பொழுதுபோக்கு

24 மணி நேரத்திற்குள் முதல் எலிமினேஷன்.. இவங்களுக்கே இந்த நிலமையா?

பிக்பாஸ் 8 நேற்று ஆரம்பித்த நிலையில் 24 மணி நேரத்திற்குள் முதல் எலிமினேஷன் என்பது அதிர்ச்சியாக தான் இருக்கிறது. ஆனால் நிகழ்ச்சியை ஆரம்பத்திலேயே சுவாரஸ்யமாக கொண்டு செல்ல வேண்டும் என்ற விஜய் டிவியின் பிளான் தான் இது.

இதன் மூலம் டிஆர்பியை எகிற வைக்க புது யுக்தியை அவர்கள் கையாண்டுள்ளனர். ஆனால் இதுவே அவர்களுக்கு விமர்சனமாகவும் மாறி இருக்கிறது. அதன்படி தற்போது வெளிவந்துள்ள ப்ரோமோவில் முதல் எலிமினேஷன் பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.

24 மணி நேரத்திற்குள் ஒருவர் வெளியேற வேண்டும் என்ற பிக்பாஸின் கட்டளை போட்டியாளர்களை அதிர்ச்சியாக்கி இருக்கிறது. அதற்குள் எப்படி ஒருவர் வீட்டிற்கு தேவையில்லாதவர் என கணிக்க முடியும் என அவர்கள் குழம்பி போய் இருக்கின்றனர்.

ஆனாலும் தற்போது நாமினேஷன் தொடங்கி விட்டது. அந்த வகையில் விஜய் சேதுபதியின் ரீல் மகளான சாச்சனா வீட்டில் இருந்து வெளியேறி விட்டதாக தற்போது நம்பத் தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றது. இதுவே ஆடியன்சை கொந்தளிக்க வைத்திருக்கிறது.

வீட்டிற்குள் தேவையில்லாத ஆணியாக பலர் இருக்கும்போது எதற்காக ஆசை கனவுகளுடன் வந்த பெண்ணை வெளியில் அனுப்ப வேண்டும். இதற்கு கூப்பிடாமலேயே இருந்திருக்கலாம் என விமர்சனங்கள் எழுந்துள்ளது.

இருந்தாலும் இதற்கு பின்னால் ஏதோ ஒரு திட்டம் இருக்கும் என தெரிகிறது. அவ்வளவு எளிதில் இவர் வெளியேறி விட மாட்டார் என்றும் கூறப்படுகிறது. மேலும் முதல் நாளிலேயே அர்னவ், தர்ஷிகா உள்ளிட்ட சிலர் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்