ஆசியா

பங்ளாதேஷில் இந்து கோவிலைச் சேதப்படுத்திய நான்கு இளைஞர்கள் கைது

பங்ளாதேஷில் இந்து கோவிலையும் இந்துக்களின் வீடுகள் மற்றும் கடையும் சேதப்படுத்தியதாக நான்கு பேரை அந்நாட்டுக் காவல்துறை சனிக்கிழமை (டிசம்பர் 14) கைது செய்தது.கைது செய்யப்பட்ட நால்வரும் 19 வயதுக்கும் 31 வயதுக்கும் உட்பட்டவர்கள். அவர்களின் பெயரை காவல்துறை வெளியிட்டு உள்ளது.

அடையாளம் காணப்பட்ட மேலும் 12 பேர் மீதும் பெயர் விவரம் தெரியாத, அதேநேரம் வன்முறையில் ஈடுபட்ட 170 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் காவல்துறை கூறியது.

பங்ளாதேஷ் தலைமை ஆலோசகரின் ஊடகப் பிரிவு இது குறித்து விளக்கி உள்ளது.

இம்மாதத் தொடக்கத்தில், டிசம்பா் 3ஆம் திகதி சுனாம்கஞ்ச் மாவட்டத்தைச் சோ்ந்த ஆகாஷ் தாஸ் என்பவர் தமது ஃபேஸ்புக்கில் பதிவேற்றிய ஒரு தகவலும் சில படங்களும் திடீர் பதற்றத்தை ஏற்படுத்தின.சில நிமிடங்களில் அந்தப் பதிவையும் படங்களையும் ஆகாஷ் தாஸ் அகற்றிவிட்டபோதிலும் அதற்குள் உள்ளூரில் ஏராளமானோர் அவற்றைப் பகிர்ந்தனர்.

அதனைத் தொடர்ந்து அந்த வட்டாரத்தில் வன்முறை தலைதூக்கியது. கும்பல் ஒன்று அப்பகுதியில் உள்ள லோக்நாத் கோயிலையும் இந்து மக்களின் வீடுகளையும் கடைகளையும் அடித்து நொறுக்கியது.தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் நிலைமையைக் கட்டுப்படுத்தினர்.

வன்முறைக்குக் காரணமாக ஆகாஷ் தாஸ் கைது செய்யப்பட்டு, அவரைப் பாதுகாக்கும் நோக்கில் சதார் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டார்.இந்நிலையில், வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

பங்ளாதேஷில் வன்முறைப் போராட்டத்துக்குப் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டைவிட்டு தப்பி ஓடி இந்தியாவில் தஞ்சமடைந்தாா்.

அரசுக்கு எதிரான போராட்டத்தின்போதும் அது முடிந்த பின்னர் அங்குள்ள சிறுபான்மை இந்துக்களுக்கு எதிராக வன்முறை நிகழ்ந்து வருவதாக ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.

Mithu

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்