ஆசியா

தென் கொரியாவில் 09 மாடிகளை கொண்ட கட்டடத்தில் தீ விபத்து : 07 பேர் உயிரிழப்பு!

தென் கொரியாவின் புச்சியோன் நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 07 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 12 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்களில் மூன்று பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக புச்சியோனின் பொது சுகாதாரத் துறையின் இயக்குனர் கிம் இன்-ஜே தெரிவித்துள்ளார்.

ஒன்பது மாடிகள் கொண்ட ஹோட்டலில் 23 விருந்தினர்கள் இருந்ததாக புச்சியோன் தீயணைப்பு நிலையத்தின் அதிகாரி லீ சாங்-டான் தெரிவித்தார்.

தற்போது தீ முற்றாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்