உலகம் செய்தி

ஈரான் தூதுக்குழு பாகிஸ்தான் வருவதில் இழுபறி!

  • April 21, 2026
  • 0 Comments

ஈரான் தூதுக்குழுவினர், இஸ்லாமாபாத்துக்கு பயணம் மேற்கொள்ளவில்லை என அந்நாட்டு அரச ஊடகம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவுடனான 2ஆம் சுற்று அமைதி பேச்சுக்காக ஈரான் தூதுக்குழு பாகிஸ்தான் சென்றுள்ளது என தகவல் வெளியான நிலையிலேயே இவ்வாறு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் அமைதி பேச்சுவார்த்தைகளையும் நடத்த முடியாது என்பதில் ஈரான் அதிகாரிகள் உறுதியாக உள்ளனர் எனவும் கூறப்பட்டுள்ளது. அதேவேளை, அமைதி பேச்சுக்காக அமெரிக்காவின் துணை ஜனாதிபதி இன்று பாகிஸ்தான் செல்வார் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. […]

இலங்கை செய்தி

அமைதிக்கான நடை பயணம்: தேரர்கள் இலங்கை வருகை!

  • April 21, 2026
  • 0 Comments

‘Walk for Peace Program in Sri Lanka’ அமைதிக்கான நடைப்பயணத்திற்காக , அமெரிக்காவில் அமைதிக்கான நடைபயணத்திற்குத் தலைமை தாங்கிய வண. பஞ்ஞாகர தேரர் உள்ளிட்ட நான்கு தேரர்கள், இன்று (21) முற்பகல் நாட்டை வந்தடைந்தனர். இந்த அமைதிக்கான நடைப்பயணத்தில் கலந்துகொண்டு, உலகம் முழுவதும் அன்பைப் பெற்ற ‘ஆலோகா’ (Aloka) என்ற நாயும் அவர்களுடன் வருகை தந்துள்ளது. கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த வண. பஞ்ஞாகர தேரர் தலைமையிலான தேரர்களை, புத்தசாசன, சமய மற்றும் […]

அரசியல் இலங்கை செய்தி

சுற்றுலாசென்ற அரசியல்வாதி துப்பாக்கியுடன் கைது!

  • April 21, 2026
  • 0 Comments

“ சொக்கா மல்லி” என்றழைக்கப்படும் இரத்தினபுரி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர,Premalal Jayasekara நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அனுமதிப்பத்திரமற்ற கைத்துப்பாக்கி ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். பிரேமலால் ஜயசேகர தனது குடும்பத்தாருடன் நுவரெலியாவுக்கு சுற்றுலா வந்துள்ளார். இந்நிலையில் அவிசாவளை பகுதியில் இருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலா வந்த தரப்பினருடன், வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன்போது பிரேமலால் ஜயசேகர துப்பாக்கியைக் காட்டி மிரட்டினார் என நுவரெலியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது […]

ஐரோப்பா

பால்டிக் நாடுகளின் எல்லையில் ரஷ்ய போர் விமானம் : இடைமறித்த நேட்டோ விமானம்!

  • April 21, 2026
  • 0 Comments

விமானப் பயண விதிமுறைகளை மீறிய ரஷ்ய விமானமொன்றை இடைமறிப்பதற்காக பால்டிக் நாடுகளின் எல்லைகளுக்கு அருகிலுள்ள வான்வெளிக்கு நேட்டோ போர் விமானங்கள் அனுப்பப்பட்டுள்ளன. லிதுவேனியா தேசிய பாதுகாப்பு அமைச்சகம் இந்த தகவலை தெரிவித்துள்ளது. ரஷ்ய விமானங்களை அடையாளம் கண்டு இடைமறிப்பதற்காக, ஏப்ரல் 13 முதல் 19 வரை நான்கு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் நேட்டோ கண்காணிப்பு விமானங்கள் அனுப்பப்பட்டுள்ளன. உக்ரைன் – ரஷ்யா போரில் ஐரோப்பிய நாடுகளுக்கு சவால் விடுக்கும் வகையில் ரஷ்ய போர் விமானங்கள் அவ்வவ்போது வான்வெளியை மீறி […]

உலகம் செய்தி

ஈரானிலுள்ள யுரேனியத்தை மீட்பது கடினம்: ட்ரம்ப்

  • April 21, 2026
  • 0 Comments

ஈரானிலுள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை மீட்டெடுப்பது மிகவும் கடினமான பணியாகும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். ஈரானின் அணுசக்தி மையங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பான விபரங்களை ட்ரம்ப் வெளியிட்டுள்ளார். கடந்த ஜூன் மாதம் ‘ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்’ என்ற பெயரில் 125 போர் விமானங்கள் மூலம் ஈரானிய அணுசக்தி தளங்கள் வெற்றிகரமாக அழிக்கப்பட்டன என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். எனினும், நிலத்தடியில் புதைந்துள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை மீட்டெடுப்பது மிகவும் கடினமான மற்றும் நீண்ட காலப் பணியாக […]

பொழுதுபோக்கு

வா… வா… என் தேவதையே!

