இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

செம்மணி மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் இன்றும் தொடரும்

யாழ்ப்பாணம் – செம்மணி, சித்துபாத்தி பகுதியில் அடையாளம் காணப்பட்ட மனித புதைகுழியின் இரண்டாம் அகழ்வு பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவுள்ளது.

ஏழாவது நாளாக இன்றும் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரையில், மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின்போது, முழுமையாக 33 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அத்துடன், சில சந்தர்ப்பங்களில் பல மனித எச்சங்கள் ஒன்றுடன் ஒன்று பிணைந்தவாறு அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதனால், என்புக்கூடுகளின் எண்ணிக்கையைச் சரியாகக் கணக்கிடுவதில் சிக்கல் நிலவுவதாக, இந்த வழக்கில், பாதிக்கப்பட்டோர் தரப்பு சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி ரனிதா ஞானராஜ் தெரிவித்துள்ளார்.

அகழ்வின்போது, என்புக்கூடுகளுக்கு மேலதிகமாக புத்தகப்பை, பொம்மை மற்றும் சிறுவர் பாதணியொன்றும், நேற்று மீட்கப்பட்டுள்ளன.

இதனிடையே, செம்மணி மற்றும் சித்துபாத்தி புதைகுழி வழக்குகளை ஒன்றாக இணைப்பது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய, முறையான நீதிமன்ற அனுமதியுடன் அதனை முன்னெடுப்பது குறித்து பாதிக்கப்பட்டோர் தரப்பில் கலந்துரையாடல்கள் இடம்பெறுவதாகச் சட்டத்தரணி ரனிதா ஞானராஜ் தெரிவித்துள்ளார்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்