benjamin Netanyahu) இந்திய வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் இஸ்ரேல் பிரதமர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில் இந்த பயணம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதுடெல்லியில் சமீபத்தில் நடந்த குண்டுவெடிப்புத் தாக்குதலின் காரணமாக பயணம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உலகம் செய்தி

ஆப்கானிஸ்தானில் குடியிருப்பாளரின் வீட்டை தாக்கிய பாகிஸ்தான் – 09 குழந்தைகள் பலி!

  • November 25, 2025
  • 0 Comments

ஆப்கானிஸ்தானின் கோஸ்ட் மாகாணத்தில் குடியிருப்பாளர் ஒருவரின் வீட்டில் பாகிஸ்தான் படைகள் குண்டு வீசி நேற்று தாக்குதல் நடத்தியதியுள்ளனர். இதில் ஒன்பது குழந்தைகளும் ஒரு பெண்ணும் கொல்லப்பட்டதாக தாலிபான்  செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித்  (Zabihullah Mujahid) தெரிவித்தார். குனார் (Kunar) மற்றும் பாக்டிகா (Paktika) மாகாணங்களிலும் பாகிஸ்தான் தாக்குதல்களை நடத்தியதாகவும், அதில் நான்கு பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் பெஷாவரில் (Peshawar) இரட்டை தற்கொலை குண்டுவெடிப்பில் மூன்று துணை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட ஒரு […]

பொழுதுபோக்கு

விஜய்யை வழியனுப்ப வரும் பெரும் தலைகள்! ஆடியோ லாஞ்சில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்

  • November 25, 2025
  • 0 Comments

நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படமான ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் மாதம் மலேசியாவில் நடைபெற உள்ளது. இப்படத்தை எச்.வினோத் இயக்க, பூஜா ஹெக்டே, பிரியாமணி, மமிதா பைஜு, பாபி தியோல், கெளதம் மேனன், பிரகாஷ் ராஜ் போன்றோர் நடிக்கின்றனர். ஜன நாயகன் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனிடையே ஜன நாயகன் திரைப்படத்தின் ஆடியோ லான்ச் டிசம்பர் 27ஆம் திகதி மலேசியாவில் நடைபெறும் என […]

இலங்கை

6000 ரூபாயால் அதிகரித்த தங்கத்தின் விலை!

  • November 25, 2025
  • 0 Comments

உலக சந்தையில் தங்கத்தின் விலை  4,150 அமெரிக்க டொலர்களாக  அதிகரித்துள்ளது. இதற்கமைய இலங்கையிலும் தங்கத்தின் விலை 6000 ரூபாயால் அதிகரித்துள்ளது. கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய விலை நிலைவரத்தின்படி,  22 காரட் தங்கத்தின் விலை  3,09,200 ஆக பதிவாகியுள்ளது. அதேபோல்  24 காரட் தங்கத்தின் விலை   3,36,000 ஆக உயர்ந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். ஆபரண தங்கத்தின் விலை இந்த விலையை விட சற்று அதிகமாக இருக்கும் என வர்த்தகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அரசியல் ஆஸ்திரேலியா

புர்கா அணிந்துவந்து பரபரப்பை ஏற்படுத்திய செனட்டர் இடைநீக்கம்!

  • November 25, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலிய செனட் சபைக்கு புர்கா அணிந்துவந்து சர்ச்சையை ஏற்படுத்திய வன் நேஷன் கட்சி தலைவர் செனட்டர் பவுலின் ஹான்சன், செனட் சபை அமர்வில் பங்கேற்பதற்கு 7 நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களின் ஆடை கலாசாரத்தை செனட்டர் ஹான்சன் கடுமையாக விமர்சித்துவருபவர். பொது இடங்களில் முகத்தை மூடிய ஆடைகள் அணிவதை தடை செய்யுமாறு அவர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தாலும் அது கைகூடவில்லை. இந்நிலையிலேயே நேற்று செனட் சபைக்கு புர்கா அணிந்துவந்து பரபரப்பை ஏற்படுத்தினார். அவரின் செயல் அப்பட்டமான இனவெறி […]

பொழுதுபோக்கு

சிம்பு – வெற்றிமாறன் கூட்டணியில் இணைந்த மக்கள் செல்வன்

  • November 25, 2025
  • 0 Comments

சிம்புவின் 49-வது படமாக உருவாகும் அரசன் படத்தை வெற்றிமாறன் இயக்குகிறார். இதனை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் குறித்த அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியானது. அத்துடன் படத்தின் புரோமோ வீடியோவையும் படக்குழு வெளியிட்டது. இந்த புரோமோ வீடியோ மூலம் இயக்குநர் நெல்சனும் இப்படத்தில் நடிக்கிறார் என்பது உறுதியாகி இருக்கிறது. இந்த நிலையில், அரசன் படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதன்படி அரசன் திரைப்படத்தில் மக்கள் செல்வன் […]

அரசியல் இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

புலிகளை கனடா அங்கீகரிக்கவில்லை: வெளிவிவகார அமைச்சரிடம் தூதுவர் விளக்கம்

  • November 25, 2025
  • 0 Comments

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சின்னத்தை அங்கீகரித்தல் உட்பட இலங்கையில் பிரிவினையை தூண்டக்கூடிய விதத்திலான நடவடிக்கைகளை கனடா தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இலங்கைக்கான புதிய கனடா தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள இஸபெல் கத்ரின் மார்டின், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை நேற்று சந்தித்து பேச்சு நடத்தினார். இதன்போதே அமைச்சர் விஜித ஹேரத் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார். “ இலங்கையில் பிரிவினையைத் தூண்டக்கூடிய நடவடிக்கைகளைக் கனேடிய அரசாங்கம் தடுக்கவேண்டும் என அந்நாட்டு தூதுவரிடம் வலியுறுத்தினேன்.” என்று வெளிவிவகார அமைச்சர் […]

இந்தியா செய்தி

இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த 49 வயது சீன நாட்டவர் கைது

  • November 24, 2025
  • 0 Comments

உத்தரபிரதேசத்தின்(Uttar Pradesh) பஹ்ரைச்(Bahraich) மாவட்டத்தில் உள்ள இந்தியா-நேபாள எல்லையில் உள்ள ருபைதிஹா(Rupaidiha) சோதனைச் சாவடியில் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்து எல்லைப் பகுதியை வீடியோ எடுத்ததாகக் கூறப்படும் 49 வயது சீனக் குடிமகனை சஷாஸ்திர சீமா பால் (SSB) காவல்துறை படை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட சீன நாட்டவர் சீனாவின் ஹுனான்(Hunan) மாகாணத்தைச் சேர்ந்த லியு குன்ஜிங்(Liu Qunjing) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்நிலையில், இந்தியாவுக்குள் நுழைவதற்கு அவரிடம் செல்லுபடியாகும் ஆவணங்கள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், […]

error: Content is protected !!