  • April 21, 2026
  • 0 Comments

அட்லீ- பிரியா தம்பதிக்கு நேற்றைய தினம் (20) இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது. இந்த தம்பதிக்கு முன்னரே மீர் என்ற ஆண் குழந்தை உள்ள நிலையில், தற்போது இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்திருப்பதாக இயக்குநர் அட்லீ அறிவித்துள்ளார். இவர்களுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

உலகம் செய்தி

பாகிஸ்தான் விரைகிறார் அமெரிக்க துணை ஜனாதிபதி!

  • April 21, 2026
  • 0 Comments

அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் D Vance இன்று (21) பாகிஸ்தான் செல்லவுள்ளார் என அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான 2ஆம் கட்ட அமைதி பேச்சு இஸ்லாமாபாத்தில் நாளை (22) நடைபெறவுள்ளது எனவும், இதில் பங்கேற்பதற்காகவே வான்ஸ் அங்கு செல்கின்றார் எனவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. எனினும், தமது பிரதிநிதிகள் குழு பங்கேற்பதை ஈரான் இன்னும் உறுதிப்படுத்தவில்லை எனவும் மேற்படி ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையிலான தற்காலிக போர் நிறுத்தம் நாளையுடன் […]

உலகம் முக்கிய செய்திகள்

ஜப்பானை தாக்கவுள்ள பாரிய நிலநடுக்கம்!

  • April 21, 2026
  • 0 Comments

வடகிழக்குக் கடற்கரைக்கு அப்பால் 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அடுத்த வாரத்தில் “மிகப்பெரிய” நிலநடுக்கம் ஏற்படுவதற்கான அபாயம் அதிகரித்துள்ளதாக ஜப்பான் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். தலைநகர் டோக்கியோவிலிருந்து 530 கி.மீ (330 மைல்) வடக்கே உள்ள இவாடே மாகாணத்திற்கு அப்பால் உள்ள கடற்பகுதியில் நிலநடுக்கம்  பதிவாகியிருந்ததுடள் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதேநேரம் சுனாமி அலைகள் 80 செ.மீ. உயரம் வரை பதிவாகியதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி  வெளியிட்டுள்ளன. இதற்கிடையே அடுத்த வாரம் மற்றுமொரு பாரிய நிலநடுக்கம் […]

உலகம் செய்தி

சமரசம்: சீன ஜனாதிபதி, சவுதி இளவரசர் பேச்சு!

  • April 21, 2026
  • 0 Comments

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் Xi Jinping மற்றும் சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான் Prince Mohammed bin Salman ஆகியோருக்கு இடையில் தொலைபேசி ஊடாக உரையாடல் இடம்பெற்றுள்ளது. மத்திய கிழக்கு போர்ச்சூழல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இருவரும் கலந்துரையாடியுள்ளனர். குறிப்பாக ஹார்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் உலகளாவிய போக்குவரத்து எவ்வித தடையுமின்றி சீராகத் தொடர வேண்டும் என சீன ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார். ஹார்முஸ் நீரிணையை மீள திறப்பதற்கும், அமைதியை ஏற்படுத்துவதற்கும் சீனா […]

உலகம்

ஈரான் மீதான போருக்கு எதிர்ப்பு – அமெரிக்காவில் பலர் கைது!

  • April 21, 2026
  • 0 Comments

ஈரான் மீதான போருக்கு எதிர்ப்பு தெரிவித்து, வொஷிங்டன் டி.சி.யில் நடைபெற்று வரும் போராட்டத்தில் குறைந்தது 62 பேர் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படைவீரர் குழுக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த போராட்டம் கேனான் ஹவுஸ் (Cannon House ) அலுவலகக் கட்டிடத்தில் இடம்பெற்றது. அமெரிக்கத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஈரானியர்களை கௌரவிக்கும் வகையில் சிவப்பு நிற துலிப் மலர்களை ஏந்தியபடியும், “ஈரான் மீதான போரை முடிவுக்குக் கொண்டு வாருங்கள்” என்று எழுதப்பட்ட பதாகைகளை கையில் ஏந்தியும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். […]

error: Content is protected !!