ஆசியா செய்தி

வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா மருத்துவமனையில் அனுமதி

வங்கதேச முன்னாள் பிரதமர் காலிதா ஜியா உடல்நலக் குறைவால் அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கதேச தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் வங்கதேச பிரதமருமான 79 வயதான காலிதா ஜியா தனது குக்‌ஷான் இல்லத்தில் இருந்து எவெர்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி அவரது மருத்துவர் ஜாஹித் ஹொசைன் , “அவருக்கு பல பரிசோதனைகளை பரிந்துரைக்கப்பட்டுள்ளது, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் ஒரு தனி அறையில் மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சையில் உள்ளார்” என்று தெரிவித்தார்.

காலிதா ஜியா நீண்டகாலமாக கல்லீரல் அழற்சி, மூட்டுவலி, நீரிழிவு நோய், சிறுநீரகம், நுரையீரல், இதயம், கண்கள் தொடர்பான பிரச்னைகள் உள்ளிட்ட பல்வேறு நோய்களுடன் போராடி வருகிறார்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி