இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹோட்டல் மேலாளர் அமெரிக்காவில் தலை துண்டிக்கப்பட்டு கொலை ; சக ஊழியர் கைது
டெக்சசில் 50 வயது நபர் ஒருவர் அவரின் மனைவி, மகன் கண்முன் தலை துண்டிக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அவர் சாலையோர ஹோட்டலொன்றில் மேலாளராக வேலை செய்தார். துணி துவைக்கும் இயந்திரத்தைப் பயன்படுத்தவேண்டாம் என்று அவர் ஊழியரிடம் கூறியதால் சர்ச்சை மூண்டது. டாலஸ் நகரில் உள்ள டௌன்டவுன் ஸ்வீட்ஸ் ஹோட்டலில் கொடூரச் சம்பவம் புதன்கிழமை (செப்டம்பர் 10) காலை நடந்தது. நகரக் காவல்துறை அந்தத் தகவலைத் தெரிவித்தது. கர்நாடகத்திலிருந்து புலம்பெயர்ந்தவரான சந்திரமௌலி நாகமல்லையா, தமது […]












