இந்தியா செய்தி

அடர்ந்த பனிமூட்டம் காரணமாக டெல்லியில் விமான சேவைகள் பாதிப்பு

டெல்லியில் ஏற்பட்டுள்ள கடுமையான பனிமூட்டம் காரணமாக 470 விமானங்கள் தாமதமான நிலையில் பயணிகள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

தேசிய தலைநகர் டெல்லியில் கடும் பனிப் பொழிவால் சாலை மற்றும் விமானப் போக்குவரத்து பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அடர்ந்த பனிமூட்டம் காரணமாக, IGIA விமான நிலையத்தில் 470 விமானங்கள் தாமதமாகின.

இதுகுறித்து இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் அதிகாரி ஒருவர், ‘400க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக புறப்பட்டன. எனினும், எந்த விமானங்களும் ரத்து செய்யப்படவில்லை’ என்றார்.

விமான கண்காணிப்பு மையம் வெளியிட்ட அறிவிப்பின்படி, டெல்லிக்கு பல்வேறு பகுதியில் இருந்து வரும் விமானங்களில் 470 விமானங்கள் தாமதமாக வந்துசேர்ந்தன.

வரும் நாட்களில் வானிலை மேலும் மோசமடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடமேற்கில் இருந்து மணிக்கு 4 கிலோமீட்டருக்கும் குறைவான வேகத்தில் காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி