குற்றங்களை சரிசெய்ய தேசிய காவல்படையினர் மெம்பிஸுக்கு அனுப்பப்படுவர் ; டிரம்ப்
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், டென்னசி மாநிலத்தின் மெம்ஃபிஸ் நகருக்கு தேசிய பாதுகாப்புப் படையினரை அனுப்பப்போவதாகத் தெரிவித்துள்ளார். குற்றச்செயல்களைக் குறைக்கும் நோக்கத்துடன் அவ்வாறு செய்யவிருப்பதாகத் டிரம்ப் தெரிவித்துள்ளார். அவரின் நிர்வாகம் சென்ற மாதம் (ஆகஸ்ட் 2025) வாஷிங்டனில் காவல்துறையை அதன் கட்டுக்குள் கொண்டுவந்தது. “மெம்ஃபிசுக்குச் செல்கிறோம். அங்கு நிறையப் பிரச்சினைகள் உள்ளன. வாஷிங்டனைப் போன்றே அங்கும் நாங்கள் நடவடிக்கைகளை எடுக்கப்போகிறோம்,” என்று டிரம்ப் சொன்னார். லூயிஸியானா மாநிலத்தின் நூ ஆர்லென்ஸ் உள்ளிட்ட மற்ற நகரங்களுக்கும் பாதுகாப்புப் படையினர் […]













