வட அமெரிக்கா

அடுத்தாண்டு நடைபெறும் ஜி-20 மாநாட்டை தனது கோல்ப் ரிசார்டில் நடத்தப் போவதாக டிரம்ப் அறிவிப்பு

  • September 6, 2025
  • 0 Comments

அமெரிக்காவில் அடுத்தாண்டு டிசம்பரில் ஜி-20 மாநாடு நடைபெறவுள்ளது. இதனை, மியாமி நகரிலுள்ள தனது கோல்ப் ரிசார்டில் நடத்தப்போவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். தொழிலதிபரான டிரம்ப் அதிபர் பதவியை பயன்படுத்தி தனது வருவாயை பெருக்கிவருவதாக விமர்சனங்கள் இருந்துவருகின்றன. டிசம்பரில், கிறிஸ்துமஸ் விடுமுறையையொட்டி அனைத்து விடுதிகளிலும் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டிருக்கும் என்பதால் மாநாட்டை தனது ரிசார்டில் நடத்துவதாகவும், அதன் மூலம் லாபம் ஈட்டும் எண்ணம் தனக்கில்லை எனவும் டிரம்ப் கூறியுள்ளார். 2020-ல் அதிபராக இருந்தபோதும் ஜி-20 மாநாட்டை அதே ரிசார்டில் நடத்த […]

இலங்கை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதி

  • September 6, 2025
  • 0 Comments

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயர் இரத்த அழுத்தம் மற்றும் மயக்கம் காரணமாக நேற்று மதியம் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலை ஆணையாளருமான ஜகத் வீரசிங்க தெரிவித்தார். 2022 ஆம் ஆண்டு கிரிபன்வெவ பகுதியில் மகாவலி அதிகாரசபைக்குச் சொந்தமான நிலத்தில் கட்டப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசியல் அலுவலகம் எரிக்கப்பட்டு அழிக்கப்பட்டதால் ஏற்பட்ட சேதத்திற்கு ரூ. 8.85 மில்லியன் செலுத்துமாறு அரசு அதிகாரிகளுக்கு அழுத்தம் […]

இன்றைய முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

இந்தியா, ரஷ்யாவை இழந்துவிட்டோம் – புலம்பும் டிரம்ப்

  • September 6, 2025
  • 0 Comments

மோசமான, இருண்ட சீனாவிடம் இந்தியாவையும், ரஷ்யாவையும் இழந்துவிட்டோம் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் புலம்பியுள்ளார். அமெரிக்கா ஜனாதிபதி இரண்டு காரணங்களுக்காக இந்தியாவுக்கு 50 சதவீத வரி விதித்துள்ளார். வர்த்தக பற்றாக்குறையை காரணம் காட்டி 25 சதவீதம் வரி விதித்துள்ளார். இரண்டாவதாக, ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதால், அந்த நிதியை பயன்படுத்தி கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனுடனான போரை ரஷ்யா நீட்டித்து வருகிறது என டிரம்ப் குற்றம்சாட்டினார். இந்த இரண்டாவது காரணத்துக்காக, இந்தியா மீது கூடுதலாக […]

செய்தி

ஜெலென்ஸ்கி ரஷ்யா வந்தால் 100 சதவீதம் பாதுகாப்பை உறுதி செய்வதாக புட்டின் அறிவிப்பு

  • September 6, 2025
  • 0 Comments

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் பேச்சுவார்த்தைக்காக மொஸ்கோ வந்தால், பாதுகாப்பை 100 சதவீதம் உறுதி செய்வதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், கூறியுள்ளார். கிழக்குப் பொருளாதார மன்றத்தில் பேசிய அவர், ரஷ்யா-உக்ரைன் மோதலை முடிவுக்குக் கொண்டுவர பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மாஸ்கோ சிறந்த இடம் என்று கூறினார். இருப்பினும், பேச்சுவார்த்தைகள் எப்போதாவது ஒரு அமைதி ஒப்பந்தத்திற்கு வழிவகுக்குமா என்பது குறித்து தனக்கு சந்தேகம் இருப்பதாக அவர் கூறினார். வேறொரு நாட்டில் பேச்சுவார்த்தை நடத்துவதை புட்டின் நிராகரித்துள்ளார். அதற்கு ரஷ்ய […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் சீன கார் விற்பனையில் புதிய புரட்சி

