இலங்கை

திருகோணமலையில் பௌத்த விகாரை – பிக்குவிற்கு ஏற்பட்டுள்ள ஆபத்து

திருகோணமலை- பொரலுகந்த ரஜமஹா விகாரை அமைப்பதற்கு முன்னின்று செயற்பட்ட பௌத்த பிக்குவிற்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக மொரவெவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

மொரவெவ- தெவனிபியவர இந்ரா ராம விகாரையின் விஹாராதிபதி பொல்ஹேன்கொட உபரத்ன ஹிமி 2023/09/11 ம் திகதி இம்முறைப்பாட்டினை செய்துள்ளார்.

அம்முறைப்பாட்டில் சொகுசு வெள்ளை வேனில் நான்கு பேர் தனக்கு சொந்தமான இரண்டு விகாரைகளுக்கும் தேடிச் வந்ததாகவும், குறித்த வேனில் வருகை தந்தவர்கள் யார் என்று தெரியாது எனவும் தனக்கு உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அம்முறைபாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருகோணமலை இலுப்பை குளம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் பொரலுகந்த ரஜமஹா விகாரையின் நிர்மாண பணிகளை இடைநிறுத்தப்பட்டமைக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை முன்னின்று செய்ததாகவும், அதனால் தனக்கு உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என சந்தேகிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனாலும் குறித்த முறைப்பாட்டிற்கு அமைவாக மொரவெவ பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், விகாரைக்கு வருகை தந்த வெள்ளை வேன் தொடர்பில் வாக்குமூலங்களை பெற்று வருவதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்