இலங்கை

மே 22, 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் அனைத்து மது, இறைச்சி கடைகளுக்கு பூட்டு?

ஸ்ரீ புத்தர் ஆண்டு 2568 (2024) க்கான அரச வெசாக் திருவிழாவிற்காக நடத்தப்படும் தொடர் நிகழ்ச்சிகள் காரணமாக, மே 22, 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் மிருகவதையை நிறுத்துமாறும், இறைச்சிக் கடைகள் மற்றும் மதுபானக் கடைகள் உட்பட போதைப்பொருள் விற்பனை செய்யும் இடங்களை மூடுமாறும் புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, மாத்தளை மாவட்டத்தை மையமாகக் கொண்டு வெசாக் வாரமாக பெயரிடப்பட்டு, அரச வெசாக் விழா எதிர்வரும் மே மாதம் 21ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டுக்கான அரச வெசாக் பண்டிகையின் தொனிப்பொருள் “மற்றவர்கள் செய்ததை பார்க்காமல் நாம் செய்ததை நோக்குவோம்” என்பதாகும்.

விழாவின் தொடக்க விழா மாத்தளை தர்மராஜா பிரிவேனா வளாகத்திலும், நிறைவு விழா பல்லேபொல பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மில்லவன ஸ்ரீ சுனந்தராம ஆலய வளாகத்திலும் நடைபெற உள்ளது.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்