  • September 6, 2025
  • 0 Comments

கடந்த மாதத்தில் ஆஸ்திரேலியாவில் சீன கார் விற்பனை அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலிய கார் சந்தை தரவுகளின்படி, BYD / GWM / MG மற்றும் Chery Top ஆகியவை முதல் முறையாக முதல் 10 விற்பனை பட்டியலில் இடம்பிடித்துள்ளன. ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 20,000க்கும் மேற்பட்ட சீன தயாரிப்பு கார்கள் விற்பனை செய்யப்பட்டன, இது கடந்த ஆண்டை விட 67% அதிகம். 2035 ஆம் ஆண்டுக்குள், ஆஸ்திரேலிய வாகனங்களில் 43% சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் போயிங் நிறுவனத்தைச் சேர்ந்த 3,200 பேர் வேலைநிறுத்தம்

  • September 6, 2025
  • 0 Comments

அமெரிக்காவில் போயிங் விமான நிறுவனத்தைச் சேர்ந்த 3,200 தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்காவில் உள்ள மிசௌரி மற்றும் இல்லினாய்ஸ் மாகாணங்களில் இந்த வேலை நிறுத்தம் முன்கெடுக்கப்பட்டுள்ளது. ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக ஆகஸ்ட் 4-ஆம் திகதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அவர்களுடனான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. அவர்களுக்குப் பதிலாக நிரந்தர ஊழியர்களை நியமிக்கப்போவதாக போயிங் நிறுவனம் அறிவித்துள்ளது.

இலங்கை

கொழும்பை உலுக்கிய துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் – இளைஞன் பலி

  • September 6, 2025
  • 0 Comments

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் நேற்று இரவு 11.45 மணியளவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். மஹாவத்தை மணிக்கூண்டு அருகே மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். இறந்தவர் களனியைச் சேர்ந்த 26 வயதுடையவர். துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை, மேலும் துப்பாக்கிச் சூட்டுக்கு ரிவால்வர் வகை துப்பாக்கி […]

அறிவியல் & தொழில்நுட்பம்

ஸ்மார்ட்போன் சந்தையில் புதிய வரவு – சாம்சங் S25 FE

  • September 6, 2025
  • 0 Comments

தொழில்நுட்ப உலகில், ஒவ்வொரு நாளும் ஒரு புதிய அத்தியாயம் திறந்துகொண்டே இருக்கிறது. பல ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் புதுப்புது மாடல்களை அறிமுகப்படுத்தி சந்தையை நிரப்பிவிட்டன. செப்டம்பர் மாதத்தில் மேலும் பல போன்கள் வரிசை கட்டி நிற்கின்றன. சாம்சங் நிறுவனம் இந்த ஆண்டு இரண்டு ‘அன்பேக்டு’ (Unpacked) நிகழ்ச்சிகளை ஏற்கனவே முடித்துவிட்டது. சாம்சங் நிறுவனத்தின் புதிய தயாரிப்புகளை பற்றிய என்னுடைய ஆய்வுகளை நிறைவு செய்த நிலையில், மேலும் ஒரு புதிய தயாரிப்புடன் சாம்சங் நிறுவனம் களமிறங்கி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. […]

விளையாட்டு

விராட் கோலியின் கேப்டன்சி குறித்து யுவராஜ் சிங் தந்தை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

  • September 6, 2025
  • 0 Comments

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங், செப்டம்பர் 5, 2025 அன்று இன்சைட் ஸ்போர்ட்ஸ் இணையதளத்திற்கு அளித்த பேட்டியில், விராட் கோலியின் கேப்டன்ஷி குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். விராட் கோலியின் தலைமையில் யுவராஜ் சிங்கின் கிரிக்கெட் வாழ்க்கையை நீட்டிக்க முடியுமா என்ற கேள்விக்கு பதிலளித்த யோக்ராஜ், “வெற்றி, பணம் மற்றும் புகழ் உள்ள இடத்தில் நண்பர்கள் இருக்க முடியாது என்று நான் ஏற்கனவே கூறியிருக்கிறேன். எப்போதும் பின்னால் குத்துபவர்கள் (பேக்ஸ்டாபர்ஸ்), […]

இலங்கை

இலங்கையில் பல பகுதிகளில் இன்று உச்சம் கொடுக்கும் சூரியன்

  • September 6, 2025
  • 0 Comments

மேல், சப்ரகமுவ மற்றும் வடக்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று சிறிதளவான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சூரியனின் தொடர்பான தென்திசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக, இவ் […]

error: Content is protected !!