தாய்லாந்தில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 9 பேர் பலி
தாய்லாந்தின் மத்தியப் பகுதியில் பட்டாசுத் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பில் குறைந்தது 9 பேர் உயிரிழந்தனர்.மேலும் இருவருக்குக் காயம் என்று காவல்துறை ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தது. பாதிக்கப்பட்டவர்களைத் தேடும் பணியில் அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபட்டனர். பேங்காக்கிற்கு வடக்கில் உள்ள சுப்பான் புரி மாநிலத்தின் முவாங் மாவட்டத்தில் தொழிற்சாலை காலை 11 மணி அளவில் வெடித்தது.எரிந்துபோன கட்டடம் தரைமட்டமாகிய படங்களை மீட்புக் குழு ஒன்று பகிர்ந்தது. ஒன்பது பேரின் மரணம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தாய்லாந்துக் காவல்துறை கூறியது. முன்னதாக, […]













