இலங்கை செய்தி

இலங்கையில் எரிபொருள் விலை குறைப்பு

இன்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் திருத்தியுள்ளது.

இதன்படி, 95 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 07 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 440 ரூபாய்.

அத்துடன், லங்கா சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 72 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 386 ரூபாவாகும்.

மண்ணெண்ணெய் விலை லீற்றருக்கு 12 ரூபாவினால் குறைந்துள்ளதுடன் அதன் புதிய விலை 245 ரூபாவாகும்.

எவ்வாறாயினும், 92 ஒக்டேன் பெற்றோல் மற்றும் ஆட்டோ டீசல் விலையில் மாற்றம் இல்லை.

லங்கா ஐஓசி நிறுவனமும் எரிபொருள் விலையை விலை திருத்தத்திற்கு ஏற்ப  திருத்தங்களை அறிவித்துள்ளது.

மேலும், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விலைக்கு ஏற்ப சினோபெக் எரிபொருளின் விலைகளும் திருத்தப்பட்டுள்ளன.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை