இலங்கை செய்தி

தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவிப்பு!

ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கைகளில் தலையிடாத வகையில் 2025ஆம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்ற நடைமுறையை நடைமுறைப்படுத்துவதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி, பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு 2025 ஆம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த சேவை அதிகாரிகளின் வருடாந்த இடமாற்ற அறிவிப்பை ஒருங்கிணைந்த சேவைகள் சுற்றறிக்கையின் ஊடாக வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று (29) அனைத்து அமைச்சின் செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிராந்திய செயலாளர்களுக்கு இது தொடர்பான இடமாற்ற சுற்றறிக்கை ஒருங்கிணைக்கப்பட்ட சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளை விநியோகிப்பதற்காக 8,000 அதிகாரிகளை ஈடுபடுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித கே. ரணசிங்க தெரிவித்தார்.

உத்தியோகபூர்வ தபால் வாக்குகள் மற்றும் விசேட கடிதங்களை விரைவாக விநியோகிக்கும் விசேட வேலைத்திட்டம் ஒன்று அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, சட்டபடி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தாலும், ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கைகளுக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக இலங்கை ஐக்கிய கிராம அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் நந்தன ரணசிங்க தெரிவித்தார்.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை