உலகம் செய்தி

குவைட் சர்வதேச விமான நிலையம் மீது ட்ரோன் தாக்குதல்

குவைட் சர்வதேச விமான நிலையம் ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளானதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

விமான நிலையத்தின் மீது பல ட்ரோன் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக
அந்நாட்டின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலால் ரேடார் அமைப்பு கணிசமாக சேதமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

எவ்வாறாயினும் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே விமான நிலையம் மீது இதற்கு முன்பு, கடந்த புதன்கிழமை, ஈரானுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஒரு ட்ரோன் தாக்குதல் விமான நிலையத்தின் எரிபொருள் கிடங்கை இலக்குவைத்து நடத்தப்பட்டது.

இந்த சம்பவம் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பாதுகாப்பு பதற்றத்தை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி