ஆசியா

தென் சீனக் கடலில் பிலிப்பைன்ஸின் ஆத்திரமூட்டல்களுக்கு எதிராக எச்சரிக்கை விடுத்த சீன இராணுவம்

  • September 14, 2025
  • 0 Comments

தென்சீனக் கடலில் தன்னைத் தூண்டிவிடும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்று பிலிப்பீன்சுக்குச் சீன ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வழக்கம்போல் தென்சீனக் கடலில் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டதாக சீன ராணுவம் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 14) கூறியது. தென்சீனக் கடலில் பதற்றநிலையை மோசமாக்கும் வகையில் பிலிப்பீன்ஸ் நடந்துகொள்ளக்கூடாது என்று சீன ராணுவம் வலியுறுத்தியது. தென்சீனக் கடலில் சீனாவின் இறையாண்மையைப் பாதுகாக்கும் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெறும் என்று அது கூறியது. தென்சீனக் கடலின் கிட்டத்தட்ட அனைத்துப் பகுதிகளும் தனக்குச் சொந்தமானவை […]

பொழுதுபோக்கு

திருமணத்திற்கு தயாரான தமன்னா… ஒப்பனா சொல்லிட்டாரே

  • September 14, 2025
  • 0 Comments

பாலிவுட் சினிமாவில் தற்போது சென்ஷேஷ்னல் நடிகையாகவும் கிளாமர் குயினாகவும் திகழ்ந்து வருபவர் தான் நடிகை தமன்னா. தென்னிந்திய சினிமாவில் ஆரம்பக்கட்டத்தில் நடித்து பிரபலமான தமன்னா, தற்போது நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது தனது திருமணம் மற்றும் ரிலேஷன்ஷிப் பற்றி பகிர்ந்துள்ளார் தமன்னா. அதில், ஒரு சிறந்த வாழ்க்கைத்துணையாக மாறுவதற்கு நான் முயற்சி செய்து வருகிறேன். ஒருவருடைய வாழ்க்கையில் நான் வருவது, அவர்களின் முந்தைய வாழ்க்கையில் ஏதோ நல்ல காரியங்கலை செய்திருக்கிறார்கள் என்று உணரவேண்டும். […]

ஆசியா செய்தி

நேபாள நாட்டின் பெண் பிரதமர் உத்தியோகப்பூர்வமாக பதவியேற்றார்!

  • September 14, 2025
  • 0 Comments

நேபாளத்தின் புதிய பிரதமர் சுஷிலா கார்க்கி இன்று (09.14) பதவியேற்றுள்ளார். நாட்டை “மீண்டும் கட்டியெழுப்ப அமைதியையும் ஒத்துழைப்பையும் அவர் வலியுறுத்தியுள்ளார். நாட்டின் முதல் பெண் பிரதமரான சுஷிலா கார்க்கி, தனது தற்காலிக அலுவலகத்தில் கூடியிருந்த உயர் அதிகாரிகளிடம், கொல்லப்பட்ட போராட்டக்காரர்களின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 1 மில்லியன் ரூபாய் நிதி இழப்பீடு வழங்கப்படும் என்றும், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார். ஜெனரல் இசட் எதிர்ப்பு என்று அழைக்கப்படும் பாரிய ஆர்ப்பாட்டங்கள் செப்டம்பர் 8 ஆம் திகதி ஆரம்பமாகிய […]

இலங்கை

இலங்கை – வீதிக்கடவையில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி முன்னாள் மாகாண சபை உறுப்பினர் உயிரிழப்பு

  • September 14, 2025
  • 0 Comments

திருகோணமலை அனுராதபுர சந்தி விபுலானந்த பாடசாலைக்கு முன்னால் உள்ள வீதிக்கடவையில் இடம்பெற்ற விபத்தில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே. நாகேஸ்வரன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மூதூர் சம்பூரிலிருந்து மரணச் சடங்கு ஒன்றுக்கு பஸ்ஸில் வருகை தந்து மஞ்சக் கோட்டின் ஊடாக வீதியை கடக்க முற்பட்ட போது மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த பெண்ணொருவர் மோதியதாகவும் ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது. இவ்விபத்து இன்று (14) இடம் பெற்றுள்ளது.இவ்விபத்தில் மூதூர் சம்பூர் பகுதியைச் […]

தென் அமெரிக்கா

ஈக்குவாடோரில் துப்பாக்கிச்சூடு மேற்கொண்ட குற்றக்கும்பல் – 07 பேர் பலி!

  • September 14, 2025
  • 0 Comments

ஈக்குவாடோரின் வடப்பகுதியில் குற்றக் கும்பல் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்துள்ளதுடன், நான்கு பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் குயிட்டோவிற்கு மேற்கே 130 கிலோமீட்டர் (80 மைல்) தொலைவில் அமைந்துள்ள சாண்டோ டொமிங்கோ டி லாஸ் சச்சிலாஸ் நகரில் இந்த துப்பாக்கிச்சூடு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு குற்றக் கும்பல்களுக்கு இடையிலான “பிராந்திய தகராறு” காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஐரோப்பா

லண்டன் முழுவதும் குடியேற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் – 100,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

  • September 14, 2025
  • 0 Comments

லண்டன் முழுவதும் நேற்று 100,000க்கும் மேற்பட்ட குடியேற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரித்தானிய கொடிகளை ஏந்தி அணிவகுத்துச் சென்றனர். இந்த அணிவகுப்பு குடியேற்ற எதிர்ப்பு மற்றும் இஸ்லாம் எதிர்ப்பு ஆர்வலர் டாமி ராபின்சனால் ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. நேற்று நண்பகலில், பல்லாயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் தேம்ஸ் நதியின் தெற்கே தெருக்களில் இறங்கி இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் இடமான வெஸ்ட்மின்ஸ்டர் நோக்கி அணிவகுத்துச் சென்றனர். போராட்டக்காரர்கள் பிரித்தானிய ஒன்றிய ஜாக் மற்றும் இங்கிலாந்தின் சிவப்பு மற்றும் வெள்ளை செயிண்ட் ஜார்ஜ் சிலுவையை ஏந்திச் […]

இலங்கை

இலங்கையில் வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம் – 7000 முறைப்பாடுகளை பதிவு செய்த மக்கள்

  • September 14, 2025
  • 0 Comments

இலங்கையில் பொலிஸ் தலைமையகத்தை நேரடியாகத் தொடர்பு கொள்ளக்கூடிய வகையில் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட, வட்ஸ்அப் இலக்கத்துக்கு முறைப்பாடுகள் குவிந்துள்ளது. இதுவரை சுமார் 7,000 முறைப்பாடுகள் கிடைத்துள்ளது. அவற்றில், பொலிஸார் தொடர்பான அனைத்து முறைப்பாடுகள் குறித்து தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்கு உடனடி தீர்வுகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது. குற்றங்கள் மற்றும் பல்வேறு பிரச்சினைக்குரிய சூழ்நிலைகள் குறித்து பொதுமக்களுக்கு உடனடியாகத் தெரிவிக்க, அண்மையில் 071 8598 888 என்ற வட்ஸ்அப் இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த இலக்கத்தின் ஊடாக […]

செய்தி

மெக்சிகோவில் நடந்த நெடுஞ்சாலை விபத்தில் 15 பேர் பலி

  • September 14, 2025
  • 0 Comments

மெக்சிகோவில் நடந்த நெடுஞ்சாலை விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். பல வாகனங்கள் மோதியதில் தீ விபத்து ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐரோப்பா

பிரித்தானியாவில் திருமண படத்தில் யாரும் அறியாத விருந்தினர் – 4 ஆண்டுகளின் பின் தீர்ந்த மர்மம்

  • September 14, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் திருமண படத்தில் யாரும் அறியாத விருந்தினர் ஒருவர் 4 ஆண்டுகளின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். மிஷேல் மற்றும் ஜான் வாய்லி தம்பதிகள், 4 ஆண்டுகளுக்கு முன்திருமணம் செய்து கொண்டனர். எனினும் திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் ஒருவர் முகம் தெரிந்தும், யாரும் அவரை அடையாளம் காண முடியாததால், அது ஒரு மர்மமாகவே இருந்து வந்தது. எதிர்பாராத விருந்தாளியான அவர் யார் என நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்ட பலரிடம் விசாரித்தும் எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை. சமீபத்தில், ஒரு சமூக ஊடகப் பிரபலரின் […]

வாழ்வியல்

அடிக்கடி கொட்டாவி வருவதற்கான காரணம்

  • September 14, 2025
  • 0 Comments

வாய் மற்றும் மூக்கின் வழியாக காற்றை உள்ளிழுத்து, அதனை வாய்வழியே வெளியேற்றும் இயற்கையான செயல் ‘கொட்டாவி’ என்று அழைக்கப்படுகிறது. இந்த செயலில், வாயை அகலமாக திறப்பதுடன், நுரையீரலுக்கும் செவிப்பறைக்கும் விரிவாக மாற்றம் ஏற்படுகிறது. இதே சமயத்தில், சிலர் கை, கால்களை நீட்டி வழுக்குவதை “முறித்தல்” என்று குறிப்பிடுகிறோம். பொதுவாக தூக்கம் வருவதற்கு முந்தைய நேரத்தில் அல்லது தூக்கத்திலிருந்து எழுந்த பிறகு, மேலும் அதிகமாக உழைத்த பிறகு, அல்லது சலிப்பு, பசி, தூக்கக்குறைவு போன்ற காரணங்களால் கொட்டாவி வரும். […]

error: Content is protected !!