இந்தியா பொழுதுபோக்கு

2 கோடி ரூபாய் கேட்டு பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல்

பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மீண்டும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அவர் பிணைத்தொகையாக ரூ. 2 கோடி கேட்டுள்ளார். மும்பை போக்குவரத்துக் காவல்துறைக்கு அனுப்பப்பட்டுள்ள அந்த மிரட்டல் செய்தியில் நடிகர் பணத்தைச் செலுத்த தவறினால் அவர் கொல்லப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மிரட்டல் செய்தி கிடைத்ததைத் தெடார்ந்து, மும்பை வோர்லி காவல்துறையினர் அடையாளம் தெரியாத நபர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக, செவ்வாய்க்கிழமை நடிகர் சல்மான் கான் மற்றும் என்சிபி (அஜித் பவார்) எம்.எல்.ஏ.வும், மறைந்த பாபா சித்திக்கின் மகனுமான ஜீஷன் சித்திக்குக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக, 20 வயது இளைஞர் ஒருவரை பொலிஸார் நொய்டாவின் செக்டார் 39ல் வைத்து கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர் மொகம்மது தாய்யப் என்று தெரியவந்தது. அவர், குர்ஃபான் கான் என்றும் அழைக்கப்படுகிறார். அவர், சல்மான் கான் மற்றும் ஜீஷன் சித்திக் இருவருக்கும் கொலை மிரட்டல் விடுத்ததுடன் பணம் கேட்டும் மிரட்டியுள்ளார்.

முன்னதாக கடந்த அக்டோபர் 12ஆம் திகதி தசரா கொண்டாட்டத்தின் போது, ஜீஷன் சித்திக்கின் அலுவலகத்துக்கு முன்பாக, பாபா சித்திக் பட்டாசு வெடித்துக் கொண்டிருக்கும் போது சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் கொல்லப்பட்ட மறுநாள் அவரது கொலைக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுக் கொண்டது.

சல்மான் கானுடன் நெருங்கிப் பழகியதால் அவர் கொல்லப்பட்டதாக அவர்கள் தெரிவித்திருந்தனர். பாபா சித்திக் கொலைத் தொடர்பாக இதுவரை 15 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவது இது முதல் முறை இல்லை.

Mithu

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே