ஆசியா

பாகிஸ்தானுக்கு 5ம் தலைமுறை ஜே-35 ரக போர் விமானங்களை வழங்கவுள்ள சீனா

பாகிஸ்தானுக்கு ரேடாரில் சிக்காத 40 ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை சீனா வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. இதன்மூலம் இந்த தொழில்நுட்பம் கொண்ட சில நாடுகள் பட்டியலில் பாகிஸ்தானும் இணைய உள்ளது.

இந்நிலையில் இந்திய விமானப் படை முன்னாள் விமானியும் பாதுகாப்பு விமர்சகருமான குரூப் கேப்டன் அஜய் அலாவத் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது,

பாகிஸ்தானுக்கு ரேடாரில் சிக்காத 40 ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை சீனா வழங்க உள்ளது. இதில் வியப்பதற்கு ஒன்றும் இல்லை. ஏனெனில் இதற்காக பாகிஸ்தானால் நியமிக்கப்பட்ட போர் விமானிகள் குழு 6 மாதங்களுக்கும் மேலாக பயிற்சிக்காக சீனாவில் உள்ளது. பாகிஸ்தானுக்கு சீனா வழங்க இருப்பது எப்சி-31 ரக விமானம் ஆகும். இது சீனா தற்போது வைத்திருக்கும் ஐந்தாம் தலைமுறை ஜே-35 ரக விமானத்தை விட சற்று குறைந்த போர்த் திறனை கொண்டிருக்கும். ஏனெனில் அதிகபட்ச போர்த் திறனை கொண்டிருக்கும் ஒரு விமானத்தை எந்த நாடும் மற்றொரு நாட்டுக்கு வழங்காது.

பாகிஸ்தானை விட இந்திய விமானப்படை நீண்ட காலமாக வலுவாக இருந்து வருகிறது. சிறந்த பயிற்சி, உத்திகள், ஆயுத மேலாண்மை என பல வகையிலும் பாகிஸ்தானை விட இந்தியா முன்னிலையில் இருந்து வருகிறது.இந்நிலையில் பாகிஸ்தானுக்கு இந்த வகை விமானம் வழங்கப்படுவது ஒரு கவலைக்குரிய விஷயமாகும்.

இதற்கு ஐந்தாம் தலைமுறை போர் விமானம் தயாரிப்பதற்கான நமது முயற்சிகளை நாம் இயன்றவரை விரைவுபடுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Mithu

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்